பாகிஸ்­தானில் பட்டம் விடு­வ­தற்கு தடை சட்­டத்தை மீறியோர் பொலி­ஸாரால் கைது

0 641

வட­கி­ழக்கு பஞ்சாப் மாகா­ணத்தில் பட்டம் விடு­வ­தற்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடையை மீறிய 150 இற்கும் மேற்­பட்டோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் இவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் இளை­ஞர்கள் எனவும் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை பொலிஸ் பிரிவும் உள்ளூர் ஊட­கங்­களும் தெரி­வித்­தன.நாட்டின் இரண்­டா­வது பெரிய நக­ரமும் பண்­பாட்டு கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இட­மு­மான லாகூ­ரி­லேயே அதி­க­ள­வான கைதுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் பேச்­சா­ள­ரொ­ரு­வரை மேற்­கோள்­காட்டி லாகூர் நியூஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மாகாண அர­சாங்கம் பசந்த் அல்­லது பட்­ட­ம்­விடும் விழா­வுக்­கான தடை நீக்­கப்­ப­டு­வ­தாக கடந்த டிசம்பர் மாதம் அறி­வித்­தது. எனினும் பொது­மக்­க­ளி­னதும், ஊட­கங்­க­ளி­னதும் அழுத்­தங்கள் கார­ண­மாக மீண்டும் தடை அமு­லுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. பட்டம் விடு­வ­தி­லி­ருந்து மக்கள் தவிர்ந்து நடந்­து­கொள்ள வேண்டும். அல்­லது சட்ட நட­வ­டிக்­கை­யினை சந்­திக்கத் தயா­ராக இருக்க வேண்டும் என பொலிஸ் தரப்பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வசந்த காலத்தை வர­வேற்கும் இந்த விழா இந்­தி­யா­விலும் பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்­திலும் பிர­தா­ன­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. 2007 ஆம் ஆண்டு சிறு­வர்கள் உட்­பட நூற்­றுக்­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து இவ்­வி­ழா­வுக்கு தடை விதிக்­கப்­பட்­டது. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்­டு­களில் பகு­தி­ய­ளவில் இவ்­வி­ழா­வுக்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டது.

தடை­வி­திக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், பட்டம் விடு­வதை அதி­கா­ரி­களால் முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. ஏனெனில் பட்டம் பறக்க விடு­வதை விரும்பும் இளை­ஞர்கள், கைதுகள் மற்றும் உயி­ரி­ழப்­புக்கள் மத்­தி­யிலும் கடந்த 11 ஆண்­டு­களாக இதில் ஈடு­பட்டே வரு­கின்­றனர்.

இறப்­புக்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தி­யி­லேயே பட்டம் விடும் விழா அதன் பூர்­வீக இட­மான லாகூ­ரி­லி­ருந்து பாகிஸ்­தானின் ஏனைய பகு­தி­க­ளுக்கும் பிர­ப­ல்ய­ம­டைந்­தி­ருந்­தது.

பட்டம் விடும் போட்­டியின் போது உலோ­கத்­தி­னா­லான கூரான பொருட்கள் பட்டம் கட்டப் பயன்­ப­டுத்­தப்­படும் நூலினால் சிறு­வர்­களின் கழுத்­த­றுக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டமை நாடு முழு­வதும் கொதிப்­பினை ஏற்­ப­டுத்­தி­ய­தோடு, முக்­கிய நக­ரங்­களில் இப் போட்­டி­களை அர­சாங்கம் தடை­செய்ய நிர்ப்­பந்­தித்­தது.

பட்­டம்­விடும் போட்­டிகள் முன்னாள் ஜனா­தி­பதி பர்வேஸ் முஷர்ரப் காலத்தில் அதி­யுச்ச நிலையில் காணப்­பட்­டது. 2004 – 2008 காலப் பகு­தியில் சர்­வ­தேச நிகழ்­வாக அதனை மாற்றியிருந்தார்.

இந்த விழாக்கள் லாகூரை பண்பாட்டு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக தரமுயர்த்தியதோடு அங்குள்ள மக்கள் குறித்த மாதம் முழுவதும் தங்கள் வீட்டுக் கூரைகளை பட்டம் விடுவதற்காக வாடகைக்கு விடுமளவிற்கும் வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.