மதூஷ் போன்று மகேந்திரன், உதயங்கவையும் கைது செய்ய சர்வதேசத்தை நாடியுள்ளோம்

சபையில் பிரதமர் ரணில் தெரிவிப்பு

0 617

இலங்­கையின் ஒற்றர் தகவல் மூல­மாக மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட போதை­பொருள் கடத்தல் கும்­பலை பிடித்­ததை போலவே அர்ஜுன் மகேந்­திரன், உத­யங்க வீர­துங்க விட­யத்­திலும் சர்­வ­தேச பொலிஸ் உத­வியை கோரி­யுள்ளோம் என சபையில் தெரி­வித்த பிர­தமர், மாகந்­துரே மதூஷ் கைது­செய்­யப்­பட்­டாலும் கூட அவர் விட­யத்தில் துபாய் நீதி­மன்றே தீர்­மானம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று பிர­த­ம­ருக்­கான கேள்வி நேரத்தின் போது, போதைப்­பொருள் கடத்­தல்­கா­ர­ரான மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட கும்­பலை எமது ஒற்றர் தக­வ­லுடன் துபாய் பொலிஸ் கைது­செய்­துள்­ளது, அதேபோல் அர்ஜுன் மகேந்­திரன், உத­யங்க வீர­துங்க ஆகி­யோரை ஏன் கைது­செய்ய முடி­யா­துள்­ளது என ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நலிந்த ஜய­திஸ்ஸ கேள்வி எழுப்­பினார். இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர்,

பாதாள உலகக் குழு மற்றும் போதைப்­பொருள் கடத்தல் உள்­ளிட்ட கடத்­தல்­கா­ரர்கள் வெளி­நா­டு­களில் மறைந்து வாழ்­கின்ற நிலையில் அவர்­களை கைது செய்ய வழ­மை­யாக நாம் சர்­வ­தேச பொலிஸ் மூல­மாக சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்து அவர்­களின் உத­வி­களை பெற்று கைது செய்வோம். சில நாடு­க­ளுடன் இலங்கை செய்­துள்ள இரு­நாட்டு ஒப்­பந்­தங்கள் இருப்பின் அதனை அடிப்­ப­டை­யாக வைத்து வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடாக பேச்­சு­வார்த்தை நடத்தி கைதி­களை கொண்­டு­வ­ருவோம்.

பாதாள உலகக் குழு மற்றும் போதைப்­பொருள் கடத்தல் உள்­ளிட்ட  குற்­றங்­க­ளுடன்  தொடர்­பு­பட்ட  மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட  குற்­ற­வா­ளிகள்  துபாய் பொலி­சாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எமது புல­னாய்வு ஒற்றர் தக­வல்கள் மூல­மாக அவர்­களை துபாயில் கைது செய்­துள்­ளனர். அதேபோல் தான் அர்ஜுன் மகேந்­திரன், உத­யங்க வீர­துங்க ஆகியோர் குறித்தும் நாம் அறி­வித்­துள்ளோம். நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் சர்­வ­தேச நாடு­களில் கைது செய்யும் நபர்கள் குறித்து அங்­குள்ள நீதி­மன்­றமே தீர்­மானம் எடுக்கும். மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட குற்­ற­வா­ளிகள் தொடர்பில் துபாய் நீதி­மன்­றமே தீர்­மானம் எடுக்கும் எனக் குறிப்­பிட்டார்.

இந்த விவ­காரம் குறித்து ஒழுங்­குப்­பி­ரச்­சினை எழுப்­பிய எதிர்க்­கட்சி உறுப்­பினர் உதய கம்­மன்­பில:- மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட கும்­பலை கைது செய்­துள்ள நிலையில் இலங்கையின் இராஜதந்திர கடவுசீட்டு வைத்துள்ள அரச அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அவர் யார் என கூற முடியுமா என சபையில் கேள்வி எழுப்பினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.