அரசியல் அழுத்தங்களாலேயே ஞானசார தேரர் விடுவிக்கப்படவில்லை

போராட்டத்தை தொடர்வோம் என்கிறது பொதுபலசேனா

0 657

பொது­பல சேனாவின் பொதுச் ­செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு கடந்த தேசிய சுதந்­திர தினத்­தன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது மன்­னிப்பு வழங்­கா­மைக்கு அர­சியல் அழுத்­தங்­களே கார­ண­மாகும். என்­றாலும் அவ­ரது விடு­த­லைக்­காக பொது­ப­ல­சேனா அமைப்பு உட்­பட பௌத்த அமைப்­புகள் தொடர்ந்தும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கும் வகை­யி­லான போராட்­டங்­களை நடத்தும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

ஞான­சார தேரரின் விடு­தலை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘கொடிய யுத்­தத்­தி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்­கா­கவும், தாய்­நாட்­டுக்­கா­கவும், பௌத்­தத்­துக்­கா­கவும் குரல் கொடுத்த ஞான­சார தேரரை விடு­விக்­கும்­படி மகா­நா­யக்க தேரர்கள், சிவில் சமூக அமைப்­புகள், இந்து சம்­மே­ளனம், முஸ்­லிம்கள் என பலர் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்­கை­களை முன்­வைத்தும் இது­வரை ஜனா­தி­பதி அவ­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­ய­வில்லை.

சுதந்­திர தினத்­தன்று அவர் விடு­தலை செய்­யப்­ப­டுவார் என முழு நாடும் எதிர்பார்த்­தி­ருந்து ஏமாற்­றப்­பட்டு விட்­டது. ஞான­சார தேரரின் விடு­த­லைக்­கான போராட்­டங்­களை நாம் கைவி­டப்­போ­வ­தில்லை.

இது தொடர்பில் மீண்டும் பொது மக்­க­ளையும், மகா­நா­யக்க தேர­ர்களையும் தெளி­வு­ப­டுத்­த­வுள்ளோம். அவ­ருக்கு விடு­தலை கிடைக்­கும்­வரை எமது போராட்­டங்கள் தொடரும் என்றார்.

இதே­வேளை சிங்கள ராவய, ராவணாபலய மற்றும் சிங்களே அபி ஆகிய அமைப்புகளும் ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.