பால்மா விவகாரம்: முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை

ஹலால் சான்றிதழ் பேரவை

0 671

இலங்­கைக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா வகை­களில் பன்­றிக்­கொ­ழுப்போ அல்­லது வேறு கலப்­ப­டங்­களோ சேர்க்­கப்­பட்­டில்லை. எனவே முஸ்­லிம்கள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா கலப்­ப­டங்­க­ளற்ற தூய்­மை­யான பால்மா என்­பதை சர்­வ­தேச மற்றும் லக்டோ கலப்­ப­டங்கள் அடங்­கி­யுள்­ள­னவா என்­பது தொடர்பில் கண்­ட­றிந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர்  ரிசாத் பதி­யுதின் மற்றும் பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன ஆகியோர் நுகர்வோர் அதி­கார சபையின் பணிப்­பாளர் நாய­கத்­துக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்கள்.

கைத்­தொழில் மற்றும் வர்த்­தக பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன இறக்­கு­மதி செய்­யப்­படும் சில பால்­மாக்­களில் பன்­றிக்­கொ­ழுப்பு, மரக்­கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்­படம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளதால் இது தொடர்பில் உட­ன­டி­யாக ஆய்­வு­களை மேற்­கொள்­ளு­மாறு நுகர்வோர் அதி­கார சபையைக் கோரி­யுள்ளார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் நுகர்வோர் அதி­கார சபையின் பணிப்­பாளர் நாயகம்  எம்.எஸ்.எம். பௌஸரைத் தொடர்பு கொண்டு வின­விய போது அவர் “விடி­வெள்ளி” க்கு பின்­வ­ரு­மாறு கருத்து தெரி­வித்தார்.

வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் கலப்­படம் உள்­ள­தாக நுகர்வோர் அதி­கார சபைக்கு இது­வரை முறைப்­பா­டுகள் எதுவும் கிடைக்­க­வில்லை. இவ்­வாறு கலப்­ப­டங்கள் செய்­யப்­பட்ட பால்மா இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தாக செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்றில் பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன தெரி­வித்­த­தை­ய­டுத்தே அறிந்து கொண்டோம்.

இறக்­கு­மதி செய்­யப்­படும் சில பால்மா வகை­களில் கலப்­படம் இருப்­ப­தாக முறைப்­பா­டுகள் பாரா­ளு­மன்றில் தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தும் அமைச்­சரும், பிர­தி­ய­மைச்­சரும் வேண்­டிக்­கொண்­ட­த­னை­ய­டுத்தும் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால் மா வகை­களை ஆய்வு செய்­வ­தற்­காக வெளி­நாட்டு ஆய்வு கூடங்­களைத் தொடர்பு கொண்­டுள்ளோம். தேசிய ரீதியில் உள்ள ஆய்வு கூடங்­களில் அதி­ந­வீன தொழில்­நுட்ப வச­திகள் இல்­லா­மை­யி­னாலே சர்­வ­தேச ஆய்வு கூடங்­களை நாட­வேண்­டி­யுள்­ளது.

நாங்கள் தேசிய ரீதியில் முயற்­சி­களை மேற்­கொண்டோம்.  ஆனால்  உள்ளூர் ஆய்­வு­கூ­டங்கள் நவீன தொழில்­நுட்ப வச­திகள் இல்லை எனத் தெரி­வித்­தன.

சர்­வ­தேச ஆய்வு கூடத்தில் பால்மா வகை­களின் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு கலப்­ப­டங்கள் உள்­ளன என கண்டு பிடிக்­கப்­பட்டால் குறிப்­பிட்ட பால் மா நிறு­வ­னங்­க­ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மனித பாவனைக்குதவாத பால்மா வகை என்றால் தடைசெய்யப்படும். கிடைக்கப்பெறும் சர்வதேச ஆய்வுகூட அறிக்கை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.