முஸ்லிம் சமூ­கத்தை சீண்டும் முயற்­சி­க­ளுக்கு பலி­யா­காதீர்

அமைச்சர் ரிஷாட் தெரி­விப்பு

0 599

30 வருட யுத்தம் முடிந்து நாட்­டில் ­அ­மைதி மீண்டும் ஏற்­பட்­டுள்ள தற்­போ­தைய சூழ்­நி­லையில், மற்­றொரு  சிறு­பான்­மை­யி­னரை சீண்டி அவர்­களை தேவை­யில்­லாமல் வம்பிற்கு இழுக்கும் செயற்­பா­டு­க­ளுக்கு நாம் பலி­யாகி விடக்­கூ­டா­தென்று அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

நாத்­தாண்­டிய, தும்­மோ­தர முஸ்லிம்  வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற வரு­டாந்த  இல்ல விளை­யாட்டு போட்­டியில்  பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அமைச்சர்  கூறி­ய­தா­வது,

நாம் எந்த வித­மான சச்­ச­ர­வுக்கும் செல்­லாமல் இருந்­த­போதும் எங்­களை வேண்­டு­மென்றே பிரச்­சி­னைக்­கா­ரர்­க­ளாக காட்­டு­கின்ற ஒரு செயற்­பாடு  அல்­லது  ஒரு சிலரால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற  சில தவ­று­களை முழுச் சமு­தா­யத்­தி­னதும் தவ­று­க­ளாக சித்­தி­ரிக்கும் செயற்­பாடு தற்­போது மிகவும் திட்­ட­மிட்டு, நாசூக்­காக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. நமது சமூ­கத்­த­வர்­களை பிழை­யா­ன­வர்­க­ளாக காட்­டு­வதில் சில ஊட­கங்­களும் வரிந்து கட்­டிக்­கொண்டு நிற்­கின்­றன. இதன் மூலம் நமது இளை­ஞர்­களை ஆத்­திர மூட்­டச்­செய்­வதே  அவர்­களின் இலக்­காக இருக்­கின்­றது. இந்த தரு­ணத்­திலே நாம் நிதா­ன­மாக சிந்­திக்க வேண்­டிய நிலை­யிலும் தூர­நோக்­குடன் செயற்­பட வேண்­டி­ய  ­கட்­டத்­திலும்  இருக்­கின்றோம்.

இந்த  நிலையில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, சமூகம் சார்ந்த சிவில் அமைப்­புகள், முஸ்லிம் சமூக அர­சியல் கட்­சிகள் தமது கருத்து வேறு­பா­டு­களை களைந்து எதிர்­நிலைச் செயற்­பா­டு­களை எவ்­வாறு எதிர்­நோக்­கு­வது? மற்றும் சமூ­கத்தை எந்த வகையில் வழி­ந­டாத்­து­வது? என்­பது தொடர்பில் திட்­ட­மிட்டு செய­லாற்றி வரு­கின்­றது.

ஜனா­தி­ப­தியோ, பிர­த­மரோ நமக்கு  ஏற்­பட்­டுள்ள, ஏற்­ப­டப்­போ­கின்ற ஆபத்­து­களைத் தீர்ப்­ப­தற்­காக வலிந்து தமது நேரத்தை ஒதுக்கி விமோ­சனம் பெற்றுத் தரு­வார்கள் என்று நாம் எதிர்­பார்க்க முடி­யாது. அவ்­வாறு நாம் எண்­ண­வு­மில்லை. அவர்­க­ளுக்கு நாம் வழங்­கு­கின்ற அழுத்­தங்கள் மூலமே எமது பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்ள முடியும் என நம்­பு­கின்றோம். அதனை நாங்கள் இயன்­ற­ளவு சரி­யாக செய்தும் வரு­கின்றோம்.

பாட­சா­லையின் அதிபர் ஸாஹிர் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் முன்னாள் மாகா­ண­சபை உறுப்­பினர் ரியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, சிலாபம் நகரசபை உறுப்பினர் சட்டத்தரணி சாதிகுல் அமீன், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பெர்னாண்டோ புள்ளே மற்றும் டாக்டர் இல்யாஸ் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.