முஸ்லிம் தனியார் சட்ட விவ­காரம்: சலீம் மர்­சூபும், ஜெஸீமா இஸ்­மா­யிலும் பேசி இறுதி தீர்­மா­னத்­திற்கு வர­வேண்டும்

உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி தெரி­விப்பு

0 601

அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா சபை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ள­ வேண்­டிய திருத்­தங்­களில் உம்மத்தின் நன்மை கருதி பல விட்டுக்­கொடுப்பு­களைச் செய்துள்­ளது.  இதே­வேளை வை.எம்.எம்.ஏ. அமைப்பு தயா­ரித்­துள்ள சட்­டத்­தி­ருத்த சிபா­ரி­சு­களும் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்­ட­வை­யா­கவே அமைந்­துள்­ளன. எனவே முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்­தி­ருத்த சிபா­ரிசுக் குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபும், குழுவின் அங்­கத்­த­வர்­களில் ஒரு­வ­ரான ஜெஸீமா இஸ்­மா­யிலும் கலந்­து­ரை­யாடி இறுதித் தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

வை.எம்.எம்.ஏ.யினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான அறிக்கை நேற்று முன்­தினம் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்­தி­யி­டமும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பா­வி­டமும் கைய­ளிக்­கப்­பட்­டது.

சிபா­ரிசு அறிக்­கையை வை.எம்.எம்.ஏ யின் தேசியத் தலைவர் எம்.என்.எம்.நபீல், தேசிய பொதுச் செய­லாளர் சஹீட் எம்.ரிஸ்மி, தேசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான தலைவர் கே.என்.டீன் மற்றும் சட்­டத்­த­ர­ணி­க­ளான ஜாவித் யூசூப், சபீர் சவாத், அஷ்ரப் ரூப், காலித் எம்.பாரூக் ஆகியோர் அடங்­கிய குழு கைய­ளித்­தது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்­தி­யிடம் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்­தி­ருத்த சிபா­ரி­சுகள் தொடர்பில் வின­வி­ய­போதே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், சட்­ட­தி­ருத்த சிபாரிசு குழுவில் உல­மா­ச­பை­யுடன் ஓய்­வு­பெற்ற நீதி­ப­திகள் ஏ.டப்­ளியூ.ஏ.சலாம், மக்கி மொஹமட், கலா­நிதி எம்.ஏ.சுக்ரி, சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான மர்ஹூம் சிப்லி அஸீ-ஸ், பாயிஸ் முஸ்­தபா, நத்வி பஹா­வுதீன், பஸ்லத் ஆப்தீன் ஆகியோர் உடன்­பட்டு சிபா­ரி­சு­களை முன்­வைத்­துள்­ளார்கள்.

கடந்த 9 வரு­ட­கா­ல­மாக நாட்டின் அதி­சி­றந்த உல­மாக்கள் மற்றும் புத்­தி­ஜீ­விகள், சட்­ட­வல்­லு­நர்­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொண்டே பாயிஸ் முஸ்­த­பாவின் தலை­மையில் சிபா­ரி­சுகள் முன்­வைக்­கப்­பட்­டன.

பெண்கள் பாதிக்­கப்­ப­டு­வதை இல்­லாமற் செய்ய வேண்டும் என்­ப­தற்­காக ‘மத்தா’ (நஷ்­ட­ஈடு) பெண்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென சிபா­ரிசு செய்­துள்­ளது. பெண்கள் பாதிப்­புக்­குள்­ளாகும் விட­யங்­களில் நியா­ய­மான தீர்வு வழங்கும் வகையில் சிபா­ரி­சுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தின் கீழ் அமையும் நிர்வாக கட்டமைப்பு சிறந்ததாக இருக்க வேண்டும். பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் விடயங்களில் ஷரீஆவுக்கு உட்பட்ட திருத்தங்கள், திருத்தப்பட வேண்டிய விடயங்கள் ஷரீஆவை மீறி இடம்பெறக்கூடாது என்பதையே நாம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.