சமூக சீரழிவுக்கு வித்திடும் கருக்கலைப்பு

0 2,052

மேற்­கத்­தய சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் பர­வ­லான ஒன்­றாக மாறிப்­போன விட­யங்­களில் கருக்­க­லைப்பும் பிர­தான இடத்தை வகிக்­கின்­றது. மதச் சார்­பற்ற கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் நாடு­களில் ஒரு கருவைக் கொல்­வது என்­பது சர்­வ­சா­தா­ரண விடயம். இதன்  மூலம் திரு­ம­ணத்­திற்கு அப்­பாற்­பட்ட உற­வுகள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­துடன் தனி மனித சுதந்­திரம் என்ற பெயரில் தவ­றான நடத்­தை­களும் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன.

கருக்­க­லைப்பு எனப்­ப­டு­வது தாயி­னு­டைய கரு­வ­றையில் இருந்து கருவை நீக்­கு­வ­தாகும் என்­பதே அதற்­கான மொழி­யியல் ரீதி­யான கருத்­தாகும். பிர­சவ காலம் நிறை­வ­டை­வ­தற்கு முன்னர் கருப்­பை­யி­லி­ருந்து கருவை வெளி­யேற்­று­வதே கருக்­க­லைப்பு என இஸ்­லா­மிய அறி­ஞர்கள் வரை­ய­றுக்­கின்­றனர்.

இலங்­கையில் கருக்­க­லைப்பு சட்­டத்­துக்கு முர­ணான அம்சம் என்ற போதிலும் ஒரு நாளைக்கு 750 –1000 வரை­யான சட்ட விரோத கருக்­க­லைப்­புகள் நடை­பெ­று­வ­தாக அண்­மைய ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. உலகம் முழு­வ­திலும் வரு­டாந்தம் ஐம்­பது இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட கருக்­க­லைப்­புகள் நடை­பெ­று­கின்­றன. பல நாடு­களில் கருக்­க­லைப்பை அங்­கீ­க­ரித்து சட்டம் இயற்­றப்­பட்­டுள்­ளது. ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், இந்­தியா, பூட்டான், இலங்கை போன்ற நாடு­களில் கருக்­க­லைப்­புக்கு எதி­ராக இறுக்­க­மான சட்டம் நடை­மு­றையில் உள்­ளது.

இலங்­கையில் கருக்­க­லைப்புச் சட்டம்

தென்­னா­சி­யாவை எடுத்­துக்­கொண்டால் கருக்­க­லைப்புச் சட்டம் தொடர்பில் கடு­மை­யான வரை­ய­றை­களைப் பேணும் நாடு இலங்கை ஆகும். பூட்­டானில் பாலியல் வல்­லு­றவு அல்­லது சிறுவர் துஷ்­பி­ர­யோகம் போன்ற கார­ணங்­களால் கருக்­க­லைப்பு செய்து கொள்­ளலாம் என அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவில் பொரு­ளா­தார பிரச்­சினை அல்­லது சமூக கார­ணி­க­ளுக்­காக வேண்டி கருக்­க­லைப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் 1883 இல் அறி­முகம் செய்­யப்­பட்ட குற்­ற­வியல் நடை­முறை சட்­டத்தின் 303 ஆவது பிரிவில் இலங்­கையின் கருக்­க­லைப்புச் சட்டம் தொடர்­பாக விளக்­கப்­பட்­டுள்­ளது. இந்தக் கருக்­க­லைப்புச் சட்­டத்தின் மூலம் கர்ப்பம் அல்­லது குழந்தைப் பிறப்பு தாயின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பத்தில் மாத்­திரம் கருக்­க­லைப்பு செய்­வ­தற்கு அவ­காசம் உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சட்ட ஆணைக்­கு­ழுவின் மூலம் நீதி­மன்ற நிய­மங்­களை ஆய்வு செய்யும் போது கற்­ப­ழிப்பு, தகாத புணர்ச்சி மற்றும் பிறப்பு முதல் இருக்­கின்ற இயற்­கைக்கு மாறான நிலையில் கர்ப்பம் தரித்தல் தொடர்பில் மருத்­துவ ரீதி­யான கட்­டுப்­ப­டுத்தல் ஒன்றை நடை­மு­றைப்­ப­டுத்த சட்ட ரீதி­யான பொறி­முறை ஒன்று வேண்டும் என பல்­வேறு அழுத்தக் குழுக்­களால் கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் கருக்­க­லைப்பு செய்து கொள்ளும் பெண்­களில் 90% ஆன­வர்கள் திரு­ம­ண­மான பெண்­க­ளாவர். வறுமை, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு போன்ற கார­ணங்­களைக் காட்டி சட்­ட­வி­ரோ­த­மாக கருக்­க­லைப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இலங்­கையின் கர்ப்­பிணிப் பெண்­களின் மரண வீதத்தில் 12.5% மர­ணங்கள் சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்­பினால் ஏற்­ப­டு­கி­றது என்று கூறினால் நம்ப முடி­கி­றதா? மேலும், வரு­டாந்தம் 18 வய­திற்கு குறைந்த சுமார் 24,000 சிறு­மிகள் கருக்­க­லைப்பு செய்­வோருள் அடங்­கு­வ­தாக சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கருக்­க­லைப்­புக்கு அனு­ம­தி­ய­ளிக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சிகள் இலங்கை வர­லாற்றின் பல்­வேறு கால­கட்­டங்களில் கொண்­டு­வ­ரப்­பட்­டன. கருக்­க­லைப்பை அங்­கீ­க­ரிக்கும் சட்ட மசோ­தாவை அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­துள்ள போதும் அதனைப் பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வரும் திட்­டங்கள் தொடர் தோல்­வியில் முடிந்­துள்­ளன.

கருக்­க­லைப்புச் சட்­டத்தில் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என இலங்­கையின் பல்­வேறு பெண்கள் அமைப்­புகள் மற்றும் வைத்­திய நிபு­ணர்கள் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரு­கின்­றனர். குறைந்­த­பட்சம் கடு­மை­யான ஊனக்­கு­றை­பா­டு­டைய கருவை சுமக்கும் போதும், பாலியல் வன்­பு­ணர்வு கார­ண­மாக ஒரு பெண் கருத்­த­ரித்­துள்ள போது­மா­வது கருக்­க­லைப்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. கருக்­க­லைப்பை ஆத­ரிப்­ப­வர்கள் கருவை சுமப்­பதும் சுமக்­காமல் இருப்­பதும் ‘பெண்­ணு­ரிமை’ என வாதி­டு­கி­றார்கள்.

கடந்த காலங்­களில் கருக்­க­லைப்பு தொடர்­பாக பல திருத்­தங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தன. வன்­பு­ணர்­வினால் ஏற்­பட்ட கருவை கலைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­வது அதில் முதன்­மை­யா­ன­தாகும். பாது­காப்­பான கருக்­க­லைப்­புக்­கான தடை­களை இலங்கை நீக்க வேண்டும் என்று ஐ.நா. சபையின் பெண்­க­ளுக்­கெ­தி­ரான அனைத்து வகை­யான பார­பட்­சங்­க­ளையும் இல்­லாமல் செய்­வ­தற்­கான சம­வாயம் கோரி­யி­ருந்­தது. அதனைத் தொடர்ந்து பாலியல் வன்­மு­றையால் தரிக்கும் கர்ப்பம் மற்றும் மர­பணு பிறழ்­வுக்­குள்­ளான கருக்­களை குறித்த தாய் இணங்கும் பட்­சத்தில் கலைக்­கலாம் என்ற சட்டம் இலங்­கையில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.

குற்­ற­வியல் நடை­முறை சட்­டத்தின் கருக்­க­லைப்புச் சட்­டத்தில் மாற்­றத்தை கொண்­டு­வர 1995 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அப்­போ­தைய அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்­தத்தில் 3 சந்­தர்ப்­பங்­களில் கருவை கலைக்க சட்ட மசோதா முன்­வைப்­பட்­டது. வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கர்ப்பம் தரித்தல், நெருங்­கிய உற­வி­னரால் வன்­பு­ணர்­வுக்கு  உள்­ளாக்­கப்­பட்டு கர்ப்பம் தரித்தல், கடு­மை­யான ஊனக்­கு­றை­பாட்­டுடன் கரு வள­ருதல் ஆகிய சந்­தர்ப்­பங்­களே அவை­யாகும். எனினும், கத்­தோ­லிக்க திருச்­சபை, உல­மாக்கள் மற்றும் பல்­வேறு சம­யங்­க­ளுக்­குட்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்­களின் எதிர்ப்­புக்கு பின்னர் குறித்த திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­டாமல் திரும்பப் பெறப்­பட்­டது.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­காவின் ஆட்­சிக்­கா­லத்தில் ஜீ.எல். பீரிஸ் நீதி­ய­மைச்­ச­ராக இருந்தார். அந்­நே­ரத்தில் பல்­வேறு பெண்கள் அமைப்­புகள் விடுத்த அழுத்­தத்தின் பின்னர் கருக்­க­லைப்பை சட்­ட­பூர்­வ­மாக்­கு­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களும் அதற்­கான சட்ட மசோ­தாவும் உரு­வாக்­கப்­பட்­டது. இருந்த போதிலும் சம­யத்­த­லை­வர்­களின் கடும் எதிர்ப்­புக்குப் பின்னர் அந்த முயற்­சிகள் அர­சாங்­கத்­தினால் கைவி­டப்­பட்­டன.

பெண்­களின் இனப்­பெ­ருக்க சுகா­தாரம் மற்றும் குடும்­பத்­திட்­ட­மிடல் பற்றி பணி­யாற்றும் மாரி ஸ்டொப்ஸ் எனும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வனம் ஒன்று மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இயங்கி வந்­தது. இது பெண்கள் கருக்­க­லைப்பை மேற்­கொள்ள உயர் வைத்­திய வச­தி­களை வழங்­கி­யது. காலப்­போக்கில் இலங்கை சட்ட திட்­டங்­க­ளுக்கு முர­ணாக இயங்­கிய இந்­நி­று­வனம் சிராந்தி ராஜபக் ஷவின் ஆலோ­ச­னையின் பேரில் முடக்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தற்­போ­தைய அர­சாங்­கத்­திலும் கருக்­க­லைப்புச் சட்­ட­மாக்­கப்­பட வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்தும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. 2017 ஆம் ஆண்டில் முன்னாள் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவிடம் இந்தச் சட்டம் தொடர்­பாக பல்­வேறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன. இது தொடர்­பாக தீர்க்­க­மான முடி­வொன்றை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­தா­லோ­சித்து எடுக்க வேண்டும் என்ற அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்­தது.

இந்த விடயம் தொடர்­பான கலந்­து­ரை­யாடல் ஒரு குறு­கிய வட்­டத்­துக்குள் ஒடுக்­கப்­பட்­ட­தா­கவும் அர­சாங்­கத்­துக்கும் சுகா­தார அமைச்சின் கவ­னத்­துக்கும் கொண்டு செல்­லப்­ப­டாமல் தடுக்­கப்­பட்­ட­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­ட­வண்­ண­முள்­ளன. இதற்­கான தீர்­வுகள் இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை.

கருக்­க­லைப்பு ஏற்­ப­டுத்தும் பாதிப்­புகள்

வறுமை மற்றும் குழந்தை பெற்­றுக்­கொள்ள விருப்­ப­மின்மை கார­ண­மாக தமது கருவை கலைக்­கி­றார்கள். இதன்­போது பல்­வேறு சுகா­தாரப் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. கருக்­க­லைப்பு சட்­ட­வி­ரோதம் என்­பதால் நிபு­ணத்­துவம் இல்­லாத பொருத்­த­மற்ற நிலை­யங்­க­ளுக்கு செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கி­றது. இதன்­போது கருவை கலைக்க பொருத்­த­மில்­லாத ஆயு­தங்கள் பெண்­ணு­றுப்­பி­னூ­டாக செலுத்­தப்­ப­டு­வ­துண்டு. இதன்­போது அதிக இரத்­தப்­போக்கு ஏற்­படும். இதனால் குறித்த பெண் உயி­ரி­ழக்­கக்­கூ­டிய நிலை அல்­லது மீண்­டு­மொ­ரு­முறை கருத்­த­ரிக்க முடி­யாத அள­வுக்கு கர்ப்­பப்பை சேத­ம­டையும் நிலை ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­முண்டு.

கருக்­க­லைப்பு தொடர்­பாக இஸ்லாம்

இஸ்­லாத்தை பொறுத்­த­வ­ரையில் கருவை கலைப்­பது தொடர்­பாக உல­மாக்­க­ளி­டையே கருத்து வேறு­பா­டுகள் நில­வு­கின்­றன. கருக்­க­லைப்பு என்­பது கரு­விற்கு ரூஹ் கொடுக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரோ பின்­னரோ நடக்­கலாம். முஸ்லிம் அறி­ஞர்­களின் ஒரு­மித்த கருத்­தின்­படி ரூஹ் (உயிர்) கொடுக்­கப்­பட்ட பின்பு கருவை கலைப்­பது ஹரா­மாகும்.

குர்ஆன் மற்றும் சுன்­னா­வி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்ற ஆதா­ரங்­க­ளின்­படி 120 ஆவது நாளில் கரு­வுக்கு ரூஹ் கொடுக்­கப்­ப­டு­கி­றது.

120 ஆவது நாளில் தான் உயிர் ஊதப்­ப­டு­கி­றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். (ஆதாரம் –புஹாரி) என்ற ஹதீஸ் இதற்கு ஆதா­ர­மாக உள்­ளது.

கருத்­த­ரித்து 40 அல்­லது 42 நாட்­க­ளுக்குப் பிறகு கரு முதிர்ச்­சி­யாக வளர ஆரம்­பிக்கும். கை, கால், நகம் போன்ற உறுப்­புக்கள் இதன்­போது வளர ஆரம்­பிக்கும். இந்தச் சந்­தர்ப்­பத்தில் கருவை கலைப்­பது என்­பது மனித உயி­ருக்கு எதி­ரான தாக்­கு­த­லாகும். இதற்கு இரத்த ஈட்டுத் தொகை­யாக (குர்ரா) ஆண் அல்­லது பெண் அடி­மையை வழங்க வேண்டும். இது முழு மனி­த­னுக்கு கொடுக்­கப்­பட வேண்­டிய திய்­யாவில் பத்தில் ஒரு பங்­காகும்.

தகுதி வாய்ந்த மருத்­துவர் ஒரு­வரின் பரிந்­து­ரையின் பேரில் கரு தாயின் கரு­வ­றையில் இருப்­பது தாய் – சேய் இரு­வ­ருக்கும் ஆபத்து எனத் தெரி­விக்­கப்­படும் பட்­சத்தில் கரு உரு­வான ஆரம்ப கட்­டத்தில் அதனை கலைக்­கலாம். இது போன்­ற­தொரு சந்­தர்ப்­பத்தில் கரு­வுக்கு ரூஹ் கொடுக்­கப்­பட்ட பின்­னரோ, முன்­னரோ அதனை கலைப்­ப­தற்கு இஸ்­லாத்தில் அனு­மதி உண்டு.

எவ்­வா­றா­யினும் ஏனைய சந்­தர்ப்­பங்­களில் கருக்­க­லைப்பை மேற்­கொள்­ளுதல் தொடர்­பாக பல்­வேறு கருத்து முரண்­பா­டுகள் அறி­ஞர்­க­ளி­டையே நில­வு­கின்­றன.

மேற்­கத்­தைய உலகில் சுமார் 45% குழந்­தைகள் சட்­ட­த்திற்கு முர­ணான முறையில் பிறந்த குழந்தைகள் ஆகும். ஒரு சில நாடுகளில் இந்தத் தொகை 70% வரை உயர்ந்து செல்கின்றது. அவ்வாறான நாடுகளில் கருக்கலைப்பு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற நாடுகளில் ஆண், பெண் சமநிலையை சீராக பேணவும் ஏனைய உணர்வு ரீதியான காரணங்களுக்காகவும் கருக்கலைப்பு சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இதில் சமயத்தலைவர்களுடைய பங்களிப்பும் உள்ளடங்குகிறது.

எமது நாட்டையும் நாட்டு முஸ்லிம்களையும் எடுத்துக்கொண்டால் மேற்கத்தைய நாடுகளைப்போன்று விபசாரம் மற்றும் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு என்பன பரவலாக இல்லை. எனவே, கருக்கலைப்புகள் மருத்துவ அடிப்படையில் தாயினுடைய உயிரைக் காப்பதற்காகவே செய்யப்படுகின்றன.

மேற்கத்தைய நாடுகளின் தலைமையிலான பலதேசங்கள் இலங்கை சமூகத்தின் குடும்ப அமைப்பை சிதைப்பதற்காக இலங்கையிலும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன. மேலும், முஸ்லிம் நாடுகளிலும் இது சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் குடும்பக்கட்டமைப்பை தகர்த்தெறிந்து முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெகுதூரமாக்க  வேண்டுமென்ற முயற்சிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.