அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி தேர்தலே தீர்வு

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் சுட்டிக்காட்டு

0 691

நாட்டில் நிலவும் அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு ஒரே தீர்வு ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தே­யா­கு­மென ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரி­வித்தார்.

திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­ரானின் முயற்­சியால் கந்­த­ளாயில் அமைக்­கப்­ப­ட­வுள்ள வீட­மைப்புத் திட்­டத்­துக்­கா­ன­அ­டிக்கல் நடும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்,

52 நாள் அர­சியல் சூழ்ச்­சியை தொடர்ந்து தற்­போது ஏற்­பட்­டுள்ள ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தனி அரசு மூலம் நாட்டு மக்­க­ளுக்குப் பல நிவா­ர­ணங்­களை வழங்க எதிர்­பார்த்­துள்ளோம். கம்­பெ­ர­லிய திட்­டத்தின் இரண்டாம் கட்டம் இந்த மாத­ம­ளவில் ஆரம்­பிக்­கப்­படும். நாடு முழு­வதும் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவால் உதா­கம்­மான வீட்டு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அண்­மைய பாட­சாலை சிறந்த பாட­சாலை திட்டம் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த வரவு – செலவு திட்டம் மூலம் பொது­மக்­க­ளுக்கு மேலும் பல சலு­கை­களை வழங்க எதிர்­பார்த்­துள்ளோம். ஆகவே இப்­போதே மக்­களின் மனதை வெற்­றி­கொள்ளும் திட்­டங்­களை எமது அரசு முன்­னெ­டுக்க ஆரம்­பித்­துள்­ளது என எண்­ணு­கிறேன்.

இவ்­வாறு அரசின் நட­வ­டிக்­கைகள் காணப்­பட்­டாலும் நாட்டில் காணப்­பட்ட அர­சியல் நெருக்­கடி இன்னும் முடி­வுக்கு வர­வில்லை. அர­சியல் நெருக்­கடி நிறை­வுக்கு வர­வேண்­டு­மானால் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வதே எமக்­குள்ள ஒரே வழி. புதிய ஜனா­தி­பதி ஒருவர் தெரிவு செய்யப்­பட்டு அவரின் அதி­கா­ரத்தின் கீழ் மாகாண சபை, பாரா­ளு­மன்ற தேர்தல் நடாத்­தப்­படின் மாத்­தி­ரமே இந்த நெருக்­க­டியை முடி­வுக்கு கொண்­டு­வர முடியும்.

மஹிந்த – மைத்­திரி கூட்­ட­ணிக்கு இடையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வதில் தற்­போது ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலை­யி­னா­லேயே அவர்கள் மாகா­ண­சபை தேர்­தலை முதலில் நடத்த கோரு­கின்­றனர். தான்தான் அடுத்த வேட்­பாளர் என்ற நோக்­கி­லேயே ஜனா­தி­பதி செயற்­ப­டு­கிறார். இப்­போது ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிக்கு இதுவே மூல காரணம்.

அடுத்த பக்கம் ராஜபக் ஷ சகோ­த­ரர்­க­ளுக்­கி­டையில் யார் வேட்­பாளர் என்­பதில் போர் மூண்­டுள்­ளது. கோத்­தா­பய, பசி­லுக்கு அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரிமை காணப்­ப­டு­வதால் அவர்­க­ளுக்கு போட்­டி­யி­டு­வதில் சிக்­க­லுள்­ளது. ஷமலை பெரும்­பா­லானோர் விரும்­ப­வில்லை. மேலும் குமார வெல்­கம போன்­ற­வர்கள் வெளிப்­ப­டை­யா­கவே ராஜபக் ஷ சகோ­த­ரர்­களை எதிர்க்­கின்­றனர்.

இவ்­வாறு ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்ய முடி­யாமல் அவர்கள் மாகாணசபை பற்றி கதைக்கின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியில் மக்கள் மனதை வென்ற வேட்பாளர் ஒருவர் உள்ளார். ஆகவே அவரின் தலைமையில் எதிர்வரும் அனைத்து தேர்தல்களையும் வெற்றிகொண்டு எமது திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.