மாகா­ண­சபைத் தேர்தலை தாம­திக்கக் கூடாது

0 770

தேர்தல் நாட்டு மக்­களின் ஜன­நா­யக உரி­மை­யாகும். எமது நாட்டில் இந்த உரிமை அர­சி­ய­ல­மைப்பு ஊடாக மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக விழு­மி­யங்­களைப் பேணும் ஜன­நா­யக நாடான இலங்­கையில் மக்­களின் இந்த உரிமை உரி­ய­கா­லத்தில் வழங்­கப்­ப­டாது ஏன் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது என்ற கேள்வி மக்கள் மத்­தியில் விமர்­ச­னங்­களைக் கிளப்­பி­யுள்­ளது.

இந்த வருடம் தேர்தல் வரு­ட­மாக அமை­ய­வுள்­ளது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்ளார். மாகா­ண­சபைத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்­தல்­களை நாம் எதிர்­நோக்­கி­யுள்ளோம். எந்தத் தேர்­தலை முதலில் நடத்த வேண்டும் என்­பதில் கூட அர­சியல் கட்­சிகள் முரண்­பட்ட கருத்­து­களைக் கொண்­டுள்­ளன.

தேர்­த­லொன்று நடத்­தப்­பட வேண்­டு­மென்றால் முதலில் மாகாண சபைத் தேர்­தலே நடத்­தப்­பட வேண்டும். ஏனென்றால் மூன்று மாகாண சபை­களின் பத­விக்­காலம் பூர்த்­தி­யாகி இன்­றைக்கு ஒரு­வ­ருடம் 7 மாதங்கள் கடந்­து­விட்­டன. சப்­ர­க­முவ, கிழக்கு மற்றும் வட மத்­திய மாகாண சபை­களின் பத­விக்­காலம் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் காலா­வ­தி­யாகி அன்று முதல் அம்­மா­காண சபைகள் ஆளு­நரின் நிர்­வா­கத்தின் கீழ் இயங்கி வரு­கின்­றன. இதே­வேளை, மத்­திய வடமேல் மற்றும் வடக்கு மாகாண சபை­களின் பத­விக்­காலம் கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் முதல் காலா­வ­தி­யாகி அவையும் ஆளு­நர்­களின் பொறுப்பில் விடப்­பட்­டுள்­ளன.

எஞ்­சி­யி­ருப்­பது மூன்று மாகா­ண­ச­பை­களே. தெற்கு மற்றும் மேல் மாகாண சபை­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் பூர்த்­தி­யா­க­வுள்­ளது. அத்­தோடு ஊவா மாகா­ணத்தின் பத­விக்­காலம் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்­துடன் பூர்த்­தி­யா­க­வுள்­ளது.

மாகா­ண­சபைத் தேர்தல் தொடர்ந்தும் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­ற­மைக்கு எல்லை நிர்­ணய அறிக்­கையே கார­ண­மாகக் கூறப்­பட்டு வரு­கி­றது. கலப்பு தேர்தல் முறைக்கு பாரா­ளு­மன்­றத்தில் கையு­யர்த்­தி­ய­வர்கள் இன்று அந்தத் தேர்தல் முறையை எதிர்க்­கி­றார்கள். பழைய தேர்தல் முறை­யான விகி­தா­சார தேர்தல் முறையின் கீழே தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்­கி­றார்கள்.

கே. தவ­லிங்கம் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய ஆணைக்­குழு தனது அறிக்­கையை 4 மாதங்­க­ளுக்குள் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரிடம் கைய­ளித்­தது. அந்த அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்டு படு­தோல்­வி­ய­டைந்­தது.

இத­னை­ய­டுத்து அவ்­அ­றிக்­கையை மீளாய்வு செய்­வ­தற்கு மீளாய்வுக் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு அக்­கு­ழுவும் தற்­போது செய­லி­ழந்­துள்­ளது. இவ்­வா­றான சூழ்­நி­லை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மாகா­ண­சபைத் தேர்தல் எதிர்­வரும் மே 31 ஆம் திக­திக்கு முன்பு நடத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் அனைத்து மாகாண சபை­களின் தேர்தல் ஒரே தினத்தில் நடத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் அமைச்­ச­ர­வையில் பிரே­ர­ணை­யொன்­றினை முன்­வைத்­துள்ளார். விகி­தா­சார முறையின் கீழே தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்ளார்.

இதே­வேளை, மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் பூர்த்­தி­யா­வதால் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்­துக்குப் பின்பே மாகாண சபைகள் அனைத்­தி­னதும் தேர்தல் ஒரே தினத்தில் விகி­தா­சர முறையின் கீழ் நடத்­தப்­ப­டு­மெனத் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு மாகா­ண­சபைத் தேர்தல் தொடர்ந்தும் இழுத்­த­டிப்புச் செய்­யப்­ப­டு­கி­றது. விகி­தா­சார தேர்தல் முறையில் தேர்தல் நடத்­து­வ­தற்கு மாகா­ண­சபைத் தேர்தல் சட்டம் திருத்­தப்­பட வேண்டும். 2/3 பெரும்­பான்மை பெறப்­ப­ட­வேண்டும். இதற்கு கால அவ­காசம் தேவை என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறோம். ஆனால் இவ்­வாறு பேசிப் பேசியே காலம் வீண­டிக்­கப்­ப­டு­கின்­றமை தவிர்க்­கப்­பட வேண்டும். தேர்­தலை நடத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக செயலில் இறங்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கமொன்றின் பணியாகும்.

சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவத்துக்கு சவாலாக உள்ள கலப்பு தேர்தல் முறையை நீக்கி விகிதாசார தேர்தல் முறைக்கான சட்டத் திருத்தங்கள் விரைவு படுத்தப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் காலதாமதப்படுத்தப்படக்கூடாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.