9 மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்

மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர் அல­வ­து­வல தெரி­விப்பு

0 522

மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுத்த வாக்­கு­று­திக்கு அமை­வாக, ஒன்­பது மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்தல் ஒரே தினத்தில் இடம்­பெறும். ஆனால் மாகாண சபை தேர்­தலை புதிய கலப்பு  முறையில் நடத்­து­வதா அல்­லது விகி­தா­சார முறையில் நடத்­து­வதா என்­பது குறித்து இன்னும் இறுதித் தீர்­மானம் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சி. அல­வ­து­வல தெரி­வித்தார். இது தொடர்பில்  கட்சித் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. அனைத்துக் கட்­சி­களும் பெரும்­பான்­மை­யினை பெற்­று­கொ­டுத்தால் மாத்­தி­ரமே பழைய முறையில் நடத்­து­வ­தற்­கான சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்றி கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மீண்டும் விகி­தா­சார முறையில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்கு அனைத்து கட்­சி­களும் இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில், விகி­தா­சார  முறையில் மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிப்­பது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில், 2015ஆம் ஆண்டு ஆட்­சியைப் பொறுப்­பேற்கும் போது ஒரே சந்­தர்ப்­பத்தில் ஒன்­பது மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லையும் நடத்­து­வ­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தோம். ஆனால் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்னும் அர­சாங்க தரப்பில் எவ்­வித பேச்­சு­வார்த்­தை­களும் மேற்­கொள்­ள­வில்லை. விகி­தா­சார முறையில் நடத்­து­வதா அல்­லது கலப்பு முறையில் நடத்­து­வதா என்­ப­திலும் சிக்கல் நிலையே காணப்­ப­டு­கின்­றது. தேர்­தலை நடத்தும் முறை­தொ­டர்பில் இறுதித் தீர்­மா­னங்கள் எதுவும் எட்­டப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் கட்சித் தலை­வர்­களை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­ட­லொன்றை மேற்­கொள்­ள­வ­தற்­கான அனு­ம­தி­யி­னையும் கோரி­யி­ருந்தோம். ஆனால் அதற்­கான அனு­ம­தியும் இன்னும் கிட்­ட­வில்லை. இருப்­பினும் பழைய விகி­தா­சார முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கட்­சிகள் தனிப்­பட்ட ரீதியில் இணங்­கி­யி­ருந்த போதிலும் அது தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­புக்கள் எதுவும் கிடைக்­க­வில்லை.

அவ்­வாறு, மீண்டும் பழைய முறையில் மாகாண சபை தேர்தல் நடத்­து­வ­தற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மான அனு­ம­தி­யினை பெற்­று­கொள்ள வேண்­டு­மானால் அனைத்துக் கட்­சி­களும் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். ஐக்­கிய தேசிய கட்­சியால் மாத்­திரம் தனித்து இதனை நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் அனைத்து கட்­சி­க­ளி­னதும் பங்­க­ளிப்பு இருந்தால் மாத்­தி­ரமே சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றி­கொள்ள முடியும்.

இருப்பினும், ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தும் நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. ஒருசிலர் ஜனாதிபதி தேர்தலுடன் இணைத்து மாகாண சபை தேர்தலையும் நடத்துமாறு கூறி வருகின்றனர். அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.