இலங்கை வானொலி செய்தி பணிப்­பா­ள­ராக ஹாரிஸ் நிய­மனம்

0 593

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் புதிய செய்திப் பணிப்­பா­ள­ராக ஜுனைத் எம் ஹாரிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்கள சம­ர­வீ­ரவின் பணிப்­பு­ரைக்­க­மைய இந்த நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான நிய­மனக் கடி­தத்தை இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தலைவர் சிதி பாரூக்­கி­ட­மி­ருந்து ஜுனைத் எம் ஹாரிஸ் கடந்த வியா­ழக்­கி­ழமை பெற்றுக் கொண்டார்.

புத்­தளம் தாராக்­கு­டி­வில்லு பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர், கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் சமூ­க­வியல் துறையில் கலை­மா­ணிப்­பட்­டத்தைப் பெற்­றுள்­ள­துடன் சர்­வ­தேச உற­வுகள் தொடர்­பான கற்­கையில் முது­மாணிப் பட்­டத்­தையும் பெற்­றுள்ளார்.

மூன்று மொழி­க­ளிலும் நிபு­ணத்­துவ அறி­வு­பெற்ற இவர் செய்தி ஊட­க­வி­யலில் 15 வருட அனு­பவம் பெற்­ற­வ­ராவார். இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் பல்­வேறு சேவை­க­ளிலும் நிகழ்ச்­சி­களைத் தயா­ரித்து வழங்­கி­வரும் இவர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.