பாகிஸ்தானில் இவ்வாண்டில் போலியோவால் பாதித்த முதல் குழந்தை அடையாளம் காணப்பட்டுள்ளது

0 573

பாகிஸ்­தானில் இவ்­வாண்டின் முத­லா­வது போலியோ பாதிப்­புக்­குள்­ளான குழந்தை ஆப்­கா­னிஸ்­தா­னுடனான எல்­லைக்­க­ருகில் அமைந்­துள்ள பஜாஉர் பழங்­குடி மக்கள் வாழும் ஹைபர் பாக்ஹ்­துங்ஹ்வா மாவட்­டத்தில் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இதில் 11 மாதக் குழந்­தை­யொன்றின்  உடல் இயக்கம் ஸ்தம்­பி­த­ம­டைந்துள் ளதாக பாகிஸ்­தானின் போலியோ ஒழிப்பு நிகழ்ச்சித் திட்­டத்தின் தலைவர் பாபர் அத்­தாவின் தெரி­வித்தார். பஜாஉர் மாவட்­டத்­தி­லி­ருந்து கடந்த மூன்று மாதங்­களில் ஆறு போலியோ பாதிப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன. கராச்சி, குயெட்டா, லாஹூர், பெசாவார் மற்றும் பைஸ­லாபாத் உள்­ளிட்ட பல பெரிய நக­ரங்­களில் வீரி­ய­மிக்க போலியோ வைரஸ் சுழற்சி காணப்­ப­டு­வ­தா­கவும், அது எமது சிறு­வர்­க­ளுக்கு ஆபத்­தா­னது எனவும் அத்தா தெரி­வித்தார்.

உலகில் போலியோ வைரஸ் தாக்கம் காணப்­ப­டு­கின்ற மூன்று நாடு­களுள் ஒன்­றாக பாகிஸ்தான் காணப்­ப­டு­கின்­றது. ஏனைய இரு நாடுகள் ஆப்­கா­னிஸ்­தானும் கென்­யா­வு­மாகும். பாகிஸ்­தா­னுக்­காக உலக சுகா­தார நிறு­வ­னத்­தினால் விதிக்­கப்­பட்­டுள்ள இந் நோய்த்­த­டுப்­புக்­கான பயணக்கட்­டுப்­பா­டுகள் தொடர்ந்தும் செயற்­ப­டுத்­தப்­படுகின்­றன.

2014 ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னுக்கு பய­ணிக்கும் அனை­வரும் போலியோ தடுப்பு மருந்து ஏற்­றி­ய­மைக்­கான சான்­றி­தழை வைத்­தி­ருக்­க­வேண்டியது கட்­டாயம் என உலக சுகா­தார நிறு­வனம் அறி­வித்­தி­ருந்­தது.

பாகிஸ்­தானின் பல பகு­தி­களில் போலியோ தடுப்பு மருந்­த­ளிக்கும் அதி­கா­ரி­கள் கிளர்ச்­சிக்­கு­ழுக்­களைச் சேர்ந்த ஆயு­த­தா­ரி­களால் அடிக்­கடி இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றனர். போலி­யோ­வுக்கு எதி­ரான பிர­சாரம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மேற்கு நாடு­களின் சூழ்ச்சி எனவும் காண்­பிக்­கப்­ப­டு­கின்­றது. பல சந்­தர்ப்­பங்­களில் போலியோ தடுப்பு மருந்­தேற்றம் செய்யும் பணி­யா­ளர்கள் குறிப்­பாகப் பெண்­க­ளுக்கு மரண அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 2016 ஏப்ரல் மாதம் கராச்­சியில் போலியோ தடுப்பு மருந்­தேற்றும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாது­காப்பு வழங்கிக் கொண்­டி­ருந்த ஆறு பொலிஸார் துப்­பாக்­கி­தா­ரி­களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த 2012 டிசம்பர் மாதம் தொடக்கம் தடுப்பு மருந்தேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 88 அதிகாரிகள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.