சுதந்­திர தினத்­தை­யொட்டி 545 கைதி­க­ளுக்கு இன்று விடு­தலை

0 554

இலங்­கையின் 71 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு இன்று 545 சிறைக்­கை­தி­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட்டுள்­ள­தாக சிறைச்­சா­லைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் வெலிக்­கடை சிறைச்­சா­லையில் 41 சிறைக்­கை­தி­களும், அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் 46 பேரும், பள்­ளே­கல சிறைச்­சா­லையில் 36 பேரும் உள்­ள­டங்­க­ளாக 29 சிறைச்­சா­லை­சா­லை­க­ளி­லுள்ள சுமார் 545 சிறைக்­கை­திகள் இன்று விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

சிறு குற்­றங்­க­ளுக்­காகக் கைது செய்­யப்­பட்டு சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­ப­வர்கள் மற்றும் அப­ராதம் செலுத்த முடி­யாமல் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­ப­வர்கள் இன்று விடு­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரது விடு­தலை தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் அறிவிக்கப்படவில்லை யென சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.