ஆபிரிக்காவின் தெற்கில் அமைந்துள்ள அங்கோலாவில் மொத்த சனத்தொகை கிட்டத்தட்ட 30 மில்லியனாகும். இவர்களுள் 75 வீதமானவர்கள் கிறிஸ்தவர்கள். இவர்களுள் பெரும்பான்மையினர் கத்தோலிக்கர்களாவர்.
அங்கோலாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 800,000 ஆகும் என்று அங்கோலா இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் டேவிட் அல்பேர்டோ ஜா தெரிவிக்கின்றார்.
அங்கோலாவில் காணப்படும் சமயம், தேசத்தில் காணப்படும் சில யதார்த்த நிலைமயினால் பாதிப்புக்களைக் கண்டுள்ளது. இந்த நாட்டின் அரசியல் வரலாறு, சோசலிஸ சித்தாந்தம் மற்றும் பல ஆண்டுகால சிவில் யுத்தம் என்பனவற்றால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னைய ஆட்சி பொதுவாக சுதந்திரம் தொடர்பிலும் குறிப்பாக இஸ்லாம் தொடர்பிலும் திறந்த மனதுடன் செயற்படவில்லை. இதன் விளைவாக முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. சமயம் தொடர்பான மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினை சமயம் தொடர்பான சட்டமாகும்.
2004 ஆம் அண்டு தொடக்கம் அரசினால் ஒரு சமயம் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் கையொப்பமிட வேண்டும் என்பதோடு, நாட்டின் ஆள்புலப் பிரதேசத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கு மேலதிகமாக, குறித்த சமயத்தின் மதவழிபாடு அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் குறைந்தது 60,000 பேர் கையொப்பமிட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தினால் சட்டரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்பதாக அல்பேர்டோ ஜா தெரிவித்தார்.
தங்கோலாவில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் மறுசீரமைப்புக்களின் நிலைமைகளைப் பார்க்கும்போது, அரசுக்கும் சமூகத்திற்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதை முஸ்லிம் மக்கள் உணர்கின்றார்கள் என நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
சமய உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தந்திரமே சட்டரீதியான தேவைப்படுகளாகும் எனத் தெரிவிக்கும் சட்டத்தரணிகள், இந்தச் செயற்பாடு சமயம் சார்ந்த உரிமை மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரானதாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.
சட்டரீதியான அங்கீகாரம் குறைவாக இருந்தபோதிலும் பல தசாப்தங்களாக முஸ்லிம்கள் தமது மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றி வருகின்றனர், அங்கோலாவில் தற்போது 60 பள்ளிவாசல்கள் இருக்கின்றன என அங்கோலா இஸ்லாமிய சமய வழிகாட்டல் அமைப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் மொஹமட் சாலெஹ் சாபு தெரிவித்தார்.
-Vidivelli