ஜமால் கசோக்ஜிக்கு நிகழ்ந்ததென்ன?

0 950
  • ஏ.ஜே.எம். நிழாம்

அண்­மையில் சர்­வ­தேச சஞ்­சி­கை­யான Time (டைம்) கடந்த ஆண்டின் கதா­நா­யகர் என ஜமால் கஷோ­க்ஜியை பெய­ரிட்­டி­ருக்­கி­றது. காரணம் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் மத்­தி­யிலும் அச்­ச­மின்றி உண்­மையை எழுதி பலி­யா­ன­தற்­கே­யாகும். இவ­ரோடு இன்னும் சில ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர்­களும் அச்­சஞ்­சி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

ஜமால் கஷோ­­க்ஜியின் கொலை குறித்து சவூதி செய்யும் விசா­ரணை ஐ.நா. வுக்கு திருப்­தி­ய­ளிக்­க­வில்லை. அது மென்­மேலும் பார­பட்­ச­மற்ற சர்­வ­தேச விசா­ர­ணை­யையே கோரிக்­கொண்­டி­ருக்­கி­றது. இவ­ரது படு­கொலை துருக்­கிக்குள் நிகழ்ந்­தி­ருப்­பதால் சந்­தேக நபர்கள் அனை­வ­ரையும் தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு துருக்­கிய அதி­கா­ரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு­கின்­ற­போதும் சவூதி அரசு அதற்கு இணங்கும் நிலைப்­பாட்டில் இல்லை என்றே தெரி­கி­றது.

எனினும் அமெ­ரிக்­காவின் உள­வுத்­து­றை­யான சி.ஐ.ஏ.யும், செனட் சபையும் இந்த படு­கொ­லையில் சவூதி இள­வ­ரசர் சல்­மான் தொடர்­பு­பட்­டுள்ளார் என்றே உறு­தி­யாக நம்­பு­கின்­றன. ஆனால் சவூ­திய அதி­கா­ரிகள் ஆரம்­பத்­தி­லி­ருந்தே இவ­ருக்கு இதில் தொடர்பில்லை என்றே கூறி வரு­கின்­றார்கள். ஜமால் கஷோ­­க்ஜியை மீண்டும் சவூ­திக்குக் கொண்டு வரு­மாறே சந்­தேக நபர்­க­ளிடம் உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது என்­கி­றார்கள். எனினும் இதில் சம்­பந்­தப்­பட்ட அக் குழுவின் உயர் அதி­கா­ரிகள் வழங்­கப்­பட்ட அதி­கா­ரத்­தையும் மீறிச்­சென்று இந்த படு­கொ­லையைச் செய்­தி­ருக்­கி­றார்கள் என்­கி­றார்கள்.

இது திட்­ட­மிட்ட படு­கொலை. இதற்குப் பின்னால் குறிப்­பி­டத்­தக்க முக்­கிய நபர்கள் இருக்­கி­றார்கள் எனும் தக­வல்கள் அப்­போது பர­வ­லாக வெளி­யா­கின. அத்­த­கை­யோரில் ஒருவர் இள­வ­ரசர் சல்­மானின் ஒரு நெருங்­கிய தோழர். மற்­றவர் ஜமால் கஷோ­க்­ஜியின் சட­லத்தை துண்டு துண்­டாக வெட்ட உத­விய வைத்­தியர். இதற்­கென சவூ­தி­யி­லி­ருந்து துருக்­கிக்கு வந்த 15 பேரில் அவரும் சேர்க்­கப்­பட்­டி­ருந்தார். சட­லத்தை அரி­வ­தற்­காக அவர் விசேட கூரிய உப­க­ர­ணத்­தையும் கொண்டு வந்­தி­ருந்­த­தாக துருக்­கியின் ஊட­கங்கள் அப்­போது குறிப்­பிட்­டி­ருந்­தன. அத்­தோடு சவூதி உளவுப் பிரிவின் உயர் அதி­கா­ரியின் பெயரும் கூட இப்­ப­டு­கொ­லை­யோடு சம்­பந்­தப்­ப­டுத்­தப்­பட்டு பர­வ­லாகப் பேசப்படுவதைக் கேட்க முடிந்­தது.

எனினும், வழக்குத் தொட­ரப்­பட்­டி­ருப்­பது 11 பேருக்கு எதி­ரா­கவே என்­கி­றார்கள். இவர்­க­ளிலும் சிலர் இல்லை என்­கி­றார்கள். இதனால் சவூதி பொறுப்­பேற்­றுள்ள விசா­ரணை இப்­போது சந்­தே­கத்­துக்கு உட்­பட்­டி­ருக்­கி­றது. காரணம் எப்­படி வழக்கு தொட­ரப்­பட்­டி­ருக்­கி­றது, யார் மீது வழக்கு தொட­ரப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதைப் பற்றி பெயர், ஊர் குறிப்­பி­டா­தி­ருக்­கி­றார்கள். இதனால் பல­ருக்கு இத்­த­கைய விசா­ர­ணையில் அறவே நம்­பிக்கை இல்­லா­தி­ருக்­கி­றது.

சில நாட்­க­ளுக்கு முன் ஆரம்ப விசா­ர­ணை­ மக்­க­ளுக்குத் தெரி­யா­ம­லேயே நிகழ்ந்­தது. பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வ­ருக்குப் பதி­லாக அவ­ரது உத்­த­ர­வுக்குப் பணிய வேண்­டிய கீழ் மட்­டத்தைச் சேர்ந்த சிலரைப் பலி­கொ­டுத்து முக்­கி­ய­மா­னோரைத் தப்­ப­வைக்கும் முறையே அதில் இருந்­த­தாகக் குற்­றச்­சாட்டும் எழுந்­தது.

சவூ­தியின் உயர்­மட்­டத்­தினர் இக்­கொ­லையில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கையில் அத்­த­கை­யோ­ருக்கு சார்­பாக அங்கு நீதித்­துறை இருக்­கையில் நீதிக்­கான சுயா­தீனம் எப்­படி அமையும்? இது முன்பே அங்­குள்ள நிலை எனவே இப்­ப­டு­கொலை குறித்து பார­பட்­ச­மற்ற விசா­ரணை நிகழும் என எதிர்­பார்க்க முடி­யாது என்று பல­த­ரப்­பி­னரும் குறிப்­பி­டு­கி­றார்கள். எனினும் இம்­மாத ஆரம்­பத்தில் வழக்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் மறு விசா­ரணை எப்­போது என்­ப­தற்­கான அறி­விப்பு எதுவும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கி­றது.

ஜமால் கஷோ­க்ஜி படு­கொலை செய்­யப்­பட்ட விட­யத்தில் பல­ரது சந்­தே­கத்­துக்கும் இலக்­கான முக்­கிய நபர் இள­வ­ரசர் சல்மான் என்­பதே இதற்­குக்­கா­ர­ண­மாகும். அவ­ரது உத்­த­ரவு எது­வு­மின்றி சவூ­தி தூது­வ­ரா­ல­யத்­துக்குள் இத்­த­கைய படு­கொலை எதுவும் நிகழ வழி­யில்லை என்­பதே பல­ரதும் அபிப்­பி­ரா­ய­மாகும். அதை நிரூ­பிப்­பது போலவே மேற்­படி விசா­ர­ணையில் இள­வ­ரசர் சல்­மானைப் பற்றி எத்­த­கைய குறிப்­புக்­களும் இல்லை என்­கி­றார்கள். இதனால் பல தரப்­பி­னரும் இதை அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

முடிவில் இதுபற்றி சல்மான் இள­வ­ர­ச­ருக்கு எதி­ராக சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரித்­ததால் இதற்கு ஏதேனும் செய்­தாக வேண்டும் எனும் இக்­கட்­டான நிலைக்கு அவர் ஆளா­கி­யி­ருக்­கிறார். அதன்­படி தான் 11 பேருக்கு எதி­ரான விசாரணையில் நீதி­பதி 6 பேருக்கு விடு­தலை வழங்கி 5 பேருக்கு மட்­டுமே மரண தண்­டனை விதித்­தி­ருக்­கிறார். முதல் சுற்றில் 4 பேர் தவிர்க்­கப்­பட்டு, இரண்டாம் சுற்றில் விசா­ர­ணையின் பெயரால் மேலும் 6 பேர் தவிர்க்­கப்­பட்டு, ஈற்றில் 5 பேருக்கு மட்­டுமே தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆக 15 குற்­ற­வா­ளி­களில் 10 பேர் தப்ப வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். உல­குக்கு எதை­யேனும் காட்ட வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் 5 பேரையும் எஞ்ச வைத்­தார்­களோ? மூன்றாவது சுற்றில் என்ன நிகழும்? காலப்­போக்கில் உலகம் இதை மறந்­ததும் இவர்­க­ளுக்கும் மன்­னிப்­புக்­கான நன்­ன­டத்தை எனும் பெயரால் குற்ற விலக்கு வழங்கி விடு­தலை அளித்து விடு­வார்­களோ? எனப் பலரும் வின­வு­கி­றார்கள்.

கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து ஜமால் கஷோ­க்ஜி தான் மணக்­க­வி­ருக்கும் துருக்­கிய பெண்­ணோடு துருக்­கி­யி­லுள்ள சவூ­தி கொன்சியூலர் காரி­யா­ல­யத்­துக்கு வருகை தந்து அந்த பெண்ணை வெளியே நிற்­கு­மாறு சொல்லி விட்டு மறு­ம­ணத்­துக்­கான தஸ்தா வேஜு­களைப் பெற உள்ளே சென்­றி­ருந்தார். எனினும் அவர் அதிக நேர­மாக வெளியே வர­வில்லை. உடனே அப்பெண் இது பற்றி துருக்­கிய அர­சிடம் அறி­வித்­ததும் துருக்கி உட­னடி விசா­ர­ணையை ஆரம்­பித்­தி­ருந்­தது. அதன் பிறகே நாட்­டுக்குள் 15 பேர் திருட்டுத் தன­மாக நுழைந்­து­விட்டுப் போனது தெரி­ய­வந்­தது. நிகழ்ந்­தவை யாவும் சிறிது சிறி­தாக அம்­ப­லத்­துக்கு வந்­தன.

நல்ல காலம் அந்தப் பெண் அந்த தூது­வ­ரா­ல­யத்­துக்குள் நுழை­ய­வில்லை. இல்­லா­விட்டால் சாட்­சியை மறைப்­ப­தற்­காக அந்த பெண்­ணையும் கொன்­றி­ருப்­பார்கள். இன்­னொரு வகையில் பார்த்தால் அந்த பெண் வெளியே நின்­ற­தால்தான் விடயம் துருக்­கிய அர­சுக்குத் தெரி­ய­வந்­தது.

இல்­லா­விட்டால் விடயம் மூடி மறைக்­கப்­பட்­டி­ருக்கும். தான் துண்டு துண்­டாக அரி­யப்­படும் அள­வுக்கு ஜமால் கஷோ­க்ஜி யாருக்கு என்­னதான் செய்தார். தந்தை வழியைத் துருக்­கி­யாகக் கொண்ட இந்த சவூதி அரே­பியர் சிறந்த எழுத்­தாளர். சவூதி அரசைக் கடு­மை­யாக எழுதி விமர்­சித்­த­தற்­காக அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாகி அமெ­ரிக்­காவில் குடி­யே­றினார். அங்கும் வாஷிங்டன் போஸ்ட் எனும் பத்­தி­ரி­கையில் இவ்­வாறு தொடர்ந்தும் எழுதி வந்­த­தா­லேயே சவூதி அரே­பி­யாவின் கோபத்­துக்காளானார் என்­பது இப்­போது உறு­தி­யா­கி­விட்­டது.

மாறாகப் பாதாளக் குழு­வைப்போல் உலக ரீதியில் இயங்கி நிரா­யுத பாணி­யான ஒரு தனி நபரைக் குழு­வாகச் சென்று படு­கொலை செய்து துண்டு துண்டாக அரிந்­தி­ருப்­பது மாபெரும் பாத­க­மாகும். உலக எழுத்­தா­ளர்­க­ளி­னதும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­னதும் நெஞ்­சங்­களில் ஜமால் கஷோ­க்ஜி சதா­கா­லமும் நிறைந்­தி­ருப்பார் என்­பதில் எள்­ள­ளவும் சந்­தே­க­மில்லை. இவர் ஒரு ஷஹீ­தாவார்.

பின்­வரும் கேள்­வி­க­ளுக்கு இது­வரை பதில்­களே இல்லை.

1) ஜமால் கஷோ­­க்ஜியை சவூ­திக்குக் கொண்டு வர உத்­த­ர­விட்­டது யார்?

2) ஏன் அவர் சவூ­திக்குக் கொண்டு வரப்­பட வேண் டும்?

3) அவர் துருக்கி வரு­வதைப் பற்றி முன்­கூட்­டியே உளவு கூறி­யது யார்?

4) இறை­மை­யுள்ள ஒரு நாட்­டுக்குள் முன்­ன­றி­விப்பு இல்­லாமல் அத்­து­மீறி நுழைந்­ததும், வெளி­யே­றி­யதும் சவூ­தியின் குற்றம் இல்­லையா?

5) நிரா­யு­த­பா­ணி­யான ஒரு­வரைக் கொல்ல 15 பேர் அனுப்­பப்­பட்­டது முக்­கிய கொலை­யா­ளிகள் துருக்­கிய அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து தாக்­குதல் வந்­தாலும் தப்பிச் செல்­லவா?

6) சவூ­திக்குள் இன்­னொரு நாட்­டினர் இப்­படி வந்து படு­கொலை செய்தால் அது என்ன நிலைப்­பாட்டை எடுக்கும்?

7) இள­வ­ரசர் சல்­மானின் நெருங்­கிய தோழரும், ஜமால் கஷோ­­க்ஜியின் சட­லத்தைத் துண்டு துண்­டாக வெட்­டிய வைத்­தி­யரும், உளவுப் பிரிவின் உயர் அதி­கா­ரியும் சட­லத்தை அரிந்த கூரிய கத்­தியும் பகரும் தக­வல்கள்  என்­னென்ன?

8) முதலில் அவ்­விதம் நிக­ழ­வில்லை என மறுத்த சவூதி பிறகு ஒப்புக் கொண்­டது ஏன்?

9) முதலில் பேச்­சு­வார்த்தை மட்டும் தான் நிகழ்ந்­தது பிறகு கைக­லப்­பாக மாறி அவர் இறந்தார் என ஏன் கூறப்­பட்­டது? தனி நபர் 15 பேருடன் மோத ஜமால் கஷோ­க்ஜி குங்பூ, கராட்டி, ஜூடோ எல்லாம் பயின்­ற­வரா?

10) உயி­ரோடு அரிந்­தார்­களா, கொன்ற பின் சட­லத்தை அரிந்­தார்­களா?

11) முழுச்­ச­ட­லமும் இருந்தால் விஷயம் அம்­ப­ல­மா­கி­விடும் என்­ப­தால்தான் ஒவ்­வொரு துண்­டு­க­ளையும் பொதி­களில் சுற்றி பல்­வேறு இடங்­க­ளிலும் வீசி­னார்­களா?

12) முகத்தைக் கொலை­யா­ளிகள் சிதைத்­தது ஏன், ஆள் அடை­யாளம் தெரி­யா­தி­ருப்­ப­தற்கா?

13) அவ­ச­ர­மாக முடிக்க வேண்­டிய காரியம் என்­ப­தற்­கா­கத்தான் தட­யங்கள் எதுவும் இல்­லா­தி­ருக்க இவ்­வா­றெல்லாம் செய்­தார்­களா?

14) துருக்கி நிரூ­பித்­ததன் பிற­குதான் சவூதி நிகழ்ந்­ததை ஏற்றுக் கொண்­டது. இது ஏன்?

15) தக்க விசா­ர­ணை­யின்றி இள­வ­ரசர் சல்­மா­னுக்கு குற்­ற­வி­லக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றதே இது ஏன்?

16) துருக்­கி­யி­லுள்ள சவூ­திய தூது­வ­ரா­ல­யத்தில் ஜமால் கஷோ­க்­ஜியும் கொலை­யா­ளி­களும் பேசிய உரை­யா­டல்கள் என்­னென்ன?

17) ஜமால் கஷோ­­க்ஜியின் கைகள் ஏன் வெட்­டப்­பட்­டன எழு­தி­ய­தற்­கா­கவா?

18) அவ­ரது கால்கள் ஏன் வெட்­டப்­பட்­டன? சவூ­தியை விட்டும் தப்பி ஓடி­ய­தற்­கா­கவா?

19) மூளை ஏன் சிதைக்­கப்­பட்­டது அறிவை அழித்­தொ­ழிப்­ப­தற்­கா­கவா?

20) அவ­ரது இதயம் ஏன் சிதைக்­கப்­பட்­டது? உயிரின் தட­யத்­தையே அழிப்­ப­தற்­கா­கவா?

உலக வர­லாற்றில் பல எழுத்­தா­ளர்கள் நஞ்­சூட்­டப்­பட்டும், குண்­டு­க­ளுக்கு இலக்­கா­கியும், துப்­பாக்கி சூடு­க­ளுக்கு இலக்­கா­கியும், நீரில் மூழ்­க­டிக்­கப்­பட்டும் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஆனால் ஜமால் கஷோ­க்ஜி துண்டு துண்­டாக அரி­யப்­பட்டுக் கொல்­லப்­பட்­டி­ருக்­கிறார். அத­னால்தான் உலகின் முதல்­தர சஞ்­சி­கை­யான டைம் அவரைக் கடந்த ஆண்டின் அதி­சி­ரேஷ்டர் என ஏற்றிப் போற்றிப் புகழ்ந்­தி­ருக்­கி­றது. உலகின் முதல்­தர ஊடகம் உலகின் அதி­சி­றந்த எழுத்­தா­ளரைப் புகழ்ந்­தி­ருப்­பதில் வியப்பு இல்லை. மனித ரீதியில் இதை அது நோக்­கி­யி­ருக்­கி­றது. மத, இன, மொழி, பிர­தேச, நாடு எனும் விட­யங்­க­ளி­லான கணிப்பு எது­வு­மின்றி இதை அது பார்த்­தி­ருக்­கி­றது. அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து பிர­சு­ர­மாகும் TIME (டைம்) எனும் இந்த ஆங்­கில சஞ்­சிகை தின­சரி இலட்­சக்­க­ணக்கில் அச்­சாகி உல­கெல்லாம் வியா­பித்­தி­ருக்­கி­றது.

எனினும் அதைப் போன்ற விற்­ப­னையும் பிர­சுரத் தொகையும் கொண்ட வாஷிங்டன் போஸ்ட் எனும் சஞ்­சி­கைதான் இந்தக் கொடூரப் படு­கொ­லையைப் பற்றி உல­கெல்லாம் அறியச் செய்­தது. அதன் பிறகு உலகின் எல்லா ஊட­கங்­களும் ஒன்­றுக்­கொன்று முந்திக் கொண்டு ஒரே­நாளில் உல­கெங்கும் அறியச் செய்­தன. அந்த வகை­யில்தான் கடந்த ஆண்டு ஒரே நாளில் உல­கெங்கும் அதி­க­மாகப் பேசப்­பட்ட ஒரே நபர் ஜமால் கஷோ­­க்ஜியே என்­றா­கிறார்.

இவர் சவூதி அர­சையும் இள­வ­ரசர் சல்­மா­னையும் பகி­ரங்­க­மாக விமர்­சித்து வந்­ததே இதற்குக் காரணம் என்­கி­றார்கள். அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து கொண்டு தாறு­மா­றாக எழு­தி­னாராம். இள­வ­ரசர் சல்­மானை மேலை­நா­டு­களில் தனது எழுத்­தாண்மை மூலம் இழி­வு­ப­டுத்­தி­யது அரச துரோ­கமாம்.

கருத்­தைக்­க­ருத்தால் எதிர்­கொள்ள முடி­யா­தோரே கத்­தியால் பதம் பார்த்­தி­ருக்­கி­றார்கள். அதனால் ஏற்­பட்ட விளைவு என்ன தெரி­யுமா? தற்­போது இள­வ­ரசர் சல்மான் உல­கத்தின் கடும் வெறுப்­புக்கு ஆளா­கி­யுள்ளார். விமர்­ச­னத்தில் இரு­வகை உண்டு. ஆக்க பூர்வ விமர்­சனம், அழிவு பூர்வ விமர்­சனம். இவற்றில் ஆக்க பூர்வ விமர்­சனம் இன்­றி­ய­மை­யா­த­தாகும். இத்­த­கைய விமர்­ச­னத்­துக்கு பதி­ல­ளிக்க எவரும் தயங்கக் கூடாது. விமர்­ச­னமே கூடாது என்­போர்தான் இதை எதிர்ப்­பார்கள். அழிவுபூர்வ விமர்­சனம் அறவே கூடாது. காரணம் அது அடுத்­த­வனை பழி கூறும் வகை­யிலோ அவ­னது செய்கை நிந்­திக்கும் வகை­யி­லோதான் பெரும்­பாலும் அமையும்.

எனினும் ஒரு­வனின் கொடூ­ர­மான செயற்­பா­டு­களை முன்­னி­றுத்தி ஆக்கபூர்வ விமர்­ச­னத்தை முன்­வைப்­பது எப்­படி எனும் கேள்­வியும் எழவே செய்­கி­றது. அதனால் தான் இள­வ­ரசர் சல்­மானின் தீர்மானங்களை எதிர்த்து ஜமால் கஷோ­க்ஜி அழிவு பூர்­வ­மாக விமர்­சித்­தி­ருக்­கிறார் என நினைக்­கிறேன். ஜமால் கஷோ­­க்ஜியின் பெயர் சரித்­தி­ரத்தில் நிலைக்­கின்ற வரை இள­வ­ரசர் சல்­மானின் பெயரும் பேசப்­படும்.

இப்­போது உலகம் இதில் நேர்­மை­யான தீர்ர்பை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றது. அது எப்­படிக் கிடைக்கும் அங்­குள்ள அரசர் மூலம் கிடைக்குமா? இல்லை அவரால் மகன் காக்கப்படலாம் எனும் கருத்தையே அனைவரும் தொனிக்கிறார்கள். சட்டமா அதிபர் நீதித்துறை, காவல் துறை ஆகியவற்றின் நிலை என்ன? மன்னராட்சியில் மூச்சும் விட முடியாது. அப்படியானால் சாட்சிகளற்ற ஜமால் கஷோ­க்ஜியின் மர்மப் படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டியோர் யார்?

இந்தக் குற்றத்தின் பின்னணியில் சவூதி இருப்பதாக துருக்கி சந்தேகிப்பதால் அதற்கு சவூதியின் விசாரணையில் நம்பிக்கையில்லை. அதனால்தான் அது சந்தேக நபர்களை விசாரணைக்கென தன்னிடம் ஒப்படைக்குமாறு சவூதியிடம் கோருகிறது. துருக்கிய பெண்ணைத்தான் ஜமால் கஷோ­க்ஜி மணக்கவிருந்ததால் அவரும் இதற்கு கடும் அழுத்தத்தை கொடுக்கிறார். அத்தோடு இப்படுகொலை துருக்கிக்குள் நிகழ்ந்திருப்பதால் இதை விசாரிக்கும் உரிமை தனக்கு இருப்பதாகவும் துருக்கி கருதுகிறது.

சந்தேக நபர்கள் துருக்கியிடம் கையளிக்கப்பட்டால் படுகொலை புரிந்ததற்கான குற்றத்தோடு முன்னறிவிப்போ அனுமதி கோரலோ இன்றி அத்துமீறி கும்பலாக வந்து போனதைப்பற்றியும், ஆயுதங்கள் கொண்டுவந்து போனதைப்பற்றியும் கூட துருக்கி விசாரிக்கவே செய்யும். ஒரு நாட்டின் பிரஜைகளை இன்னொரு நாட்டால் விசாரிக்க முடியாது என்றே சவூதி குறிப்பிடுகின்றது. அப்படியானால் அந்த நாட்டுக்குள் அத்துமீறி போய்ப்படுகொலை செய்து விட்டு வந்த பிரஜைகளை என்ன செய்வது? அரவணைப்பதா? குற்றவாளியே நீதிபதியாக முடியுமா?
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.