மூன்று பாக். பிரஜை உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டணை

நிறைவேற்றுவதற்கான சிபாரிசு வழங்கினார் சட்டமா அதிபர்

0 635

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று பாகிஸ்தான் நாட்டவர் மற்றும் மூன்று இலங்கையர்களின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டமா அதிபர் சிபாரிசு செய்துள்ளார்.

மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு சட்டமா அதிபரின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாகும். குற்றவாளிக்கு மேன்முறையீடு செய்வதற்கோ அல்லது விடுதலை பெற்றுக் கொள்வதற்கோ வேறு வழிமுறைகள் உள்ளனவா என்பது சட்டமா அதிபரினால் கவனத்திற் கொள்ளப்படும்.

இந்த நடைமுறைகளின் பின்பே சட்டமா அதிபர் குறிப்பிட்ட அறுவரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதை சிபாரிசு செய்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டவர்களின் மரண தண்டனையை இந்நாட்டில் நிறைவேற்ற சட்டத்தில் இடமில்லை எனச் சிறைச்சாலை சட்டப் பிரிவு தெரிவிக்கிறது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.