பயங்கரவாத்திற்கு நிதியளிப்பதை கட்டுப்படுத்துவதில் அசமந்தம் மற்றும் பணப் பரிமாற்றம் என்பன காரணமாக தமது அமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளுள் ஒன்றாக சவூதி அரேபியாவினை ஐரோப்பிய யூனியன் வரைவுப் பட்டியலில் ஐரோப்பிய ஆணைக்குழு சேர்த்துக்கொண்டுள்ளது.
சவூதி அரேபிய ஊடகவியாலாளர் ஜமால் கஷோக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமையினையடுத்து சர்வதேச சமூகத்தின் சவூதி அரேபியா மீதான இறுக்கமான அழுத்தங்கள் காரணமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் தற்போதைய பட்டியலில் ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், வட கொரியா உள்ளிட்ட 16 நாடுகள் பயங்கரவாத்திற்கு நிதியளிப்பு மற்றும் பணப் பரிமாற்றம் என்பவற்றில் அதீத அக்கறை செலுத்துவதாக செல்வந்த நாடுகள் தொடர்பான உலகளாவிய அமைப்பான நிதிச் செயற்பாட்டு செயலணியின் வகுதியின் அடிப்படையில் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன.
2017 ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய வகுதியினைப் பயன்படுத்தி குறித்த பட்டியல் கடந்த வாரம் இற்றைப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் சவூதி அரேபியாவும் அப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் இவ் விடயம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ஐரோப்பிய யூனியன் வட்டாரம் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத சவூதி அரேபிய வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
மேலும் சில நாடுகள் இறுதிப் பட்டியலில் உள்வாங்கப்படலாம் எனத் தெரிவித்த மற்றுமொரு ஐரோப்பிய யூனியன் அதிகாரி, சவூதி அரேபியா இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கவில்லை. காரணம், அது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பதாலும் அது மாற்றமடையலாம் என்பதனாலுமாகும்.
பட்டியலிலுள்ள நாடுகள் தொடர்பில் நான் எந்தக் கருத்தையும் வெளியிட விரும்பவில்லை. ஏனெனில், அவற்றில் மாற்றங்கள் ஏற்பட வாப்ப்புண்டென ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சவூதி அரேபிய அதிகாரிகள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
-Vidivelli
பயங்கரவாதத்தை உருவாக்கி, போஷித்து வளர்க்கும் முதல்தர நாடு அமெரிக்காவே.