இந்தோனேசியா வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

0 694

இந்தோனேசியா வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் நேற்று மற்றும் முன்தினம் பெய்த  கடும் மழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளனர், இனிநிலையில் குறைந்தது 40 பேர் பலியாகி இருக்கலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தெற்கு சுலாவேசியின் 10 மாவட்டங்களில் இருந்து 3400 இற்கும் கூடுதலானோரை பாடசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் தற்காலிகக் கூடாரங்களில் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன 25 பேரை தேடி வருகின்றதோடு. 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.