இலங்கை பணியாளர்கள் தொடர்பில் பொறுப்பின்றி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சவூதியிலுள்ள இலங்கை துதரகம் தெரிவிப்பு

0 705

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்கள் தொடர்பான செய்திகளை தனிப்பட்டவர்கள் அல்லது குழுவினர்கள் பொறுப்பில்லாமல் நெறிமுறையற்ற வகையில் காணொளிகள் மூலம் வெளியிட்டு வருகிறார்கள். இது போன்ற நடவடிக்கைகள் அவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் தற்போதைய செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைந்துள்ளன. என சவூதி அரேபியா ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறிப்பிட்ட காணொளியில் தோன்றிய பணியாளர்களை அவதானிக்கும் இலங்கையிலுள்ள அவர்களின் உறவினர்கள் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் இவ்வாறான காணொளிகளில் பதிவுகளைச் செய் பவர்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும். காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு முன்னர் இலங்கைத் தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அவற்றைப் பகிந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறோம்.

இலங்கை பணியாளர்களின் பிரச்சினைகளை நெறிப்படுத்தி தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு வருமாறு வேண்டுகிறோம். தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் தூதரகம் அவதானத்துடன் கையாளும். நாம் எமது நாட்டின் நலன்களைப் பாதுகாத்து அதற்கேற்பவே செயற்படுகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.