மூன்று மாதங்களில் கிழக்கு மக்களை திருப்திப்படுத்துவேன்

பக்கச்சார்பாக செயற்படமாட்டேன் என்கிறார் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

1 1,776
  • ஆங்­கி­லத்தில்: மிரு­துலா தம்­பையா
  • தமிழில்: ஏ.ஆர்.ஏ. பரீல்

கடந்த வெள்­ளிக்­கி­ழமை கிழக்கு மாகா­ணத்தின் தமிழ் பிர­தே­சங்­களில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. உங்­க­ளது நிய­ம­னத்­துக்கு எதி­ராக தமிழ் சமூகம் ஏன் செயற்­ப­டு­கி­றது?

முஸ்லிம் ஒருவர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டால் தமிழ் சமூ­கத்தைச் சேர்ந்த சிலர் அதனை எதிர்க்­கின்­றனர். குறிப்­பிட்ட ஹர்த்தால் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அதி­க­மான கடைகள் திறக்­கப்­பட்­டி­ருந்­தன. சிலரே பிரச்­சி­னைப்­பட்டுக் கொள்­கி­றார்கள். சிலரே கடை­களை மூடி­யி­ருந்­தார்கள். சிங்­க­ளவர், தமிழர் மற்றும் முஸ்­லிம்கள் ஆகிய மூன்று சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் தங்­க­ளது கடை­களைத் திறந்து வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். அவர்கள் ஹர்த்­தா­லுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. எனவே ஹர்த்தால் தோற்றுப் போய்­விட்­டது.

நான் அவர்­களை குற்றம் சுமத்­த­வில்லை. ஏனென்றால் கிழக்கு மாகா­ணத்தின் இன்­றைய நிலைமை இதுதான். தமிழ் சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டால் முஸ்லிம் சமூகம் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­யி­ருக்கும். அவர்கள் தமிழ் ஆளு­நர்­மீது நம்­பிக்கை கொள்ள மாட்­டார்கள். ஆளுநர் என்ற வகையில் எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தினைப் பிரயோகித்து கிழக்கு மாகாண சபையின் கீழ், உட­ன­டி­யாக செய­லகம் ஒன்­றினை நிறு­வ­வுள்ளேன். இந்த செய­ல­கத்தின் பணி ஒவ்­வொரு பிரச்­சி­னை­யையும் ஆராய்ந்து எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்தின் கீழ் அவற்றைத் தீர்த்து வைப்­ப­தாகும். இதன் மூலம் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை வளர்த்துக் கொள்ள முடியும். இன்­றைய சூழ்­நி­லையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்­வ­தை­விட சமூ­கங்­க­ளுக்­கி­டையில் உற­வுகள் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை பலப்­ப­டுத்­து­வதே எனது கட­மை­யாகும்.

Q  மாற்று சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­ப­டு­வதை பிற சமூ­கங்கள் விரும்­பு­வதில்லை என்­கி­றீர்கள்,  இதுவே கிழக்கின் இன்­றைய நிலைமை என்­கி­றீர்கள். ஏன் இப்­படிக் கூறு­கி­றீர்கள்?

யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இந்­தக்­கா­லப்­ப­கு­தியில் தமிழ், முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னைகள் அநேகம் இருக்­கின்­றன.

காணி, கலா­சாரம், பாட­சா­லைகள், தொழில்­வாய்ப்­புக்கள், அபி­வி­ருத்­திகள் எனப்­பி­ரச்­சினைகள் தீர்க்­கப்­ப­டா­துள்­ளன. இதனால் இரு சமூ­கங்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் பிரச்­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்கு, இது­வரை எவரும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அனைத்துப் பிர­தி­நி­தி­களும் ஒற்­று­மைக்கு முக்­கியம் கொடுத்­துள்­ளார்கள். அவர்­க­ளது பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாவிட்டால் அவர்கள் ஒன்­று­பட்டு வாழ்­வார்கள் என எதிர்­பார்க்க முடி­யாது

Q  கிழக்கில் நல்­லி­ணக்­கத்தை உறு­தி­செய்­வ­தற்கு மூன்று சமூ­கத்­தி­னதும் சம­ரச முயற்­சி­யா­ள­ராக செயற்­ப­டு­வீர்­களா?

எனது சமயம் இஸ்­லா­மாக இருந்­தாலும் ஆளுநர் என்ற வகையில் நான் பொது­வான மனிதன். கிழக்கில் அமைக்­க­வி­ருக்கும் செய­ல­கத்­துக்கு மூன்று சமூ­கத்­தி­லி­ருந்தும் ஒவவொரு பிர­தி­நி­தியை நிய­மிப்பேன். அவர்கள் தங்­க­ளது சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு செயற்­ப­டு­வார்கள். இந்த வகையில் நான் பொது­வா­ன­வ­னா­கவே இருப்பேன். செய­ல­கத்தின் மூல­மாக பிரச்­சி­னை­களை குறு­கிய காலத்­தினுள் தீர்ப்பேன். பிரச்­சி­னைகள் இனங்­கா­ணப்­பட்­டதும் ஆணை­யாளர் மற்றும் அதி­கா­ரிகள் ஊடாக எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கித்து தீர்த்து வைப்பேன்.

Q  நீங்கள் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டதும் உங்­க­ளுக்கு எதி­ராக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. நீங்கள் உங்கள் சமூ­கத்­துக்கு மாத்­திரம் உதவி செய்­வீர்கள். பிரச்­சி­னை­களின் போது பக்­க­சார்­பாக நடந்து கொள்­வீர்கள் என தெரி­விக்­கப்­ப­டு­வது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

நான் இப்­போது ஆளு­ந­ராக இருக்­கிறேன். என்னால் பக்­க­சார்­பாக செயற்­ப­ட­மு­டி­யாது. எனது கட­மையில் நான் பொது மனி­த­னா­கவே செயற்­ப­டுவேன். எனது கடமை பொது­வா­ன­தா­கவே இருக்கும். பக்­க­சார்­பாக இருக்­காது என நூறு வீதம் உறுதி செய்­கிறேன்.

நான் ஆளு­ந­ராக பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்­டதும் கிழக்கு மாகாண மக்கள் அனை­வரும் எனது சகோ­த­ரர்கள், சகோ­த­ரிகள், தாய்­மார்கள், தந்­தை­யர்கள், மகள்கள் மற்றும் மகன்கள் ஆவர்.

ஆளு­நர்கள் கொழும்­பி­லி­ருந்தே நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள். அவர்­களால் தமிழ்­பேச முடி­யாது. கிழக்கு மாகா­ணத்தில் 80 வீத­மா­ன­வர்கள் தமிழ் மொழி பேசு­ப­வர்கள். அவர்­களால் சிங்­களம் பேச முடி­யாது. என்னைப் பொறுத்­த­வ­ரையில் மூன்று மொழி­களிலும் பேச முடியும், தொடர்­பா­டல்­களைச் செய்ய முடியும்.

என்னால் மூன்று சமூ­கங்­களைச் சேர்ந்த மக்­க­ளு­டனும் அவர்­க­ளது மொழியில் தொடர்­பு­கொள்ள முடியும். தமிழ் பேசத்­தெ­ரி­யாத ஆளுநர் நிய­மிக்­கப்­பட்டால் அவர்­களால் மக்­களின் உணர்­வு­களைப் புரிந்­து­கொள்ள முடி­யாது. அவர்­களால் கிழக்கு மாகாண மக்கள் யுத்­தத்­தினால் எந்­த­ள­வுக்கு பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை அறிந்­து­கொள்ள முடி­யாது. அத்­தோடு கிழக்கு மாகா­ணத்தின் புவி­யியல் அமைப்பு அவர்­க­ளுக்கு  தெரி­யாது. அவர்­களால் குறு­கிய காலத்தில் மக்­களின் பிரச்­சி­னை­களை அறிந்துக் கொள்­ள­மு­டி­யாது. நான் கிழக்கை சேர்ந்­தவன். என்னால் மூன்று மொழி­க­ளிலும் பேச­மு­டியும். புவி­யியல் அமைப்பு எனக்குத் தெரியும் . தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­கள சமூ­கத்தின் உணர்­வு­களை என்னால் புரிந்­து­கொள்ள முடியும்.

இதே­வேளை நான் பத­வி­யேற்­றுள்ள இந்த சந்­தர்ப்­பத்தில் முத­ல­மைச்சர் ஒருவர் இல்லை. அமைச்­சர்கள் இல்லை. சபை­யொன்று இல்லை. இந்­நி­லையில் முத­ல­மைச்சர், அமைச்­சர்கள் மற்றும் சபையின் அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கித்து  என்னால் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­மு­டியும். இந்த சவால்­களை ஏற்றுக் கொண்டு இரவு பக­லாக நான் எனது கட­மையில் ஈடு­ப­டுவேன். தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­களை இதன் மூலம் விரைவில் தீர்த்து வைக்­க­மு­டியும்.

Q கிழக்கில் தீவி­ர­வாத குழுக்கள் இயங்கி வரு­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. ஒரு புதிய ஆளுநர் என்ற வகையில் இந்தக் குழுக்­களால் உரு­வாக்­கப்­படும் பிரச்­சி­னை­களை எவ்­வாறு கையா­ளப்­போ­கி­றீர்கள்?

நான் இல்லை என்று கூற மாட்டேன். அங்கே அவ்­வா­றான சில குழுக்கள் உள்­ளன. எங்­க­ளது சில பிள்­ளைகள் தீவி­ர­வா­தி­க­ளாக மாறி­யுள்­ளனர். அவர்கள் சமூ­கத்­துடன் இணைந்­த­வர்­க­ளாக இல்லை. எதிர்­கா­லத்தில் பிரச்­சி­னை­களை உரு­வாக்­காது அவர்­களை நாம் வழி­ந­டத்­துவோம். அவர்கள் நிலைப்­பாட்டை புரிந்­து­கொண்டு பிர­தே­சத்தில் ஒற்­று­மையைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைப்­பார்கள் என்று நாம் நம்­பு­கிறோம். நாட்டின் நிலை­மையை புரிந்­து­கொள்­வ­தற்கு அவர்­களை அறி­வு­றுத்த வேண்டும். இந்த பணி­யினை நாம் முன்­னெ­டுப்போம்.

Q  ‘எங்கள் பிள்­ளைகள்’ என்று நீங்கள் யாரைக் குறிப்­பி­டு­கி­றீர்கள் -?

எல்­லோரும் எனது பிள்­ளைகள். அவர்கள் முஸ்லிம் பிள்­ளைகள், தமிழ் பிள்­ளைகள்.

Q வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் இரண்டு மாகா­ணங்­க­ளிலும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தலாம் என்ற கருத்து தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை இதற்கு எதிர்ப்பும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நீங்கள் எந்­தக்­க­ருத்தை ஆத­ரிக்­கின்­றீர்கள்?

நிச்­ச­ய­மாக வடக்கு – கிழக்கு இணைப்பை நான் ஆத­ரிக்­க­மாட்டேன். உச்ச நீதி­மன்றம் இரண்டு மாகா­ணங்­க­ளையும் வெவ்­வே­றாகப் பிரித்­தது. நான் கிழக்கு மாகா­ணத்தை அபி­வி­ருத்தி செய்வேன். வட கிழக்கு இணைப்பை ஒரு­போதும் ஆத­ரிக்­க­மாட்டேன்.

Q  கிழக்கின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களில் இந்­தி­யாவின் ஆர்­வமும் பங்­க­ளிப்பும் பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்­தியா எங்­க­ளது அயல்­நாடு. அங்கே ஒரு­தொகை தமிழ் பேசும் மக்­களும் இருக்­கி­றார்கள். இந்­தியா எமது அயல்­நாடு என்­பதால் இந்­தி­யர்கள் எமக்கு உதவி நல்க முன்­வந்­தி­ருக்­கி­றார்கள். நான் கிழக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதால் இந்­திய உயர் ஸ்தானி­கரை சந்­திக்­க­வுள்ளேன். கிழக்­குக்கு உத­விகள் நல்­கு­மாறு அவரை வேண்­டிககொள்ளவுள்ளேன்.

கிழக்கின் அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­காக இந்­திய அர­சாங்கத் திட­மி­ருந்து ஆகக்­கூ­டிய உத­வி­களைப் பெற்று ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற எதிர்­பார்­க்கிறேன்.

Q  முஸ்­லிம்­களின் அர­சியல் வகி­பாகம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு ஆத­ரவு வழங்­கி­னார்கள். பின்பு வேறு கட்­சி­க­ளையும் ஆத­ரித்­தார்கள். யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்பு நிலைமை மாறி­யது. ஆரம்­பத்தில் முஸ்­லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை ஆத­ரித்­தார்கள். தமி­ழர்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கி­னார்கள். தற்­போது இரு சமூ­கத்தவர்­களும் பல கட்­சி­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கி­றார்கள். மக்கள் அம்­பா­றையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­ர­ஸுக்கு வாக்­க­ளித்­தார்கள். ஆனால் அக்­கட்சி மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளையும் தேவை­க­ளையும் நிறை­வேற்றத் தவறி விட்­டது. அதன்­பின்பு மக்கள் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸின் பக்கம் சாய்ந்­தனர். இந்­தக்­கட்சியும் மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­றா­விட்டால் வேறொரு கட்­சியை தெரிவு செய்து கொள்­வார்கள். சமூ­கத்­துக்கும் கிரா­மத்­துக்கும் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­களை கட்­சிகள் நிறை­வேற்ற வேண்­டு­மென அவர்கள் எதிர்­பார்­க்கி­றார்கள். வாக்­கு­று­திகள் தமது பிர­தி­நி­தி­களால் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் மக்கள் தங்­க­ளது எண்­ணங்­களை மாற்­றிக்­கொள்­வார்கள்.

Q  நீங்கள் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்ட உடனே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் உங்­களைச் சந்­தித்தார். அந்த சந்­திப்பு பற்றி கூறுங்கள்?

இடம்­பெற்ற யுத்­தத்­தினால் தமிழ் மக்கள் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறினார். நாங்கள் எந்த அமைச்­சுப்­ப­த­வி­க­ளையும் பொறுப்­பேற்­க­வில்லை. எதிர்க்­கட்­சியில் அமர்ந்து எங்­க­ளது உரி­மை­க­ளுக்­காக போரா­டுவோம் என்றார். எங்­க­ளுக்கும் அநீதி இழைக்­கப்­ப­டக்­கூ­டாது என்றார். நான் உங்­களை நம்­பு­கிறேன். தய­வு­செய்து எங்­க­ளது மக்­களை கவ­னித்­துக்­கொள்­ளுங்கள். கடந்த காலங்­களில் எங்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்லை என்றார்.

அவர் காணி மற்றும் ஏனைய பிரச்­சி­னைகள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டினார். அனை­வ­ருக்கும் சம­மாக நேர்­மை­யான முறையில் எனது கட­மையைச் செய்­வ­தாக அவ­ருக்கு உறு­தி­ய­ளித்தேன். கடந்த 9 ஆம் திகதி புதன்­கி­ழமை மக்­களைச் சந்­திக்கும் தின­மாகும். அன்று சுமார் 800 பேர் வந்து என்னை சந்­தித்­தார்கள். அன்று அதி­க­மான பிரச்­சி­னை­க­ளுக்கு நான் தீர்வு வழங்­கினேன். மக்கள் இந்த விட­யத்தை சம்­பந்­த­னிடம் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

அநேக மக்கள் தங்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்றுக் கொள்­வ­தற்­காக அங்­கு­மிங்கும் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். தயவு செய்து அவர்­க­ளுக்­கான உங்கள் உத­வி­களைத் தொட­ருங்கள் என்று சம்­பந்தன் கூறினார்.

Q கிழக்கில் தனி­யான கரை­யோர மாவட்ட அல­கொன்­றினை நீங்கள் தொடர்ந்தும் ஆத­ரிக்­கி­றீர்­களா?

இது ஒரு நியா­ய­மான கோரிக்­கை­யாகும். கரை­யோர மாவட்ட கோரிக்கை தமிழ் மொழி பேசும் மக்­களின் கோரிக்­கை­யாகும். தமிழ்­மொழி பேசும் மக்கள் அனை­வரும் தமது தேவை­க­ளுக்கு அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­துக்கே செல்ல வேண்­டி­யுள்­ளது. அங்கே அனைத்து கட­மை­களும் சிங்­கள மொழி­யி­லேயே நடை­பெ­று­கின்­றன. அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் கட­மை­யாற்றும் அதி­கா­ரி­க­ளினால் தமி­ழில் தொடர்­பா­டல்­களை மேற்­கொள்ள முடி­யா­துள்­ளது. அவர்கள் சிங்­க­ளத்­தி­லேயே பேசு­கி­றார்கள். சிங்­கள மொழி­யி­லேயே கட­மை­யாற்­று­கி­றார்கள்.

எமது தலைவர் அஷ்ரப் கரை­யோர பிர­தே­சங்­களில் தமிழில் கட­மை­யாற்றும் நிர்­வாக அல­கொன்­றையே கோரினார். அதன் அதி­காரி முஸ்­லி­மாக அல்­லது தமி­ழ­ராக இருக்­கலாம். அதி­கா­ரிகள் தமிழில் பேசி மக்­க­ளுக்கு சேவை­யாற்ற வேண்­டு­மென விரும்­பினார். கடந்த 30 வரு­டங்­களாக இங்கு சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­களே நிய­மிக்­கப்­பட்­டார்கள்.

Q  பிரச்­சி­னை­களை மூன்றே மூன்று மாதங்­களில் எவ்­வாறு தீர்க்க முடியும்?

80 வீத­மான பிரச்­சி­னைகள் நியா­ய­மா­னவை. ஊழியர் ஒருவர் பொத்­து­வி­லி­லி­ருந்து புல்­மோட்­டைக்கு இட­மாற்­றப்­ப­டு­கிறார். இந்த இட­மாற்­றத்­துக்கு எந்­த­வித கார­ணமும் இல்­லாமல் இருக்­கி­றது. அவர்கள் கஷ்டப் பிர­தே­சத்தில் சேவை செய்ய வேண்டும் என்­ப­தற்­காக இட­மாற்­றப்­ப­டு­வ­தென்றால் பொத்­து­விலில் கஷ்ட பிர­தே­சங்கள் இருக்­கின்­றன.

முறைமை சீராக இல்லை. நிலு­வை­யி­லுள்ள அனைத்து முறைமைசார் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும்­படி பொறுப்­பான அதி­கா­ரிக்கு தெரி­வித்­தி­ருக்­கிறேன். பெப்­ர­வரி 28 ஆம் திக­தி­வரை காலக்­கெடு வழங்­கி­யுள்ளேன். மார்ச் 1 ஆம் திகதி முதல் நான் புதிய ஒழுங்கு முறை­யினை ஆரம்­பிக்­க­வுள்ளேன். அதி­கா­ரிகள் தமது கட­மை­களைச் சிறப்­பாக செய்­வார்கள். நான் ஒரு நாள் ஆளு­ந­ரல்ல. நான் முழு நேர ஆளுநர்.

Q  முறை­யற்ற இட­மாற்­றங்கள் தொடர்பில் முன்னாள் ஆளு­ந­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இந்த விவ­கா­ரத்தை எவ்­வாறு கையா­ளு­வீர்கள்?

இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்டு விட்­ட­தாக எனக்குக் கூறப்­பட்­டது. இதற்­கென நான் தனி­யான குழு ஒன்­றினை நிய­மித்­துள்ளேன். இரு வாரங்­களில் இது தொடர்­பான அறிக்­கை­யொன்­றினை எனக்குச் சமர்ப்­பிக்­கும்­படி குறிப்­பிட்ட குழுவைக் கோரி­யுள்ளேன்.

Q  கிழக்கில் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள் தொடர்பில் எவ்­வாறு செயற்­ப­டு­வீர்கள்?

இந்த விவ­காரம் பற்றி நான் இது­வரை தேவை­யான தக­வல்­களைத் திரட்டிக் கொள்ளவில்லை. அதனால் கருத்து கூறமுடியாது. பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பிறகு கலந்துரையாடலாம்.

Q  கிழக்கில் நீண்டகாலமாக தீவிரமடைந் துள்ள காணி பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பீர்கள்?

காணிப் பிரச்சினைகள் அதிகமாக இங்கு உள்ளன. எல்லைகள் தொடர்பிலே அதிகமான பிரச்சினைகள் உருவாகியுள்னன. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆளுநர் நடமாடும் சேவையொன்று அறிமுகப்படுத்தப்படும்.

Q  காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கையாள்வீர்களா?

காணி அதிகாரங்களை 13 ஆம் திருத்த சட்டத்தின் கீழ் நான் முழுமையாக கையாள்வேன். எவராவது என்னை தடுத்தால் நான் நீதிமன்றுக்குச் செல்வேன். அரசியலமைப்பின் மூலம் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவரும் என்னைத் தடுக்க முடியாது.

Q  நீங்கள் அமைச்சர் பதவியில் சரியாக கடமையாற்றாததனாலேயே ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது உண்மையா?

இல்லை இல்லை நான் மிகவும் திறமையாக செயற்பட்ட நல்லவோர் அமைச்சர். நான் ஒரு பணி செய்ய வேண்டும் நான் திறமையானவன் என நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே எனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தேன்.

நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் ஓர் ஆளுநர் பதவியை மாத்திரம் பெற்றுக்கொள்ளவில்லை. எனது தொகுதியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன். கிழக்கில் ஒரு சபையில்லை, முதலமைச்சர் ஒருவர் இல்லை. அதனால் கிழக்குக்கு சென்று நான் சேவையாற்ற வேண்டும்.

மக்கள் எனது நியமனத்தை எதிர்ப்பார்கள் என்று நான் அறிவேன். நீங்கள் பிரச்சினை ஒன்றினை உருவாக்கினாலே உங்களால் அதற்கான தீர்வினை தேடிக்கொள்ளமுடியும்.

நன்றி: சிலோன் டுடே.
-Vidivelli 

1 Comment
  1. மாண்புமிகு எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஆளுநராக நியமனம்பெற்றதும் தமிழர் தலைவர் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியமை வரலாற்று முக்கியத்துவமுள்ள நகர்வாகும். மிகக்குறுகிய காலத்தில் தமிழர் மத்தியில் எதிர்ப்பு குறைந்துள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும். ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.