முன்னணி சவூதி அறிஞர் சிறையில் மரணம்

0 890

மதீ­னா­வி­லுள்ள புனித பள்­ளி­வா­சலின் முன்­னணி இமாமும் பிர­சா­ர­க­ரு­மான மார்க்க அறிஞர் ஒருவர் மிக மோச­மான சூழ்­நி­லையில் சிறை­வைக்கப்பட்­டி­ருந்­ததன் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­தாக செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

மதீ­னாவில் அமைந்­துள்ள இஸ்­லா­மியப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் குர்ஆன் கல்­லூ­ரியின் முன்னாள் பீடா­தி­ப­தி­யான ஷெய்க் அஹமட் அல்-­அ­மாரி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மர­ண­மானார். அவர் கைது செய்­யப்­பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அவர் மர­ணித்­துள்­ள­தாக சவூதி அரே­பிய பிர­சா­ர­கர்கள் மற்றும் மார்க்க அறி­ஞர்­களின் கைது தொடர்பில் கண்­கா­ணித்து ஆவ­ண­மாக்­கலில் ஈடு­பட்­டுள்ள சமூக வலைத்­தள பிர­சாரக் குழு­ம­மான ‘மனச்­சாட்­சி­யுள்ள கைதிகள் அமைப்பு’ தெரி­வித்­துள்­ளது.

வேண்­டு­மென்றே கவ­னிக்­காமல் விட்டமையே 69 வய­தான நபரின் மர­ணத்­திற்கு கார­ண­மாக அமைந்­த­தாக அக் குழுமம் சவூதி அரே­பிய சிறை அதி­கா­ரிகள் மீது குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

ஷெய்க் அஹமட் அல்-­அ­மா­ரியின் நெருங்­கிய  சகாக்­களில் ஒரு­வரும் முஸ்லிம் அறி­ஞ­ரு­மான சபார் அல்-­ஹ­வாலி மீதான நட­வ­டிக்­கையின் போது கடந்த ஆகஸ்ட் மாதம் அல்-­அ­மாரி தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என லண்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பொன்றின் பணிப்பாளரான யஹ்யா அஸ்ஸிரி தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.