தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் கராச்சியிலுள்ள பிணவறைக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்றுமுன்தினம் இரவு டிரக் வண்டியுடன் மோதி பேருந்து தீப்பிடித்ததில் இவ்விபத்து சம்பவித்தது. விபத்தில் 26 பேர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர்.
பலர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், மரபணு பரிசோதனைகளின் மூலமே சடலங்களை அடையாளம் காண முடியுமென மீட்பு நடவடிக்கைக்குப் பொறுப்பான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்ததும் அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 40 பயணிகளுடன் கராச்சியிலிருந்து பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள நகரொன்றை நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
-Vidiveli