பட்­ட­லந்த படு­கொ­லைகள்: “பிர­த­மரின் பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­பட்­டி­ருக்கும்”

வாசுவின் கருத்தால் சபையில் சர்ச்சை

0 749

பட்­ட­லந்த படு­கொ­லைகள் தொடர்­பான  விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை அமுல்­ப­டுத்­தி­யி­ருந்தால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பிர­ஜா­வு­ரிமை  பறிக்­கப்­பட்­டி­ருக்­கு­மெ­னவும் ஆகவே, ரணில் நாட்டை விட்டு தப்­பி­யோட வேண்­டிய ஒரே வழி­முறை மட்­டுமே உள்­ளது என  ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்த கருத்­தினால்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் வாசு­தேவ எம்.பிக்கும் இடையில் சபையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற விசா­ர­ணைக்­கு­ழுக்கள் திருத்த சட்டம் மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே  வாசு­தேவ நாண­யக்­கார  எம்.பி. பட்­ட­லந்த விசா­ரணை ஆணைக்­குழு குறித்து பேசினார். இதன்­போது,

விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் தொடர்பில் இன்று இங்கு விவா­திக்­கப்­ப­டு­கின்­றன. இதில் சாதா­ரண விசா­ரணை ஆணைக்­குழு மற்றும் விசேட விசா­ரணை ஆணைக்­குழு ஆகிய விட­யங்கள் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­றன. விசா­ரணை ஆணைக்­கு­ழுக்­களை துரி­தப்­ப­டுத்­து­வதன் மூல­மாக விசா­ர­ணை­களை துரி­தப்­படுத்த முடியும் என்­பதே இப்­போது அர­சாங்கம் முன்­வைக்கும் தர்க்­க­மாகும். எனினும் இது­வரை விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கு எத்­தனை முறைப்­பா­டுகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன? ஏன் இத்­தனை நாட்­க­ளாக முன்­னெ­டுக்­க­வில்லை? இதன் பின்­ன­ணியில் பல கார­ணிகள் இருக்­கலாம். அது என்ன என்­பது குறித்து எமக்குத் தெரி­யாது. ஆனால் தெரிந்­து­கொள்ள வேண்டும் என்ற தேவை எமக்கு  உள்­ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு இது­வரை எத்­தனை முறை­ப்பா­டு­களை விசா­ரிக்­காது வைத்­துள்­ளது? ஏன் அவ்­வாறு செய்­துள்­ளது என்ற கேள்வி எம்­மத்­தியில் உள்­ளது.

நான் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­விற்கு எதி­ராக வழக்கு தொடர்ந்தேன். அதேபோல் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரா­கவும் வழக்கு தொடர்ந்தேன். அது குறித்து வாக்­கு­மூலம் பெற்­றனர். ஆனால் இது­வரை அது­கு­றித்து எந்த முன்­ன­கர்வும் இல்லை. நான் பொய் சொல்­லி­யி­ருந்தால் எனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு இடம்­பெ­ற­வில்லை. அப்­ப­டி­யென்றால் விசா­ரணை நடத்­தி­யி­ருக்க வேண்டும். அதுவும் நடக்­க­வில்லை. அப்­ப­டி­யென்றால் அடுத்­த­தாக நீதி­மன்­றத்தை நாட வேண்­டிய ஒன்றே உள்­ளது.  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு  எதி­ரான பட்­ட­லந்த விசா­ரணை அறிக்கை என்­ன­வா­னது? விசா­ரணை ஆணைக்­குழு பரிந்­து­ரைகள் ஏன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை? என கேள்வி எழுப்­பி­ய­போது  குறுக்­கிட்ட சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல,  பிர­தமர் எந்த ஆணைக்­கு­ழு­வையும் நிரா­க­ரிக்­க­வில்லை. அவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். உங்­களின் அர­சாங்க காலத்தில் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்­கைகள் அமுல்­ப­டுத்­தப்­பட்­டன. அத்­துடன் பிர­தமர் உள்­ளிட்­ட­வர்கள் கூட ஆணைக்­கு­ழுக்கள் முன்­பாக சென்று வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்­ளனர். மத்­திய வங்­கி­பி­ணை­முறி  தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் முன்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட ஆஜ­ராகி வாக்­கு­மூ­ல­ம­ளித்தார்  என குறிப்­பிட்டார்.

இதன்­போது மீண்டும் கருத்து தெரி­வித்த வாசு­தேவ எம்.பி., ஆணைக்­குழு பரிந்­து­ரை­களை ஏன் நிறை­வேற்ற­வில்லை என கூறி­ய­போது எழுந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பட்­ட­லந்த விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கும் பிணை­முறி விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கும் வித்­தி­யாசம் தெரி­யாத நபர்­க­ளிடம் பேசி அர்த்­த­மில்லை என குறிப்­பிட்டார்.

இதன்­போது மீண்டும் கருத்து தெரி­வித்த வாசு­தேவ  எம்.பி., நீங்கள் இவ்­வாறு நழு­விக்­கொண்­டி­ருங்கள். உங்­க­ளுக்கு இப்­போது நாட்டை விட்டு தப்­பி­யோடும் ஒரே வழி­முறை மட்­டுமே உள்­ளது. இந்த அறிக்கை தகவல் வெளி­வரும் போது அதற்­கான சட்டம் செயற்­படும் போது பிர­த­மரின் பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­படும் நிலைமை உரு­வாகும். ஆகவே அவர் தப்­பி­யோட வேண்­டி­வரும். விசா­ரணை ஆணைக்­குழு பரிந்­து­ரையில் பிர­த­மரின் பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­பட வேண்டும் என்ற கார­ணியே கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே அதனை நிறை­வேற்ற நேரிடும். நீதிமன்றம் இதில் சம்பந்தம் இல்லை, ஆணைக்குழுவே சம்பந்தப்பட்டுள்ளது எனக் கூறிய போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள்  ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி சபையில் கூச்சலிட்டு விவாதிக்க ஆரம்பித்தனர்.

இதன்போது கூச்சலின் மத்தியில் உரையாற்றிய வாசுதேவ எம்.பி., நீங்கள் இறுதியாக நீதிமன்றத்தை சாட்டி தப்பித்துக்கொள்ள வேண்டியுள்ளது. உங்களின் ஒரேயொரு முகாம் இப்போது நீதிமன்றம் மட்டுமே. மக்கள் மத்தியில் செல்ல முடியாதுள்ளது எனக் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.