சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து மீண்டும் ரோஹிங்ய முஸ்­லிம்கள் வெளி­யேற்றம்

0 589

250 ரோஹிங்ய ஆண்­களை பங்­க­ளா­தே­ஷுக்கு அனுப்பி வைக்க சவூதி அரே­பியா திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் இது இந்த ஆண்டின் இரண்­டா­வது வெளி­யேற்­ற­மாகும் எனவும் செயற்­பாட்­டாளர் ஒருவர் தெரி­வித்தார்.

அவர்கள் பங்­க­ளா­தேஷை சென்­ற­டைந்­ததும் அவர்கள் சிறையில் அடைக்­கப்­ப­டு­வார்கள் எனத் தெரி­வித்­துள்ள ரோஹிங்ய சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பிர­சார இணைப்­பா­ள­ரான நேய் சான்ல்வின் இவ்­வாறு நாடு­க­டத்தும் செயற்­பாட்டை நிறுத்­து­மாறும் அதி­கா­ரி­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். சவூதி அரே­பியா மூன்று இலட்சம் ரோஹிங்ய அக­தி­க­ளுக்கு புக­லிடம் வழங்­கி­யுள்­ளது.

பெரும்­பா­லான ரோஹிங்­யர்கள் குடி­வாழ்­வ­தற்­கான அனு­மதிப் பத்­தி­ரத்தைப் பெற்­றி­ருக்­கின்­றார்கள். அவர்­களால் சட்­ட­பூர்­வ­மாக சவூதி அரே­பி­யாவில் வசிக்க முடியும் எனவும் நேய் சான்ல்வின் தெரி­வித்தார்.

எனினும், ஜித்­தா­வி­லுள்ள ஷுமை­யி­ஸியில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதிகள் சக ரோஹிங்ய மக்­களைப் போன்று நடத்­தப்­ப­டு­வ­தில்லை. மாறாக குற்­ற­வா­ளிகள் போலவே நடத்­தப்­ப­டு­கின்­றனர்.

நேய் சான்ல்­வி­னுக்குக் கிடைத்­துள்ள காணொ­லி­யொன்­றிற்கு அமை­வாக இந்த ரோஹிங்­யர்கள்  பலர் பல ஆண்­டு­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வுக்கு வந்து சேர்ந்­த­வர்கள். கடந்த ஞாயி­றுக்­கி­ழமை டாக்­கா­வுக்­கான நேரடி விமானம் மூலம் அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தற்­காக  ஜித்தா சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்கு அழைத்து வரு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

அவர்கள்  ஞாயிற்­றுக்­கி­ழமை அல்­லது திங்­கட்­கி­ழமை மாலை பங்­க­ளா­தே­ஷிற்கு பய­ணிப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

ரோஹிங்ய அடை­யாளம் ஏற்றுக் கொள்­ளப்­ப­டா­ததால் அவர்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு வந்­த­போது இந்­தி­யர்கள், பாகிஸ்­தா­னி­யர்கள், பங்­க­ளாதேஷ், நேபாள நாட்­ட­வர்கள் என்ற அடிப்படையிலேயே விரல் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் நேய்  சான்ல்வின் விபரித்தார்.

மியன்மார் ரோஹிங்ய மக்களின் குடியுரிமையினை 1982 ஆம் ஆண்டு பறித்து அவர்களை நாடற்றவர்களாக மாற்றியது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.