புத்தளம் வெடிபொருள் விவகாரம்: 50 பேரை கண்காணிக்கிறது குற்றப் புலனாய்வுப் பிரிவு

0 616

புத்­தளம் , வனாத்­த­வில்லு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மங்­க­ள­புர-  லெக்டோ வத்த பகு­தியில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த  வெடி பொருட்கள் மற்றும் வெடி­பொருள் தயா­ரிப்­புக்கு பயன்­படும் இர­சா­ய­னங்­க­ளு­டனும் மேலும் பல  உப­க­ர­ணங்­க­ளு­டனும் நால்வர் கைதான சம்­பவம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் சிறப்பு விசா­ர­ணை­களில் அடிப்­ப­டை­வாத வலை­ய­மைப்­புக்கள் தொடர்பில் சி.ஐ.டி. தகவல் சேக­ரித்­துள்­ளது. அதன்­படி அடிப்­ப­டை­வாத நிலைப்­பா­டு­களில் உள்ள சுமார் 50 பேர் தொடர்பில் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­வ­துடன் விசா­ர­ணை­களும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக  குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் மட்ட தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

மாவ­னெல்லை, கண்டி மற்றும் பொது­ஹர சிலை உடைப்பு விவ­கா­ரங்கள், புத்­தளம் வெடி­பொருள் மீட்பு சம்­பவம் ஆகி­ய­வற்­றுக்­கி­டையே நெருங்­கிய தொடர்­பி­ருப்­ப­தாக கருதும் சி.ஐ.டி.,  இந்த சம்­ப­வங்கள் அனைத்தும் அடிப்­ப­டை­வாத நிலைப்­பாட்டில் பயிற்சி முகாம் மற்றும் வகுப்­புக்கள் நடாத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும்  சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

குறிப்­பாக வெடி குண்­டு­களை தயா­ரிப்­பது, அவற்றை பயன்­ப­டுத்தி நாச­கார செயல்­களை அரங்­கேற்­று­வது தொடர்பில் குறித்த வகுப்­புக்­களில் பாடம் எடுக்­கப்­பட்­டதா என்­பது குறித்தும் அதில் கலந்­து­கொண்­ட­வர்கள் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­துடன், சிலை உடைப்பு, வெடி பொருள் மீட்பு தொடர்பில் தேடப்­படும் இரு முக்­கிய சந்­தேக நபர்­க­ளான சகோ­த­ரர்­களை கைது செய்ய சிறப்பு திட்­டமும் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் இந்த விவ­காரம் தொடர்பில் சி.ஐ.டி. க்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் நேரடி மேற்­பார்­வையில் அதன் பணிப்­பளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­க­ரவின்  ஆலோ­ச­னையின் பிர­காரம் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் விக்­ர­ம­சே­க­ரவின் விஷேட விசா­ரணைப் பிரிவு இலக்கம் இரண்டின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜானக மார­சிங்­கவின் கீழ் மூன்று சிறப்பு தனிப் படைகள்  விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளன.

வெடி பொருட்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட நான்கு பேரி­டமும் 90 நாள் தடுப்புக் காவலின் கீழ் நான்காம் மாடியில் விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும், புத்தர்  சிலை விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள 7 பேரிடம் இந்த வணாத்­து­வில்லு தோட்டம் மற்றும் வெடி பொருட்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை தொடர எதிர்­பார்ப்­ப­தா­கவும்  பாது­காப்பு தரப்பின் உயர் மட்ட தக­வல்கள் ஊடாக அறிய முடி­கின்­றது

மாவ­னெல்லை, கண்டி மற்றும் பொத்­து­ஹர சிலை உடைப்பு விவ­கா­ரங்கள் தொடர்பில் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், அவ­சி­ய­மான இரு சந்­தேக நபர்­களைத் தேடி நடாத்­தப்­பட்ட தேடு­தலின் போதே இந்த வெடி­பொ­ருட்கள் சிக்­கி­யி­ருந்­தன. தேடப்­படும் சந்­தேக நபர்கள்  வணாத்­த­வில்லு பகு­தியில் வில்­பத்து வனத்­துடன் ஒட்­டி­யுள்ள  80 ஏக்கர் தென்னத்தோட்டத்தில் மறைந்திருப்பதாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அவர்களைத் தேடியே அங்கு சி.ஐ.டி. குழுவினர் சென்றுள்ளனர். எனினும் அங்கு எதிர்பாராதவிதமாக வேறு நால்வர் இருந்துள்ளதுடன்  வெடி பொருட்களும் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.