பிரபாகரனால் நாட்டுக்கு ஏற்பட்ட அழிவே முஸ்லிம் அடிப்படைவாதிகளாலும் ஏற்படும்

ஜயந்த சமரவீர எம்.பி. கூறுகிறார்

0 702

மாவ­னெல்­லையில் புத்தர் சிலை­களை சேத­மாக்­கிய சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர்­களை பொலிஸில் ஒப்­ப­டைப்­ப­தாக தெரி­வித்த மேல் மாகாண அர­சி­யல்­வா­தியை கைது­செய்ய அர­சாங்கம்  நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் புத்­த­ளத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­களின் பின்­ன­ணியை அறிந்­து­கொள்­ளலாம். அத்­துடன் அர­சாங்கம் இதனைக் கண்­டு­கொள்­ளாமல் இருந்தால் பிர­பா­க­ரனால் நாட்­டுக்கு ஏற்­பட்ட அழிவே முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளாலும் ஏற்­படும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜயந்த சம­ர­வீர தெரி­வித்தார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் கட்சிக் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் இருந்து பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­க­ளுடன் மாவ­னெல்­லையில் அண்­மையில் புத்தர் சிலை சேத­மாக்­கி­யவர்­க­ளுக்கும் சம்­பந்தம் இருப்­ப­தாக பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. மாவ­னெல்லை சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர்கள் இரு­வரும் இன்னும் தலை­ம­றை­வாக இருக்­கின்­றனர். இவர்­களை பொஸிலிஸ் ஒப்­ப­டைப்­ப­தாக மேல்­மா­காண அர­சி­யல்­வாதி ஒருவர் கேகாலை  பொலிஸ் பிர­தா­னிக்கு அறி­வித்­தி­ருக்­கின்றார்.

ஆனால் இது­வரை அந்த சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் குறித்த அர­சி­யல்­வாதி பொலிஸில் ஒப்­ப­டைக்­க­வில்லை. அத்­துடன் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டு­பிக்­கப்­பட்ட பாரி­ய­ள­வி­லான வெடி­பொ­ருட்­க­ளுக்கும் குறித்த இரண்டு சந்­தேக நபர்­களும் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. அதனால் தலை­ம­றை­வாக இருக்கும் சந்­தேக நபர்­களை பொலிஸில் ஒப்­ப­டைப்­ப­தாக தெரி­வித்த மேல்­மா­காண அர­சி­யல்­வாதி யார் என்­பதை வெளிப்­ப­டுத்தி அவரை கைது­செய்­ய­வேண்டும். அதன் மூலம் சந்­தேக நபர்கள் எங்கு இருக்­கி­றார்கள் என்­பதைக் கண்­டு­பி­டிக்­கலாம்.

அத்­துடன் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் யாரு­டைய வழி­காட்­டலில் மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை அர­சாங்கம் உட­ன­டி­யாக கண்­டு­பி­டித்து இதனை ஆரம்­பத்­திலே நிறுத்­த­வேண்டும். இல்­லா­விட்டால் விடு­த­லைப்­பு­லி­களால் நாடு எதிர்­கொண்ட அழிவை முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களால் எதிர்­கொள்ள நேரிடும். அத்­துடன் புத்­த­ளத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­க­ளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கும் தொடர்­பி­ருக்­கின்­றதா என்­பதை தேடிப் பார்க்­க­வேண்டும். இது­தொ­டர்­பாக தமிழ், முஸ்லிம் மக்கள் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும். கலே­வல பிர­தே­சத்­தைச்­சேர்ந்த நபர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து அண்­மையில் உயி­ரி­ழந்தார்.

நாட்டில் கடந்த காலங்­களில் அளுத்­கம, திகன, அம்­பாறை போன்ற பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற இன­வாத சம்­ப­வங்கள் மற்றும் மாவ­னெல்லை புத்­தர்­சிலை சேத­மாக்­கிய விட­யங்கள் அனைத்தும் ஒரே நோக்­கத்­திலே இடம்­பெற்­றுள்­ளன. இது தொடர்­பாக அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும்.

அத்துடன் இந்த அரசாங்கம் அடிப்படை, பிரிவினைவாதத்துக்கு துணைபோகும் அரசாங்கமாகும். அடிப்படைவாதத்துக்கு அரசாங்கம் அச்சப்படுகின்றது. அதற்கு எதிராக ஒருபோதும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. அவ்வாறு இல்லை என்றால் மேல்மாகாண அரசியல்வாதியை கைது செய்து அடிப்படைவாதிகள் தலைதூக்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.