பெரும்­பான்மை சமூ­கத்­துடன் முஸ்­லிம்கள் ஒரு­போதும் முட்டி மோதி வாழ முடி­யாது

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன்

0 713

இந்­நாட்டில் வாழும் பெரும்­பான்மை சமூ­கத்­துடன் முஸ்­லிம்கள் ஒரு­போதும் முட்டி மோதி வாழ­மு­டி­யாது. நாட்டில் முஸ்­லிம்கள் அன்று முதல் இன்­று­வரை ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஒன்­று­பட்டு ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கின்­றனர். சிறு­சிறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்ட போதும்­கூட எமது முதா­தை­யர்கள் 1100 வரு­டங்­க­ளாக கட்டிக் காத்த நல்­லு­றவை சீர்­கு­லைக்க ஒரு­போதும் எத்­த­னிக்கக் கூடா­தென ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் கூறினார்.

களுத்­துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளன விஷேட கூட்டம் நேற்று முன்­தினம் மக்­கொனை இந்­தி­ரி­லி­கொ­டையில் மாவட்டத் தலைவர் இக்பால் சம்­சுதீன் தலை­மையில் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்தில் விஷேட பேச்­சா­ள­ராகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

முன்னாள் அமைச்­சரும் தேசிய ஊடக மத்­திய நிலை­யத்தின் தலை­வ­ரு­மான இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார், களுத்­துறை நக­ர­பிதா ஆமிர் நஸீர், பேரு­வளை பிர­தேச சபை எதிர்க்­கட்சி பிர­தம அமைப்­பாளர் ஏ.ஆர்.எம்.பதி­யுத்தீன், பாணந்­துறை பிர­தேச சபை எதிர்க்­கட்சித் தலைவர் தாஹிர் பாஸி, பேரு­வளை நக­ர­சபை உறுப்­பினர் அரூஸ் அஸாத், பிர­தேச சபை உறுப்­பினர் எம்.காமில், சம்­மே­ளன முன்னாள் தலைவர் ஏ.எஸ்.எம். பௌஸி ஹாஜியார் ஆகியோர் விஷேட அதி­தி­க­ளாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் களுத்­துறை மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்­வே­று­பட்ட பிரச்­சி­னைகள் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது. அவர் தொடர்ந்து உரை­யாற்றும் போது கூறி­ய­தா­வது, முஸ்­லிம்கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஏனைய சமூ­கங்­க­ளுடன் சண்­டை­யிட்டு முட்­டி­மோதி வாழும் துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­ப­டக்­கூ­டாது. சில இளை­ஞர்­களின் ஆவே­ச­மான செயற்­பா­டா­னது முழு சமூ­கத்­தையும் பாதிக்­கக்­கூ­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. 1100 வரு­டங்­க­ளாக இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் தாய்­நாட்டுப் பற்­றோடு வாழ்­வ­துடன் ஏனைய பெரும்­பான்மை சமூ­கங்­க­ளுடன் பரஸ்­பர புரிந்­து­ணர்­வோடும், ஒற்­று­மை­யோடும் வாழ்ந்து வரு­கி­றார்கள். இந்த நாட்டில் இனக்­க­ல­வ­ரங்கள் ஏற்­பட்­ட­போ­தெல்லாம் முஸ்­லிம்கள் ஒரு போதும் மதஸ்­த­லங்­களை தாக்­கவோ சேதப்­ப­டுத்­தவோ இல்லை. அண்­மையில் மாவ­னெல்­லையில் பௌத்த சிலை­களைத் தாக்கி சேதப்­ப­டுத்­திய சம்­ப­வத்தை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இது வேத­னைக்­கு­ரி­யதும் கண்­டிக்­கத்­தக்­க­து­மாகும். 1100 வரு­டங்­க­ளாக எமது முதா­தை­யர்கள் கட்­டிக்­காத்த இந்த ஒற்­று­மையை என்றும் பேணி செயற்­பட வேண்டும்.

தர்கா நகரில் அல்­லது பேரு­வ­ளையில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வழலாம். எனினும், சிங்­கள மக்­களை நான்கு புறத்­தாலும் சூழ­வுள்ள வியங்­கல்லை, பலாந்தை, வெலிப்­பன்னை போன்ற குக்­கி­ரா­மங்­களில் வாழும் முஸ்­லிம்­களின் நிலை­பற்றி சிந்­திக்­க­வேண்டும். ஆவே­சப்­பட்டு நாம் செயற்­ப­டும்­போது அது முழுச் சமூ­கத்­தையும் பாதிப்­ப­டையச் செய்­கி­றது. இளை­ஞர்­க­ளுக்கு நாம் ஒரு­போதும் தவ­றான வழியை காட்­டக்­கூ­டாது. எமது பிள்­ளை­க­ளுக்கு சரி­யான வழியை காட்­டா­விட்டால் அவர்­க­ளது எதிர்­காலம் பயங்­க­ர­மா­ன­தாக அமையும்.

துடி­து­டிப்­புள்ள, சமூக உணர்­வுள்ள இளை­ஞர்­களை இவ்­வா­றான அமைப்­புக்­களில் உள்­வாங்கி அவர்­களை சமூ­கத்­திற்கு சேவை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாற்­ற­வேண்டும்.

பள்­ளி­வா­சல்­களை கேந்­தி­ரஸ்­தா­னங்­க­ளாக மாற்றி போத­னை­களை வழங்­க­வேண்டும். பள்­ளி­வா­சல்கள் வெறு­மனே தொழுகை மற்றும் உணவு வழங்கும் இடங்­க­ளாக மாத்­தி­ர­மின்றி அறி­வுக்கும் ஆராய்ச்­சிக்கும் ஏற்ற மத்­தி­யஸ்­தா­ன­மாகப் பயன்­ப­டுத்­த வேண்டும். இந்த நிலைமை இன்று இல்லை. இன்று பள்­ளி­வா­சல்கள் 9 மணிக்கே மூடப்­ப­டு­கின்­றன. இந்த நிலை­மாறி முஸ்லிம் சமூ­கத்தில் அறி­வுக்­கு­ரிய மத்­தி­யஸ்­தா­ன­மாக பள்­ளி­வா­சல்கள் மாற­வேண்டும். எமது பிள்­ளை­க­ளுக்கு பள்­ளி­வா­சல்­களில் கல்விப் போதனை வழங்­கினால் அவர்கள் வெளியே சென்று படிக்க வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. சமூகம் இதைப்­பற்றி ஆழ­மாக சிந்­திக்க வேண்டும்.

எமது பிள்­ளைகள் பிரத்­தி­யேக வகுப்­புக்­கென வெளியே செல்­கி­றார்கள். அவர்கள் யாருடன் தொடர்பு வைத்­துள்­ளார்கள், எங்கே செல்­கி­றார்கள், யாருடன் தொலை­பேசி தொடர்பு இருக்­கி­றது என்­பது பற்­றி­யெல்லாம் பெற்­றோர்கள் பார்க்க வேண்டும். மாவ­னெல்லை சிலை உடைப்பு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இளை­ஞர்­களும் ஹதீஸ் வகுப்­புக்­க­ளுக்கு சென்றுதான் இந்தச் செயலை செய்­துள்­ளார்கள். அவர்­க­ள் மூளைச் சலவை செய்­யப்­பட்டு தவ­றான வழி­காட்டல் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இன்று இந்த இளை­ஞர்­களின் பெற்­றோர்கள் அவர்­களை எவ்­வாறு விடு­விப்­பது என்­பது பற்றி இரவு பகல் தூக்­க­மின்றி அழுது புலம்­பு­கி­றார்கள்.

முஸ்லிம் சமூகம் இவ்­வ­ளவு காலமும் எதிர்­நோக்­கிய சவால்­க­ளை­விட புதிய சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. பெரும்­பான்மை சமூ­கத்­துடன் மோத­வைக்கும் சதி­மு­யற்­சி­களும் இருக்­கக்­கூடும். சர்­வ­தேச அமைப்­புக்­க­ளுடன் தொடர்­பி­ருக்­கலாம் என்று தொடர்­பு­ப­டுத்­து­வ­தற்கு சில­நேரம் சதித்­திட்­டங்­களும் இருக்­கலாம். முஸ்லிம் சமூகம் இது­கு­றித்து மிகவும் விழிப்­புடன் இருக்க வேண்டும்.

அர­சியல் மற்றும் மார்க்க ரீதி­யி­லான பிள­வுகள் சமூ­கத்தின் எதிர்­கால விமோ­ச­னத்­திற்கு பெரும் தடை­யாக அமைந்­துள்­ளன. எனவே, முஸ்­லிம்கள் எல்லா வேற்­று­மை­க­ளையும் மறந்து ஒன்­று­பட வேண்டும். அதன்­மூ­லமே சமூ­கத்தின் எழுச்சி தங்­கி­யுள்­ளது. முஸ்­லிம்­க­ளுக்­கெனத் தனி­யான பத்­தி­ரிகை அவ­சியம். ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் ஆகிய மூன்று மொழி­க­ளிலும் பத்­தி­ரிகை வெளி­யி­டு­வது காலத்தின் தேவை­யாக உள்­ளது. சமூகம் எதற்­கெல்­லாமோ செலவு செய்­கி­றது. அர­சாங்கம் கட்­டிடம் அமைத்துக் கொடுக்க வேண்­டிய பாட­சா­லை­க­ளுக்கு நாம் கட்­டிடம் அமைத்துக் கொடுக்­கிறோம். எமது குரலை, எமது உரி­மை­களை சுட்­டிக்­காட்­டு­வ­தற்கு தனி­யான ஊட­கங்கள் அவ­சி­ய­மாகும்.

அர­சியல் கட்சி என்­பது எமக்குப் பிரச்­சி­னை­யல்ல. எல்லாக் கட்சி அர­சி­யல்­வா­தி­களும் சமூ­கத்­திற்கு சேவை­செய்­யவே வந்­துள்­ளார்கள். அவர்­களை சமூகம் சரி­யாகப் பயன்­ப­டுத்தி கிரா­மத்தின் தேவை­களை பூர்த்தி செய்­து­கொள்ளப் பயன்­ப­டுத்த வேண்டும். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளனம் சகல அர­சியல் கட்­சி­க­ளையும் சேர்ந்­த­வர்­களைக் கொண்டு அன்று முதல் இன்று வரை இயங்கி வரு­கி­றது. மர்ஹூம் தேச­மான்ய எம்.ஏ. பாக்கிர் மாக்கார் இற்­றைக்கு 49 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஸ்தாபித்த இந்த இயக்கம் சமூ­கத்தின் முன்­னேற்­றத்­திற்­காக அவ்­வப்­போது பாரிய சேவை­களை செய்­துள்­ளதை இந்த நாடே அறியும். எனவே, இந்த அமைப்பை மேலும் சக்­தி­பெறச் செய்து அதன்­மூலம் பெற முடி­யு­மான சேவை­களைப் பெற்றுக் கொள்வோம். இந்த அமைப்பை எவரும் வர்­ணக்­கண்­ணாடி கொண்டு பார்க்க வேண்டாம்.

மேல்­மா­காண கல்விப் பிரச்­சினை தொடர்­பாக மேல்­மா­காண ஆளுநர் அஸாத் ஸாலி­யுடன் நாம் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­யுள்ளோம். எதிர்­கா­லத்தில் மாகா­ணத்­தி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­களில் நிலவும் பல்­வே­று­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­கிட்டும். களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­களில் நிலவும் பல்­வே­று­பட்ட குறை­பா­டு­களை ஒன்று திரட்டி அவற்றை மாகாண ஆளு­ந­ரிடம் சமர்­ப்பிக்க முயற்சி செய்வோம் என்றார்.

இந்நிகழ்வில் மக்கொனை சாந்த மரியாள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம் படிப்பிக்க ஆசிரியர் இல்லாமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் எம். காமில் சுட்டிக் காட்டினார். அந்த ஆசிரியருக்கு மாதாந்த சம்பளமாக 10000 ரூபாவை களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் மர்ஹூம் எம்.ஐ.எம். பாரூக்கின் ஞாபகார்த்தமாக வழங்குவதற்கு அவரது புதல்வர் இக்பால் பாரூக் முன்னவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் மக்கொனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தேவையான பிளாஸ்ரிக் கதிரைத் தொகுதியையும் இதன்போது கையளித்தார்.  மாவட்ட செயலாளர் ரிஸ்மி மஹ்ரூப் உட்பட மற்றும் பலரும் இங்கு உரைநிகழ்த்தினர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.