மகா­நா­யக்க தேரர்­களை சிலர் தவ­றாக திசை திருப்ப முயற்சிப்பது கவ­லைக்­கு­ரி­யது

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­விப்பு

0 634

நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரப்­போ­வ­தாக சில அர­சி­யல்­வா­திகள் மகா­நா­யக்க தேரர்­களை தவ­றாக திசை திருப்ப முயற்சிப்பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான சட்­ட­மூலம் இது­வ­ரையும் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் இல்­லாத ஒன்றை இருப்­ப­தாகக் காட்டி, இன­வா­தத்தை தூண்­டு­வ­தற்கு ஒரு சாரார் முயற்­சித்து வரு­வ­தா­கவும் பிர­தமர் கூறினார்.

அலரி மாளி­கையில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற தேசிய தைப்­பொங்கல் விழாவில் பிர­தமர் உரை­யாற்­றும்போது இவ்வாறு கூறினார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­னெ­டுத்து நாட்டை பிள­வு­ப­டுத்தப் போவ­தாக தெரி­விப்­ப­வர்கள் வழி­பா­டு­களில் ஈடு­பட்ட பின்னர் மக்­க­ளுக்கு அப்­பட்­ட­மான பொய்­களை தெரி­விப்­பது விந்­தை­யா­க­வுள்­ளது. இல்­லாத ஒன்றை இருப்­ப­தாக கூறி இன­வா­தத்­திற்கு தூப­மி­டவும் நாட்­டுக்கு தீவைக்­கவும் முயற்­சிக்க வேண்டாம் என அத்­த­கை­யோரை தாம் கேட்­டுக்­கொள்­வ­தா­கவும் பிர­தமர் தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். சில ஊட­கங்கள் இல்­லாத அர­சி­ய­ல­மைப்பை இருப்­ப­தாக காட்ட முயற்­சிக்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். நாட்டைப் பிள­வு­ப­டுத்தப் போவ­தா­கவும் பொலிஸ் துறையை சீர்­கு­லைக்கப் போவ­தா­கவும் அவர்கள் விமர்­சித்து வரு­கின்­றனர். பொலிஸ் தொடர்­பான கருத்­துக்கள் அர­சியல் கட்சி, முத­ல­மைச்­சர்­களின் யோச­னை­க­ளிலும் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஒன்­றாகும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் கருத்­துக்­க­ளையும் அர­சி­ய­ல­மைப்பு யோச­னை­களில் முன்­வைக்க முடியும். இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­துக்கும் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கும் அர­சியல் தீர்வு அவ­சி­ய­மாகும் என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் தெரி­வித்தார்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.