யெமன் இராணுவத்தினரால் முக்கிய மலைப்பகுதி விடுவிப்பு

0 776

வடக்கு யெமனின் தெற்கு சாதா ஆளுநர் பிர­தேச கிலாப் மாவட்­டத்தில் அமைந்­துள்ள முக்­கிய மலைத்­தொடர் யெமன் இரா­ணு­வத்­தினால் ஹெள­தி­க­ளி­ட­மி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பிய செய்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.

அல்-­மிலான் மலைத் தொடரில் அமைந்­துள்ள ஹெளதி இரா­ணுவ மையங்கள் மீது யெமன் இரா­ணு­வத்­தினர் தாக்­கு­த­லொன்றை ஆரம்­பித்­தனர். அந்த நட­வ­டிக்கை கார­ண­மாக முழு மலைத் தொடரும் விடு­விக்­கப்­பட்­ட­தாக செப்­டெம்பர் நெட் என்ற யெமன் பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மோத­லின்­போது, பல கிளர்ச்­சி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தோடு காயங்­க­ளுக்கும் இலக்­கா­கினர். ஒரு தளபதி உள்ளடங்கலாக ஆறுபேர் யெமன் இராணுவத்தினரால் உயிருடன் கைது செய்யப்பட்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.