நைஜீரிய இராணுவத் தளத்தின் மீது போகோஹராம் போராளிகள் தாக்குதல்

0 600

போகோ­ஹராம் போரா­ளிகள் வட­கி­ழக்கு நைஜீ­ரி­யாவின் பின்­தங்­கிய பிர­தே­சத்தில் அமைந்­துள்ள இரா­ணுவத் தளத்தின் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவும், முரண்­பா­டுகள் கார­ண­மாக தமது வாழ்­வி­டங்­களை இழந்­த­வர்­களின் தற்­கா­லிக தங்­கு­மி­டங்­க­ளுக்கும் தீயிட்டுக் கொளுத்­தி­ய­தா­கவும் இரா­ணுவ மற்றும் மனி­தா­பி­மான உதவி வட்­டா­ரங்கள் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­துள்­ளன.

இந்தத் தாக்­குதல் போர்னோ மாநிலத் தலை­நகர் மெயி­டுக்­உ­ரிக்கு வட­கி­ழக்கே சுமார் 175 கிலோ­மீற்றர் தொலைவில் அமைந்­துள்ள ரான் பகு­தியில் திங்­கட்­கி­ழமை மாலை ஆரம்­ப­மா­ன­தை­ய­டுத்து பொது­மக்கள் அப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து வெளி­யே­றினர்.

ஐ.எஸ். அமைப்­பினைப் போன்று செயற்­பட்­டு­வரும் போகோ ஹராம் அமைப்பின் மேற்­கா­பி­ரிக்க மாநிலப் பிரிவு கிட்­டத்­தட்ட தோற்­க­டிக்­கப்­பட்டு விட்­ட­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்ள நிலையில் இத்­தாக்­குதல் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் மெயி­டுக்­உ­ரிக்கு வட­மேற்கே 50 கிலோ­மீற்றர் தொலைவில் அமைந்­துள்ள மகு­மெரி இரா­ணுவத் தளத்­தினைக் கைப்­பற்­று­வ­தற்­காக இவ்­வா­ற­ன­தொரு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக உள்ளூர் சமூகத் தலைவர் ஒருவர் தெரி­வித்தார்.

ரான் பகு­தியில் தற்­போது உள்­ள­க­ரீ­தி­யாக இடம்­பெ­யர்ந்த 35,000 பேர் பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தாக புலம்­பெ­யர்­வுக்­கான சர்­வ­தேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்பகனவே மனிதாபிமான ரீதியில் மோசமான சூழ்நிலையினை எதிர்நோக்கியுள்ள நிலையில் தொடர் தாக்குதல்கள் மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.