பாகிஸ்தானின் சட்ட மற்றும் அரசியல் நீரோட்டத்தில் கடந்த வருடம் இணைத்துக்கொள்ளப்பட்ட ஏழு பழங்குடி மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு அந் நாட்டு அரசாங்கத்தின் வடமேற்கு கைபர் பக்ஹ்துன்க்ஹ்வா மாகாணம் 22,000 பேர் கொண்ட பலமான பொலிஸ் படையொன்றுக்காகான ஆட்சேர்ப்பை செய்யவுள்ளது என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பழங்குடிப் பிரதேசங்களில் அமைந்துள்ள மில்லியன்கணக்கான மக்களுக்கு சம உரிமை வழங்குவதற்கு கடந்த வருடம் மே மாதம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு பாகிஸ்தான் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.
இதன் மூலம் இதற்கு முன்னர் கைபர் பக்ஹ்துன்க்ஹ்வா மாகாணம் பிரதேச மக்களுக்கு சமவுரிமையினை மறுத்துவந்த, பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றமிழைத்தால் முழுப் பழங்குடி சமூகமும் தண்டனைக்கு இலக்காகின்ற காலனித்துவ கால சட்டங்களை நீக்குவதற்கும் சமஷ்டி அமைப்பில் நிருவகிக்கப்பட்டு வந்த ஏழு பழங்குடி மாவட்டங்களை ஒன்றிணைப்பதற்கும் வழியேற்பட்டது.
ஆரம்பத்தில் ஆறாயிரம் பொலிஸாரை சேர்த்துக் கொள்வதற்கும், இரண்டாயிரம் படையினரையும் சேர்த்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என மாகாண அரசாங்கப் பேச்சாளர் அஜ்மல் வாஸிர், புதிதாக இணைக்கப்பட்ட பழங்குடி மாவட்டங்களின் அமைதியும் சிறந்த சமாதானமுமே அரசாங்கம் முன்னுரிமையளிக்கும் விடயங்களாகும் எனவும் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக தலிபான் மற்றும் அல்-கைதா கிளர்ச்சிக்காரர்கள் பழங்குடிப் பிரதேசங்களை பயிற்சி பெறுவதற்காகவும், பாகிஸ்தான் மற்றும் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தி வந்தனர். அதற்குக் காரணம் அப்பிரதேசங்களில் அரசாங்கத்தில் பிரசன்னம் இல்லாதிருந்தமையாகும்.
கடந்த ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக பாகிஸ்தான் இராணுவம் இந்தப் பிரதே சங்களில் பல இராணுவ நடவடிக்கைகளைமேற் கொண்டது. இதன் காரண மாக பலர் இடம்பெயர்ந்து தற்போது பழங்குடிப் பிராந்தியங் களுக்கு வெளியே அமைந் துள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
-Vidivelli