பலஸ்­தீன மக்­க­ளுக்­கான உத­வி­யினை உலக உணவுத் திட்டம் இடை­நி­றுத்­தி­யது

0 662

நிதிப் பற்­றாக்­குறை கார­ண­மாக உலக உணவுத் திட்டம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­கரை மற்றும் காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள அதன் சில பய­னா­ளி­க­ளுக்­கான உத­வி­யினை இடை நிறுத்­தி­யுள்­ளது அல்­லது குறைத்­துள்­ளது என அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரையில் ஜன­வரி முதலாம் திகதி தொடக்கம் ஐக்­கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்­டத்­தி­னூ­டான உதவி சுமார் 27,000 பலஸ்­தீ­னர்­க­ளுக்குக் கிடைக்­காது என அமைப்பின் பலஸ்­தீன ஆள்­புலப் பிர­தே­சத்­திற்­கான பணிப்­பாளர் ஸ்டீபன் கோர்னி தெரி­வித்தார்.

காஸா­வி­லுள்ள 110,000 பேர் உள்­ள­டங்­க­லாக மேலும் 165 பேர் வழக்­க­மான தொகையில் 80 வீத உத­வி­யினைப் பெறு­வார்கள் என கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று அவர் தெரி­வித்தார்.

கடந்த நான்­காண்­டு­க­ளாகப் படிப்­ப­டி­யாகக் குறை­வ­டைந்­து­வந்த நன்­கொடைத் தொகை கார­ண­மா­கவே இந்த குறைப்­புக்கள் தீர்­மா­னிக்­கப்­பட்­டன. அமெ­ரிக்­காவின் உதவி நிறுத்தம் இதில் பாரிய பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

2018 ஆம் ஆண்டு காஸா மற்றும் மேற்­குக்­க­ரை­யினைச் சேர்ந்த 250,000 மக்­க­ளுக்கு உலக உணவுத் திட்டம் உத­வி­ய­ளித்­தி­ருந்­தது.

தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களில் சில­வற்­றையே கொள்­வ­னவு செய்­வ­தாக மேற்குக் கரையின் தென்­ப­கு­தி­யி­லுள்ள ஹெப்­ரோ­னுக்கு அருகில் அமைந்­துள்ள யட்டா கிரா­மத்தைச் சேர்ந்த மஹா அல்-­ந­வாஜா தெரி­வித்தார்.

12 பேர் கொண்ட தன் கூட்டுக் குடும்­பத்­திற்குத் தேவை­யான மளிகைப் பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்குத் தனக்கு உதவும் உலக உண­வுத்­திட்ட அட்டை பற்றிக் குறிப்­பிட்ட 52 வயது தாயான அவர், ‘கடந்த டிசம்பர் மாதம் எனது அட்­டை­யினை அவர்கள் புதுப்­பிக்­க­வில்லை’ எனத் தெரி­வித்தார்.

அத்­தாயின் குடும்ப உறுப்­பி­னர்கள் தொழி­லின்றி இருக்­கின்­றனர்.

எனது மகன்­க­ளுக்கு இஸ்­ரே­லினுள் செல்­வ­தற்கு அனு­ம­தி­யில்லை, அவ்­வப்­போது எனது கண­வ­ருக்கு அனு­மதி கிடைக்­கின்­றது. அந்த சந்­தர்ப்­பங்­களில் நாம் சிறிது பணத்­தினை உழைக்­கின்றோம் எனவும் அவர் தெரி­வித்தார்.

மேற்­குக்­க­ரையில் வேலை­யற்றோர் வீதம் 18 ஆகும். சில பலஸ்­தீ­னர்கள் உயர் சம்­ப­ளத்­திற்­காக இஸ்­ரேலில் பணி­யாற்ற விரும்­பு­கின்­றனர்.  எனினும், அதற்கு இஸ்­ரேலின் அனு­மதி பெறப்­பட வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.