ஜனா­தி­பதி மைத்­திரி – கோத்தா கொலை சதி விவ­காரம்: பொலிஸ்மா அதிபர் பூஜித்தின் குரல் மாதி­ரி­களும் பெறப்­பட்­டன

0 690

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்­த­தாகக் கூறப்­படும் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் ஓர் அங்­க­மாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம் நேற்று அரச இர­சா­யன பகுப்­பாய்வுத் திணைக்­க­ளத்­தினால் குரல் மாதிரி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்­க­விடம் கடந்த வாரம் சி.ஐ.டி. பெற்­றுக்­கொண்ட விஷேட உத்­த­ர­வொன்­றுக்­க­மை­வாக இவ்­வாறு நேற்று இந்தக் குரல் மாதிரி பொலிஸ்மா அதி­ப­ரிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும், நாமல் குமா­ரவின் தொலை­பே­சி­யி­லி­ருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சில குரல் பதி­வுகள் தொடர்­பி­லான குரல் சோத­னையின் நிமித்தம் இவ்­வாறு குரல் மாதிரி பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் ஆரி­யா­னந்த வெலி­அங்க தெரி­வித்தார். நேற்று குரல் மாதி­ரி­யினை வழங்­கு­வ­தற்­காக அரச இர­சா­யன பகுப்­பாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு சென்ற பொலிஸ்மா அதி­ப­ரிடம், அதன் டிஜிட்டல் பகுப்­பாய்வு ஆய்வு கூடத்தில் வைத்து 30 நிமி­டங்­க­ளுக்கும் அதிக நேரம் இந்தக் குரல் மாதி­ரி­களை பெறும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றுள்­ளன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ, சி.சி.டி.யின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை­செய்ய சதி செய்­த­தாகக் கூறப்­படும் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் ஓர் அங்­க­மாக சி.ஐ.டி., பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம் கடந்த 2018 நவம்பர் 25 ஆம் திக­தியும் அதன் பின்­னரும் இரு தட­வைகள் விஷேட விசா­ர­ணை­களை நடாத்­தி­யது. இதன்­போது பொலிஸ்மா அதி­ப­ருக்கும் கொலை­சதி விவ­கார முறைப்­பாட்­டா­ள­ராகக் கரு­தப்­படும் ஊழல் தடுப்பு படை­ய­ணியின் நட­வ­டிக்கை பணிப்­பாளர் நாமல் குமா­ர­வுக்கும் இடை­யி­லான தொடர்­புகள் குறித்து விரி­வாக விசா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் ஏற்­க­னவே, இந்த சதி விவ­கா­ரத்தில் சந்­தேக நப­ராகக் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லி­லுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, முறைப்­பாட்­டா­ள­ரான நாமல் குமார ஆகியோர் குரல் சோத­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்பட்­டி­ருந்­தனர். அப்­போது முறைப்­பாட்­டின்­போது கைய­ளிக்­கப்­பட்ட 124 குரல் பதி­வு­களில் 123 இல் உள்ள குரல்கள் அவ்­வி­ரு­வ­ரி­னு­டை­யது என்­பதை அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்கள் உறுதி செய்­தனர். இந்­நி­லையில் பின்னர் சி.ஐ.டி.யிடம் கைய­ளிக்­கப்­பட்ட, ஹொங்கொங் நாட்டின் டேட்டா எக்ஸ்பேர்ட் எனும் நிறு­வன ஆய்­வு­கூ­டத்தில் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட நாமல் குமா­ரவின் தொலை­பே­சி­யி­லி­ருந்து மீள உற்­பத்தி செய்­யப்­பட்ட அழிக்­கப்பட்­டி­ருந்த தக­வல்­களில் அடங்­கிய ஒரு மணி நேர உரை­யா­டல்கள், விசா­ர­ணை­களை கையாளும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் இந்­திக லொக்­கு­ஹெட்­டி­யினால் நீதி­வா­னுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட நிலையில், அதி­லுள்ள குரல்கள் யாரி­னு­டை­யது என்­பதை உறு­தி­செய்ய அரச இர­சா­யன பகுப்­பாய்வு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க அனு­மதி பெறப்­பட்­டி­ருந்­தது.

நாமல் குமா­ரவின் குறித்த தொலை­பே­சி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட 39 ஜி.பி. தர­வு­களில் 427 உரை­யா­டல்கள் இருந்­தன. 31 செய­லி­ழந்த உரை­யா­டல்கள், 4323 புகைப்­ப­டங்கள், 802 செய­லி­ழந்த புகைப்­ப­டங்கள், 26 வீடி­யோக்கள், 656 செய­லி­ழந்த வீடி­யோக்கள், 684 தொலை­பேசி ஸ்டிக்­கர்ஸ்­கள், 134 பாடல்­கள், 78 தொலை­பேசி அழைப்பு நாதங்­களும் அதில் இருந்­தன. குறிப்­பாக, உரை­யா­டல்­களில் முக்­கி­ய­மான உரை­யா­டல்கள் மூன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. ஒன்று 21 நிமி­டங்­களும் 06 செக்­கன்­களும் நீள­மா­னது. மற்­றை­யது 32 நிமி­டங்­களும் 49 செக்­கன்­களும் நீள­மா­னது. மூன்­றா­வது 7 நிமி­டங்­களும் 40 செக்­கன்­களும் நீள­மா­னது. இவை மூன்­றையும் தனித்­த­னி­யாக இறு­வட்­டுக்­களில் பதிவு செய்து மன்றில் ஒப்­ப­டைத்த சி.ஐ.டி. அதி­லுள்ள குரல்­களை அடை­யாளம் காண சிறப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது.

அதன்­படி ஏற்­க­னவே முறைப்­பாட்­டா­ள­ரான நாமல் குமார, சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா ஆகி­யோரின் குரல் மாதி­ரிகள் அரச இர­சா­யன பகுப்­பாய்வுத் திணைக்­க­ளத்­தி­லுள்ள நிலையில், புதி­தாக பொலிஸ்மா அதி­பரின் குரல் மாதி­ரிகள் மட்டும் ஆய்­வுக்குத் தேவைப்­பட்­டன. ஏனெனில், ஹொங்­கொங்கில் மீட்­கப்­பட்ட உரை­யா­டல்­களில் பொலிஸ்மா அதி­ப­ருடன் நாமல் குமார முன்­னெ­டுத்­த­தாகக் கூறும் உரை­யா­டல்­களும் அடங்கும்.

எனவே அதனை உறுதி செய்­து­கொள்­வ­தற்­கா­கவே பொலிஸ்மா அதி­பரின் குரல் மாதிரிகள் பெறப்­பட்­டுள்­ளன. நேற்று முற்­பகல் 10.00 மனிக்கு அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் திணைக்­க­ளத்தில் பிர­சன்­ன­மான பொலிஸ்மா அதிபர் 10.45 வரை அங்கு தங்­கி­யி­ருந்தார். பொலிஸ்மா அதிபர் அங்கு பிர­சன்­ன­மா­கும்­போது அவ­ருடன் விசா­ரணை அதி­கா­ரி­க­ளான உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் இந்­திக லொக்­கு­ஹெட்டி, பிர­தான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க ஆகியோரும் உடன் அங்கு சென்றிருந்தனர். இதனைவிட மேலும் பல பிரதேசங்களுக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

பொலிஸ்மா அதிபரிடம் மூவர் கொண்ட அரச இரசாயன பகுப்பாய்வுப் பிரிவின் டிஜிட்டல் பிரிவு அதிகாரிகள் குரல் மாதிரிகளைப் பெற்றுள்ளதுடன், அவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் குரல் பதிவுகளில் உள்ளது பொலிஸ்மா அதிபரின் குரலா என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டு அதன் முடிவு நீதிமன்றுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.