கிழக்கு முஸ்லிம் ஆளுநரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பு

0 822

கிழக்கில் அண்­ண­ள­வாக 1/3 பங்கு தமி­ழர்­களும் 2/3 தமிழர் அல்­லா­த­வர்­களும் வாழ்­கின்­றனர். கிழக்கின் 1/3 பங்கு தமி­ழர்­க­ளுக்­காக தமி­ழ­ரல்­லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்­பின்­மூலம் வடக்கின் ஆளு­கைக்குள் வர­வேண்டும். அதற்கு முஸ்­லிம்­களும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்­பது அவர்­க­ளது கோரிக்கை, எதிர்­பார்ப்பு.

விடு­தலைப் போராட்ட ஆரம்­ப­கா­லத்தில் வட கிழக்கு சுயாட்­சிக்­கும்மேல் தமி­ழீ­ழத்­திற்­கா­கவே போரா­டு­வ­தற்கு முஸ்லிம் வாலிபர் ஆயுத இயக்­கங்­களில் இணைந்­தார்கள். அந்­த­ளவு தமி­ழர்­களை ஒன்­றுக்குள் ஒன்­றாக பிணைந்த சகோ­தர சமூ­க­மாக முஸ்­லிம்கள் கரு­தி­னார்கள்.

இயக்­கப்­போ­ரா­ளி­க­ளுக்கு பல சந்­தர்ப்­பங்­களில் படை­க­ளி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்கு அடைக்­கலம் கொடுத்­தார்கள். ஆகா­ர­ம­ளித்­தார்கள். தலைவர் அஷ்ரப் அவர்கள் “அண்ணன் அமிர்­த­லிங்கம் தமி­ழீழம் பெற்றுத் தரா­விட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்”; என்று மேடை­களில் முழங்­கு­ம­ளவு தமிழ்த் தலை­மை­கள்­மீ­தான நம்­பிக்கை இருந்­தது.

நடந்­தது என்ன? தம்­முடன் போராட இணைந்த முஸ்லிம் வாலி­பர்­க­ளையே சுட்­டுத்­தள்ளி நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்று நிறு­வி­னார்கள். போதாக்­கு­றைக்கு வடக்கு முஸ்­லிம்­களை ஒரு சில மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் வெளி­யேற்­றி­னார்கள்.

இந்த நாட்டில் யுத்­த­கா­லத்தில் எல்லா சமூ­கங்­களும் பாதிக்­கப்­பட்­டன. ஆனால் யுத்த காலத்­திலும் யுத்த நிறுத்த காலத்­திலும் தமிழ் ஆயு­தப்­போ­ராட்­டத்­தினால் பாதிக்­கப்­பட்ட, அகோ­ர­மாக கொல்­லப்­பட்ட ஒரு சமூ­க­மென்றால் அது முஸ்லிம் சமூகம். அந்­த­ளவு வெறுப்பு முஸ்­லிம்கள் மீது தமிழ் ஆயு­தப்­போ­ராட்­டத்­திற்கு.

யுத்த நிறுத்­த­காலம். ஆனாலும் முஸ்­லிம்கள் மீதான விடு­தலைப் புலி­களின் அட்­ட­காசம் குறை­ய­வில்லை. ஆயு­தப்­ப­டை­களும் முஸ்­லிம்­களைப் பாது­காப்­பதில் அசட்­டை­யாக இருந்­தது. பொது­மக்­களின் நெருக்­கு­த­லினால் UNP யை ஆட்சிக் கட்­டிலில் அமர்த்தி முட்­டுக்­கொ­டுத்துப் பாது­காத்த மு. கா. தலைவர் ஹக்­கீமின் வேண்­டு­கோ­ளின்­பேரில் 500 முஸ்லிம் பொலிஸ்­கா­ரர்­களை முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்­காக நிய­மிக்க அன்­றைய பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க முன்­வந்தார்.

தாங்க முடி­ய­வில்லை தமிழ்த்­த­ரப்­பிற்கு. தூக்­கினார் போர்க்­கொடி சம்­பந்தன். காற்றில் பறந்­து­போ­னது ரணிலின் வாக்­கு­றுதி. ஆட்­சிக்­கட்­டிலில் ஏற்றி முட்­டுக்­கொ­டுத்தும் கையா­லா­காத்­த­ன­மா­ன­வர்­க­ளாக விடு­தலைப் புலி­களின் கொடு­மை­களைக் கண்டு கண்ணீர் விட்­டுக்­கொண்டு காலத்தைக் கடத்­தினோம்.

யுத்தம் முடிந்­தது. அமை­தியும் திரும்­பி­யது. கடந்த காலத்தை மறப்போம். தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் சகோ­தர சமூ­கங்­க­ளாக வாழுவோம்; என்­றுதான் முஸ்­லிம்கள் விரும்­பி­னார்கள்; விரும்­பு­கி­றார்கள்.

அவர்­க­ளது விட­யத்தில் முஸ்­லிம்கள் ஒத்­து­ழைக்க வேண்டும்; விட்­டுக்­கொ­டுக்க வேண்டும் என்று எதிர்­பார்ப்­ப­வர்கள் முஸ்­லிம்­களின் விட­யங்­களில் எவ்­வாறு நடந்­து­கொள்­கின்­றார்கள்?

கிழக்கில் அம்­பா­றையும் திரு­கோ­ண­ம­லையும் தமிழ்­பேசும் மக்­களைப் பெரும்­பான்­மை­யாக கொண்ட மாவட்­டங்கள். அதிலும் குறிப்­பாக முஸ்­லிம்கள், எண்­ணிக்­கையில் முத­லா­வது பெரிய சமூகம்.

வட கிழக்கு, பெரும்­பான்மை சமூக ஆளு­கைக்குள் இருந்து விடு­ப­ட­வேண்டும் என்­பது அவர்­க­ளது போராட்டம். தேவை­யா­ன­போது தமிழ்­பேசும் மக்கள் என்று முஸ்­லிம்­க­ளையும் தம்­முடன் இணைத்­துக்­கொள்­வார்கள். ஆனால் பெரும்­பான்மைத் தமிழ்­பேசும் மாவட்­டங்­க­ளான அம்­பா­றைக்கும் திரு­கோ­ண­ம­லைக்கும் தமிழ்­பேசும் அரச அதி­பர்­களை நிய­மிக்­கக்­கோ­ர­மாட்­டார்கள். அவர் ஒரு முஸ்­லி­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக ஆனால் தமி­ழுக்­காக போரா­டு­கி­றார்கள்.

இந்த நாட்டின் ஆட்­சி­யா­ளர்கள் தொடர்ச்­சி­யாக பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள். ஆனாலும் இவ்­வி­ரண்டு மாவட்­டங்­க­ளிலும் சிறு­பான்­மை­யாக வாழும் சிங்­க­ள­வர்­களின் நலன்­களைப் பாது­காப்­ப­தற்­காக அர­சாங்கம் அவர்­களின் கைகளில் இருந்தும் சிங்­க­ள­வர்­க­ளையே அரச அதி­பர்­க­ளாக நிய­மிக்­க­வேண்டும் என்­பது எழு­தாத விதி.

இந்­நி­லையில் கல்­முனைக் கரை­யோர மாவட்­டத்தை முஸ்­லிம்கள் கோரி­நிற்­கி­றார்கள். ஆனால் தமிழ்த்­த­ரப்­பினர் எதிர்க்­கின்­றார்கள். ஏன்? முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாகி விடு­வார்கள் என்­ப­தனால். தமி­ழர்­களா? சிங்­க­ள­வர்­களா? என்றால் அது “ தமி­ழர்­களே”. சிங்­க­ள­வர்கள் பேரி­ன­வா­திகள் என்­பது அவர்­க­ளது நிலைப்­பாடு. அப்­பொ­ழுது ‘ தமிழ்­பேசும் சமூகம்’ என்ற பதமும் பாவிக்­கப்­படும். ஆனால் ஒரு அதி­காரி ‘ முஸ்­லிமா? சிங்­க­ள­வரா? என்றால் அவர்­க­ளது பதில் ‘ சிங்­க­ள­வர்தான்’ என்­ப­தாகும்.

அப்­பொ­ழுது சிங்­க­ள­வர்கள் ‘ ரத்­தத்தின் ரத்தம்’. முஸ்­லிம்கள் விரோ­திகள். 1987ம் ஆண்­டு­வரை எது­வித பிரச்­சி­னை­யு­மில்­லாமல் இருந்த கல்­முனை பட்­டின சபை எல்­லைக்குள் ஒரு மாந­க­ர­ச­பையை நிறு­வு­வ­தற்கு அவர்கள் உடன்­பட மாட்­டார்கள். ஆனால் சமஷ்­டிக்கு முஸ்­லிம்கள் ஆத­ர­வ­ளிக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் பிர­தேச செய­லாளர் இருக்கும் பிர­தேச செய­ல­கப்­பி­ரிவை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள்; தனி­யாக பிர­தேச செய­லகம் வேண்டும். ஆனால் அதி உச்ச அதி­கார பகிர்­வுக்கு முஸ்­லிம்கள் உடன்­பட வேண்டும். முஸ்­லிம்­க­ளையும் சேர்த்து ஆள்­வ­தற்கு இணைப்­பிற்கு உடன்­பட வேண்டும்.

ஆளுநர் நிய­மனம்

வட கிழக்­கிற்கு சிங்­க­ள­வர்தான் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற எழு­தாத விதி கடந்த 30 ஆண்­டு­க­ளாக இருந்து வந்­தது. அவ்­விதி தகர்க்­கப்­பட்டு இம்­முறை வடக்­கிற்கு ஒரு தமி­ழரும் கிழக்­கிற்கு ஒரு முஸ்­லிமும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். கிழக்­கிற்கு ஒரு முஸ்லிம் ஆளுநர் நிய­மிக்­கப்­பட்­டதை அவர்­களால் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை.

தமி­ழுக்­காகப் போராடும் தமிழ்த்­த­லை­மைகள், பேரி­ன­வா­தத்தின் பிடி­யி­லி­ருந்து தமிழ்­பேசும் பிர­தே­சங்­களை விடு­விக்­கப்­போ­ராடும் தமிழ்த்­த­லை­மைகள் கிழக்­கிற்கு ஒரு தமிழ்­பேசும் மகன் நிய­மிக்­கப்­பட்­டதை ஏற்­றுக்­கொள்ளத் தயா­ரில்லை அவன் முஸ்லிம் என்ற ஒரே கார­ணத்­திற்­காக. ஆனால் ஒரு இன­வாத சிங்­க­ள­வரை நிய­மித்­தாலும் அல்­லது தமிழ்ப்­போ­ரா­ளி­களை அழித்த ஒரு முன்னாள் ராணுவ அதி­காரி அல்­லது கடற்­படை அதி­கா­ரியை நிய­மித்­தாலும் ஏற்­றுக்­கொள்­வார்கள் அவர் முஸ்­லி­மாக இல்­லா­த­வரை.

இன­வாதம் எங்கே இருக்­கின்­றது என்று பாருங்கள். இந்த யதார்த்­தத்­திற்கு மத்­தி­யில்தான் நம்­ம­வர்­களின் நிலை என்­ன­வென்று சொல்­லாமல் புதிய யாப்பில் தமி­ழர்­களின் தேவையை நிறை­வேற்­றிக்­கொள்ள முஸ்­லிம்கள் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டுமாம் என்று நம் தலை­வர்கள் என்­ப­வர்கள் பேசு­கின்­றார்கள்.

புதிய யாப்பும் அதி­கா­ரப்­ப­கிர்வும்

அதி­கா­ரப்­ப­கிர்வு முஸ்­லிம்­க­ளுக்கு சாத­கமா? பாத­கமா? என்­ப­தி­லேயே பல­ருக்கு குழப்பம். இதில் குழம்ப என்ன இருக்­கி­றது?

அதி­கா­ரப்­ப­கிர்வு எதற்கு?

பதில்: ஆட்சி செய்­வ­தற்கு.

யார் ஆட்சி செய்­வ­தற்கு?

பதில்: அந்தப் பிர­தே­சத்தில் யார் அல்­லது எந்த சமூகம் பெரும்­பான்­மை­யாக இருக்­கின்­றதோ அவர்கள் ஆட்சி செய்­வ­தற்கு.

யாரை ஆள்­வ­தற்கு?

பதில்: தம்­மைத்­தாமே ஆள்­வ­தற்கும் அங்­குள்ள சிறு­பான்­மையை ஆள்­வ­தற்கும்.

தமி­ழர்கள் எதற்­காக அதி­காரம்

கேட்­கி­றார்கள்?

பதில்: வட கிழக்கில் தம்­மைத்­தாமே ஆள்­வ­தற்கும் அங்­குள்ள சிறு­பான்­மை­களை ஆள்­வ­தற்கும்.

வடக்கில் மட்­டும்­தானே தமி­ழர்கள்

பெரும்­பான்மை?

பதில்: ஆம். கிழக்கில் அவர்கள் சிறு­பான்மை. தமிழர் அல்­லா­தவர் பெரும்­பான்மை. ஆனால் தமிழர் கிழக்­கிலும் ஆளப்­படும் சமூ­க­மாக இருக்­கக்­கூ­டாது. எனவே இணைப்பைக் கோரு­கி­றார்கள். அதா­வது கிழக்கின் தமி­ழ­ரல்­லாத பெரும்­பான்­மை­யினர் இணைப்பின் மூலம் சிறு­பான்­மை­யாக மாறி ஆளப்­பட வேண்­டு­மென்­கி­றார்கள்.

கிழக்­கிற்கு வெளி­யே­யுள்ள எட்டு மாகாணங்­களில் முஸ்­லிம்­களின்

நிலை என்ன?

பதில்: எட்டு மாகா­ணங்­க­ளிலும் முஸ்­லிம்கள் தெளி­வான சிறு­பான்மை. ஆளப்­ப­டப்­போ­கின்ற சமூகம். சமூகம் ஆளப்­ப­டு­வ­தற்­காக அதி­கப்­பட்ச அதி­கா­ரப்­ப­கிர்வைக் கோரி­நிற்­கின்ற பெரும் தலை­வர்­க­ளைக்­கொண்ட சமூகம்.

ஒரு அர­சாங்­கத்­தின்கீழ் இருந்­து­கொண்டே எமது பாது­காப்­பிற்கு உத்­த­ர­வா­த­மில்லை. எமது இன்­னோ­ரன்ன உரி­மைக்­ளுக்குப் பாது­காப்­பில்லை என்று அழுது புலம்பி ஒரு ஆட்­சியை மாற்றி வந்த ஆட்­சியும் பாது­காப்­புத்­த­ராமல் திக­னயில் உயிர், பொருள் இழந்த சமூகம்.

அந்த சமூகம் எட்டு அர­சாங்­கங்­களால், அதுவும் அதி­க­பட்ச அதி­கா­ரம்­கொண்ட அர­சாங்­கங்­களால், அதிலும் மத்­திய அர­சாங்கம் என்­ன­வென்றும் கேட்­க­மு­டி­யாத சமஷ்­டித்­தன்­மை­கொண்ட அர­சாங்­கங்­களால் அதிலும் குறிப்­பாக பொலிஸ் அதி­கா­ரமும் சேர்த்து வழங்­கப்­ப­டு­கின்ற அர­சாங்­கங்­களால் மறு­புறம் நாம் அடி­யோடு பிர­தி­நி­தித்­துவப் படுத்­தப்­ப­டாத                                                      (ஊவா, சப்­ர­க­முவ, தெற்கு) அல்­லது சொல்­லும்­ப­டி­யான பிர­தி­நி­தித்­துவம் இல்­லாத (வடக்கு, வட­மத்தி) மற்றும் ஓர­ளவு பிர­தி­தித்­து­வத்தை மாத்­தி­ரம்­கொண்ட (மேற்கு, மத்தி, வட­மேற்கு) அர­சாங்­கங்­களால் அதிலும் குறிப்­பாக மத்­திய அரசின் பிர­தி­நி­தி­யான அதி­காரம் கொண்ட ஆளு­நரின் பல்லுப் பிடுங்­கப்­பட்ட, அந்த ஆளு­ந­ரைக்­கொண்டு மத்­திய அரசு தலை­யிட முடி­யாத அர­சாங்­கங்­களால் நாங்கள் ஆளப்­ப­டு­வ­தற்கு அதி­கா­ரப்­ப­கிர்வு கேட்கும் முஸ்லிம் தலை­வர்­க­ளைக்­கொண்ட சமூகம் நாம். இதுதான் எட்டு மாகா­ணங்­களில் நம­து­நிலை.

கிழக்கில் நாம் சிறு­பான்மை இல்­லையே! கிழக்கில் அதி­கா­ரப்­ப­கிர்வு நமக்கு சாத­க­மில்­லையா? நமது காணி­களும் பறி­போ­கின்­ற­னவே! காணி அதி­காரம் கிடைத்தால் பாது­காக்க முடி­யாதா?

பதில்: நாம் சிறு­பான்மை இல்­லைதான். ஆனால் நாம் தனிப்­பெ­ரும்­பான்­மையும் இல்­லையே! ஆளு­வ­தாக இருந்தால் கூட்­டாட்சி. கிழக்­கிற்கு வெளியே முஸ்­லிம்­களை ஆக்­கி­ர­மிக்கும் சக்தி பேரி­ன­வா­த­மென்றால் கிழக்கில் சிற்­றி­ன­வாதம்.

முஸ்லிம் முத­ல­மைச்சர் வேண்­டு­மென்று போரா­டினோம். கூட்­டாட்­சியில் பெற்றோம். என்ன செய்­ய­மு­டிந்­தது. ஒரு சாதா­ரண வீதிக்கு பெயர் மாற்றம் செய்ய முடி­யாத முஸ்லிம் முத­ல­மைச்சர் பதவி. ஏன் முடி­ய­வில்லை? தமிழ்த்­த­ரப்­பினர் விரும்­ப­வில்லை.

இதன்­பொருள் முஸ்லிம் முத­ல­மைச்­சரைப் பெற்­றாலும் அவர் கூட்­டாட்­சியில் பொம்மை முத­ல­மைச்சர். தமிழ்­த­ரப்பு எதிர்க்­காத விட­யங்­களை மாத்­தி­ரம்தான் செய்­யலாம். கிழக்கில் எங்கள் பிரச்­சி­னை­களில் பாதிக்­குமேல் தமி­ழர்­க­ளுடன் பின்­னிப்­பி­ணைந்­தவை. தீர்க்க விடு­வார்­களா? கடற்­க­ரைப்­பள்ளி வீதி பெயர்­மாற்ற விவ­காரம் மத்­திய அர­சாங்­கத்­திடம் அதி­காரம் இருந்­தி­ருந்தால் சில­வேளை எப்­போதோ செய்­தி­ருக்­கலாம். இது ஒரு பானைச் சோற்­றுக்கு ஒரு சோறு பதம் என்­பது போன்­ற­தாகும்.

சில­வேளை முஸ்­லிம்கள் இல்­லாமல் பேரி­ன­வா­தமும் சிற்­றி­ன­வா­தமும் இணைந்து கிழக்கில் ஆட்­சி­ய­மைத்தால் (அதி­கப்­பட்ச அதி­காரம், பொலிஸ் அதி­காரம் வழங்­கு­கின்­ற­போது) நிலை­மையைச் சிந்­தித்­துப்­பா­ருங்கள்.

 

காணி அதி­காரம் கிடைத்தால் எமது காணி­களைப் பாது­காக்­க­லாமா?

எமது காணிப்­பி­ரச்­சினை இரு­பு­றமும் இருக்­கின்­றது. உதா­ரணம் சம்­மாந்­துறை கரங்கா காணி. இவை உறு­திக்­கா­ணிகள். இவற்­றிற்கும் காணி அதி­கா­ரத்­திற்கும் என்ன தொடர்பு. இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்­திய காணி. அர­சாங்கம் ஒரு உத்­த­ர­விட்டால் நாளையே வெளி­யேற்­றலாம்.

யுத்தம் நடந்த பூமி­யான வடக்­கி­லேயே ராணுவம் காணி­களை விடு­விக்­கும்­போது நாம் கையா­லா­க­த­வர்­க­ளாக இருக்­கின்றோம். காணி அதி­காரம் எங்கே பயன்­படும் என்றால் அர­ச­கா­ணிகள் மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்கும் விட­யத்தில். அங்கு சிங்­க­ள­வர்­களைக் குடி­யேற்­று­வதைத் தடுப்­ப­தற்கு. உறு­திக்­கா­ணிக்கும் அதற்கும் என்ன தொடர்பு.

அஷ்ரப் நகர். இராணுவ ஆக்­கி­ர­மிப்பு. அங்கு இப்­பொ­ழுது யுத்­தமா நடக்­கி­றது இராணுவம் நிலை­கொள்ள. மாகா­ண­ச­பைக்கு காணி அதி­காரம் வழங்­கினால் ராணு­வத்தை வெளி­யேற உத்­த­ர­வி­ட­மு­டி­யுமா? ஒன்­பது மாகா­ணமும் அவ்­வாறு உத்­த­ர­விட்டால் ராணு­வத்தை வெளி­நாட்­டிலா கொண்­டுபோய் வைப்­பது? எனவே, ராணுவ விவ­கா­ரங்­களில் மாகா­ண­சபை தலை­யி­ட­மு­டி­யாது. ஆனால் நம்ம­வர்­களின் நாக்கில் பலம் இருந்தால் மத்­திய அரசின் ஒரு உத்­த­ரவின் மூலம் வெளி­யேற்­றலாம்.

வட்­ட­மடு காணி: யாருடன் இணைந்த பிரச்­சினை – தமி­ழர்­க­ளுடன் இணைந்த பிரச்­சினை. கூட்­டாட்­சியில் தீர்­வு­காண விடு­வார்­களா? மட்­டக்­க­ளப்பில் 15000 ஏக்கர் முஸ்­லிம்­களின் காணி- விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு இன்னும் தமி­ழர்­களின் ஆதிக்­கத்தில் இருக்­கின்­றது. தீர்­வு­காண விடு­வார்­களா? இது­வரை தீர்த்­தி­ருக்க வேண்­டி­யவை. நமது மேடைப்­பேச்சு வீரர்­களின் இய­லாமை.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 1/4 பங்கு முஸ்லிம். 1/20 பங்கு நிலம்­கூட அவர்­க­ளுக்கு இல்லை. காணிகள் எல்லாம் தமிழ் பிர­தே­சங்­களில். காணி அதி­காரம் வழங்­கப்­பட்டால் குடி­யேற அனு­ம­திப்­பார்­களா? இன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஹிஸ்­புல்­லா­வினால் கட்­டப்­படும் பல்­கலைக் கழகம். கல்­வியில் மாத்­தி­ர­மல்ல மட்­டக்­க­ளப்பு முஸ்­லிம்­களின் குடி­யேற்­றப்­ப­ரம்­ப­லிலும் பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கின்­றது. மாகா­ண­ச­பை­யிடம் காணி அதி­காரம் இருந்­தி­ருந்தால் அனு­ம­தித்­தி­ருப்­பார்­களா?

எனவே, கிழக்கு மாகா­ணத்­திற்கு அதி­கா­ரத்தைக் கொடுத்தால் இவற்­றை­யெல்லாம் சாதிக்­கலாம் என யாரா­வது பட்­டி­ய­லி­ட­மு­டி­யுமா?

மாகாண அதி­காரம் மத்­திய அர­சிடம்

அதி­கா­ரப்­ப­கிர்வு இல்­லாமல் மத்­திய அர­சிடம் அதி­காரம் இருக்­கு­மானால் முஸ்லிம் பிர­தே­சங்­களில் நடை­முறை அதி­காரம் முஸ்லிம் பா உறுப்­பி­னர்­க­ளிடம், அமைச்­சர்­க­ளி­டம்தான் இருக்­கப்­போ­கின்­றது. கிழக்கு உள்­ளக நிர்­வா­கத்தைப் பொறுத்­த­வரை பேரின அரசு பெரி­தாக அக்­கறை செலுத்­தப்­போ­வ­தில்லை. எனவே, நமது பிர­தி­நி­தி­கள்தான் அங்கு யதார்த்த ஆட்­சி­யா­ளர்கள். இதுதான் 90இற்கு முதல் இருந்­தது.

எனவே, அதி­கா­ரப்­ப­கிர்­வினால் கிழக்கில் பாரிய நன்­மை­களை நாம் அடை­யப்­போ­வ­தில்லை. ஆனால் நிறையப் பிரச்­சி­னை­களைச் சந்­திக்­கப்­போ­கின்றோம்.

எனவே, ஆள­மு­டி­யாத நாம் எதற்­காக அதி­காரம் கேட்­கின்றோம். சிலர் தனி­ய­லகு என்­கின்­றனர். அது நல்ல விடயம். மறுக்­க­வில்லை. நம்மை நாம் ஆளும் கோட்­பாடு. ஆனால் நடை­முறைச் சாத்­தி­யமா? சாத்­தியம் என்­ப­வர்கள் விளக்­குங்கள். இது தொடர்­பாக நான் ஏற்­க­னவே விரி­வான ஆக்­கங்­களை எழு­தி­யி­ருக்­கின்றேன்.

மறைந்த தலைவர் தனி­அ­லகு கேட்டார். அதுதான் தீர்வு என்­ப­த­னாலா கேட்டார். அன்று, என்­றுமே பிரிக்க முடி­யாது; என்ற தோற்­றத்தில் வட கிழக்கு இருந்­த­போது மாற்­று­வ­ழி­யின்றி கேட்டார். Something is better than nothing என்பதுபோல்.எரிகின்ற வீட்டில் பிடிங்கியவரை லாபம்தான். அதற்காக யாராவது வீட்டை எரித்து எதையாவது பிடுங்குவோம் என்பார்களா? இது புரியாமல் பிரிந்திருக்கும் வட கிழக்கை இணைத்துவிட்டு தனிஅலகு தாருங்கள்; என்கிறார்கள். தனிஅலகு கிடைத்திருந்தால் ஹிஸ்புல் லாவின் பல்கலைக் கழகம் அந்த இடத்தில் சாத்தியப்பட்டிருக்குமா? அல்லது எதிர்காலத்தில் அங்கு குடியேற்றம்தான் சாத்தியப்படுமா?

எனவே, வெறுமனே மொட்டையாக அதிகாரப் பகிர்வை ஆதரிப்பவர்கள் கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களின் எதிர் காலத்திற்கு வழிசொல்லுங்கள். கிழக்கில் எந்தவகையில் அது முஸ்லிம்களுக்கு பிரயோசனம் என விரிவாக விளக்குங்கள்.

இந்து கலாச்சார அமைச்ச ராக ஒரு சிங்களவரை ஏற்றுக் கொள்ளும் மனோநிலை உள்ளவர்கள் ஒரு பிரதி அமைச்சர் முஸ்லிம் என்பதனால் ஓரத்தில் இந்து கலாசாரம் என்றொருசொல் ஒட்டிக்கொண்டதை பொறுக்கமுடிதவர்கள் ஆளுவதற்கு அதிகாரம் கேட்கின்றார்கள்; என்பதற்காக, ஒரு அரசாங்கத்தால் ஆளப்படுவதற்கு அவர்கள் ஆயத்தமில்லை என்பதற்காக ஒன்பது அரசாங்கங்களால் ஆளப்படுவதற்கு நாம் சம்மதம் என்றால் எம்மை என்னவென்பது? எம்மைவிட சிந்திக்க முடியாத சமூகம் இருக்கமுடியுமா?

அவர்கள் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் அழிய வேண்டுமா? அரசியல் அடிமைச் சமூகமாக மாறவேண்டுமா? பதுளையில் தீவைத்தால், முஸ்லிம்களின் உயிர்களுக்கு உலைவைத்தால் ஜனாதிபதியிடமும் பேசமுடியாது; பிரதமரிடமும் பேசமுடியாது. அதிகாரம்பொருந்திய முதலமைச்சரை தேடிச்செல்லும் நிலைக்காகவா ஆதிகாரப்பகிர்வை ஆதரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அதிகபட்ச அதிகாரப்பகிர்வை ஆதரிக்கமுடியுமா? எனவே சிந்தியுங்கள்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.