எமது அமைப்பின் தொடர்­பா­டல்­களை இஸ்ரேல் ஒட்டுக் கேட்க முயற்சி : ஹமாஸ்

0 660

இஸ்­ரேலின் சர்ச்­சைக்­கு­ரிய இர­க­சிய நட­வடி­க்கை ஹமாஸ் அமைப்பின் தொடர்­பா­டல்­களை ஒட்டுக் கேட்­ப­தற்­கான முயற்­சி­யாகும் என அவ்­வ­மைப்பின் இரா­ணுவப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

புல­னாய்வுத் தக­வல்­களைச் சேக­ரிக்கும் நட­வ­டிக்கை என இஸ்­ரே­லினால் தெரி­விக்­கப்­படும் நவம்பர் 11 விசேட படை நட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­பட்ட இர­க­சியப் படை­யினர் தென்­ப­குதி காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள கான் யூனிஸ் பகு­தியில் அடை­யாளம் காணப்­பட்­ட­தை­ய­டுத்து உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­ட­தாக காஸா­வினை ஆட்சி செய்­து­வரும் பலஸ்­தீனக் குழு­வான ஹமாஸ் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தது.

துப்­பாக்கி மோதல்கள் கார­ண­மாக இஸ்­ரே­லியப் படை­வீரர் ஒரு­வரும், உள்ளூர் ஹமாஸ் இரா­ணுவத் தள­பதி உள்­ள­டங்­க­லாக ஏழு பலஸ்­தீ­னர்­களும் கொல்­லப்­பட்­டனர்.

15 பேர் கொண்ட எலைட் இஸ்ரேல் இரா­ணுவப் பிரிவுப் படை­யினர் எல்லை வேலிக்கு ஊடாக காஸா­வினுள் ஊடு­ருவி உள்ளூர் தர்ம ஸ்தாபனம் ஒன்றின் வாக­னங்­களைப் போன்று வடி­வ­மைக்­கப்­பட்ட வாக­னங்­களைப் பயன்­ப­டுத்தி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தியில் பய­ணித்­துள்­ளனர் என எஸ்­ஸடீன் அல்-­கஸ்ஸாம் படை­ய­ணியின் பேச்­சாளர் அபூ ஒபைதா தெரி­வித்தார்.

காஸா பள்­ளத்­தாக்கில் இடம்­பெ­று­கின்ற எதிர்ப்­பு­ணர்வு வலை­ய­மைப்பின் தொடர்­பா­டல்கள் தொடர்­பான உளவுத் தக­வல்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான முறை­மை­யொன்றை உரு­வாக்­கு­வதே அவர்­க­ளது நோக்­க­மாக இருந்­தது எனத் தெரி­வித்த அபூ ஒபைதா, அப் படை­யினர் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­படும் காணொ­லி­யையும் காட்­சிப்­ப­டுத்­தினார்.

அக் குழு­வி­னரால் பயன்­ப­டுத்­தப்­பட்ட உப­க­ர­ணங்­களும் ஹமாஸ் அமைப்­பினால் கைப்­பற்­றப்­பட்­டன. செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குவோர் தொடர்­பான தக­வல்­களை வழங்­கு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொலர் சன்­மானம் அளிக்­கப்­படும் எனவும் அபூ ஒபைதா உறு­தி­ய­ளித்தார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கான் யூனிஸ் சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து 45 பலஸ்­தீன ஒத்­து­ழைப்­பா­ளர்­களைக் கைது செய்­த­தாக ஹமாஸ் அறி­வித்­தது.

இந்தச் செயற்­பாட்­டுடன் தொடர்­பு­ப­டுத்தி எட்டுப் பேரி­னதும், இரண்டு வாக­னங்­க­ளி­னதும் புகைப்­ப­டங்­களை ஏலவே ஹமாஸ் வெளி­யிட்­டுள்ள நிலையில், இதனை மீள் பிர­சுரம் செய்ய வேண்டாம் என இஸ்­ரே­லிய இரா­ணுவப் பிரிவு பொது­மக்­க­ளி­டமும் ஊட­கங்­க­ளி­டமும் இஸ்ரேல் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.