புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்

0 816

எமது நாட்­டுக்கு காலத்­துக்­கேற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற யோச­னை­யொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு அது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது.

இதற்­கி­ணங்­கவே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் பிர­தி­நி­தித்­துவப் படுத்தி அர­சி­ய­ல­மைப்புச் சபை உரு­வாக்­கப்­பட்­டது. அதற்­கான வழி­ந­டத்தல் குழுவும் அமைக்­கப்­பட்­டது. வழி­ந­டத்தல் குழுவை அர­சி­ய­ல­மைப்புச் சபையே நிய­மித்­தது. ஆனால் இதுவரை புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கும் பணிகள் பூரணப்படுத்தப்படவில்லை.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்புச் சபை பாரா­ளு­மன்­றத்தில் கூடி­ய­வேளை வழி­ந­டத்தல் குழுவின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ரம­சிங்க அர­சி­ய­ல­மைப்­புக்­கான நிபு­ணர்கள் மற்றும் சட்ட வல்­லு­நர்­களின் அறிக்­கையைச் சமர்ப்­பித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தில் வடக்கு கிழக்கு இணைப்போ, சமஷ்­டியோ கிடை­யாது. மற்றும் பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை, ஒற்­றை­யாட்சி போன்ற விட­யங்­களில் எந்த மாற்­றங்­களும் செய்­யப்­ப­ட­மாட்­டாது. புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்க அனைவரும் ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என பிரதமர் வேண்டிக் கொண்டார்.

இச் சந்­தர்ப்­பத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்  ஷ கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டுள்ளார். “ஒரு இனம் இன்­னு­மொரு இனத்தை அடக்கி ஒடுக்கி ஆள முடி­யாது. இன­மொன்றைப் பகைத்துக் கொண்டு ஒரு பிரி­வி­ன­ருக்கு மாத்­திரம் உரி­மை­களைப் பெற்றுக் கொடுக்க முடி­யாது. அவ்­வாறு செய்தால் வைராக்­கி­யமே உரு­வாகும்” என தெரி­வித்­துள்ளார்.

“தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­தினால் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முடி­யாது. தேர்­த­லுக்கு வாருங்கள். தேர்­தலின் போது ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் புதிய அர­சி­ய­ல­மைப்பு யோசனை முன்­வைக்­கப்­ப­டட்டும். நாங்­களும் எங்கள் யோச­னை­களை முன்­வைக்­கிறோம். மக்கள் ஆணையை இதன்­போது பெற்றுக் கொள்வோம். நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கா இன்றேல் பாது­காப்­ப­தற்கா மக்கள் ஆணை வழங்­கு­கி­றார்கள் என்று பார்ப்போம்” என சவால் விட்­டுள்ளார்.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் கானல் நீரா­கவே மாறியுள்ளது. வழி­ந­டத்தல் குழு­வினால் தயா­ரிக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பு வரைபு அர­சி­ல­மைப்பு சபைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு 2/3 பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட வேண்டும். இல்­லையேல் அர­சி­ய­ல­மைப்பு சபை வழி­ந­டத்தல் குழு மற்றும் அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்கும் செயற்­பா­டுகள் முடி­வ­டைந்­து­விடும். 2/3 பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்டால் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். பின்பு வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்டு மாகாண சபை­களின் கருத்­து­களும் பெறப்­பட்­டதன் பின்பு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து 2/3 பெரும்­பான்மை பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடாத்­தப்­பட்­டாலும் அதில் ஜனா­தி­பதி கையொப்பம் இட்­டாலே அர­சி­ய­ல­மைப்பு ஏற்றுக் கொள்­ளப்­படும்.

இவ்­வாறு பல படி­களைத் தாண்டி புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக வேண்­டி­யுள்­ளது. முழு பாரா­ளுமன்­றமும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்­டன. வழி­ந­டத்தல் குழு 83 தட­வைகள் கூடி­யுள்­ளது. ஆனால் இது­வரை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைபு தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த தலை­மை­யி­லான அணியினர் இனவாத கருத்துக்களை கூறி வருகின்றனர். பிரதான பௌத்த மத பீடங்களும் இதனையே கூறியுள்ளன. இது நாட்டில் அசாதாரண நிலையினை உருவாக்கும் முயற்சியாகும். நல்லிணக்கத்தையும் இன நல்லுறவினையும் சிதைக்கும் சதியாகும்.

நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழுவதற்கான புதிய அரசியலமைப்பொன்றுக்கு அரசியல் மற்றும் இன, மத வேறபாடின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.