தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சிங்கள – முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடே தீர்வுகாண முடியாமைக்கு காரணம்

மேயர் ஜாலிய ஒபாத தெரிவிப்பு

0 802

‘சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் தலை­யீட்­டி­னா­லேயே தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யா­ம­லி­ருக்­கி­றது.  தம்­புள்ளை முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி இப் பிரச்­சி­னைக்கு தாம­த­மில்­லாமல் தீர்வு காண வேண்டும்’ என தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தெரி­வித்தார்.

தம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­மா­ணிப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை தம்­புள்ளை ஓய்வு விடு­தியில் (ரெஸ்ட் ஹவுஸ்) இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பிர­தி­நி­திகள், தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத ஆகியோர் கலந்து கொண்­டனர். வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடல் தொடர்பில் வின­வி­ய­போதே தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்;

‘நாட்டில் இடம்­பெற்ற 30 வருட கால யுத்­தத்தில் வடக்கு, கிழக்கு பகுதி முஸ்­லிம்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர். வடக்­கி­லி­ருந்து அவர்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். அவர்­க­ளிடம் கப்பம் அற­வி­டப்­பட்­டது. பலர் உயிர்­களைப் பலி கொடுத்­தனர். நாட்டில் மீண்டும் இவ்­வா­றான நிலை உரு­வாகக் கூடாது. முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் நல்­லு­ற­வுடன் வாழ­வேண்டும். அதற்கு பிரச்­சி­னைகள் சுமு­க­மாகத் தீர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும்.

வெள்­ளிக்­கி­ழமை நடந்த கலந்­து­ரை­யாடல் எவ்­வித தீர்­மா­னங்­க­ளு­மின்றி முடி­வுற்­றது. தொடர்ந்தும் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­படும். எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நலன்­க­ருதி பிரச்­சி­னைகள் சுமு­க­மாக தீர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும். சிங்­கள மற்றும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தங்­க­ளது சுய­ந­லன்­க­ரு­தியே தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் செயற்­ப­டு­கின்­றனர். அவர்கள்  தூர­நோக்­கோடு செயற்­பட வேண்டும் என்றார்.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னரும் மாத்­தளை, இரத்­தோட்டை, தொகு­தி­க­ளுக்­கான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் அமைப்­பா­ள­ரு­மான எஸ்.வை.எம். சலீம்தீன் கருத்து தெரி­விக்­கையில்;

‘தம்­புள்ளை மேயர் தம்­புள்­ளை­யி­லி­ருந்தும் 19 கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்ள நிக்­க­வட்­ட­வன பகு­தி­யிலே தம்­புள்ளை பள்­ளி­வா­சலை நிர்­ம­ணிக்க காணி­யொன்று தரு­வ­தாக கூறு­கிறார்.

பள்­ளி­வாசல் ஐவேளை தொழு­வ­தற்கு வச­தி­யாக தம்­புள்­ளை­யி­லேயே அமைய வேண்டும். அதனால் தம்­புள்­ளை­யி­லேயே காணி வழங்­கப்­பட வேண்டும். நிக்­க­வட்­ட­வன பகு­திக்கு பள்­ளி­வா­சலை அகற்­றிக்­கொள்ள நாம் தயா­ராக இல்லை.

முன்னாள் அமைச்சர் சம்­பிக்­க­ர­ண­வக்­க­வினால் ஏற்­க­னவே காணி­யொன்று ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அக்­காணி பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து 150 மீற்­றர்­க­ளுக்­கப்பால் புனித பிரதேச எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. அக்காணியே எமக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை.

இவ்விகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.