மள்வானையில் அதிகாலை வேளையில் நான்கு கடைகள் தீயில் எரிந்து நாசம்

0 825

மள்வானை ரக்ஸபானையில் கடைத்தொகுதி ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீயினால் நான்கு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மள்வானை ரக்ஸபானையில் கடைத் தொகுதியொன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தீப்­பி­டித்­துள்­ளது.

இதனால் அந்த கடைத்­தொ­கு­தி­யி­லி­ருந்த சுமார் நான்கு கடைகள் முற்­றாக எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்­ளன. குறித்த கடைத்­தொ­கு­தி­யி­லி­ருந்த புடைவைக் கடை­யி­லேயே முதலில் தீப்­பற்­றி­யுள்­ள­துடன் பின்னர்  ஏனைய கடை­க­ளுக்கும் தீ பர­வி­யுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்று அதி­காலை 1.30 மணி­ய­ளவில் புடைவை (கட் பீஸ்) கடைக்குள் தீப்­பற்றி எரி­வதை அருகில் இருக்கும் குடி­யி­ருப்­பா­ளர்கள் கண்டு சப்­த­மிட்­டுள்­ளனர். அத­னைத்­தொ­டர்ந்து அங்கு குழு­மிய பிர­தேச மக்கள் தீய­ணைப்பு படை மற்றும் பொலிஸ் அவ­சர பிரி­வுக்கு அறி­வித்­துள்­ளனர். இருந்­த­போதும் தீய­ணைப்பு படை குறித்த இடத்­துக்கு வரு­வதில் ஏற்­பட்ட தாம­தத்தால் கடைத்­தொ­குதி முற்­றாக தீயில் எரிந்து சாம்­ப­ரா­கி­ய­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன் பிய­கம தீய­ணைப்பு பிரி­வுக்கு அறி­வித்து சுமார் ஒரு மணி நேரத்­துக்கு பின்­னரே தீய­ணைப்பு படை­யினர் குறித்த இடத்­துக்கு வந்­த­தா­கவும் அவர்­களின் தீய­ணைப்பு பெள­சரில் போது­மா­ளவு நீர் இருக்­க­வில்லை என்றும் அங்­கி­ருந்­த­வர்கள் தெரி­வித்­தனர். பெள­ச­ரி­லி­ருந்த நீர் முடி­வ­டைந்த பின்­னரும் தீ தொடர்ந்து பற்றிக் கொண்­டி­ருந்­த­தா­கவும் அங்­கி­ருந்­த­வர்கள் தெரி­வித்­தனர்.

அத்­துடன் குறிப்­பிட்ட கடைத்­தொ­குதி களனி ஆற்­றுடன் இணைந்­த­தா­கவே அமைந்­துள்­ளது. தீய­ணைப்பு வாக­னத்தில் நீர் நிறை­வ­டைந்­ததும் களனி ஆற்­றி­லி­ருந்து நீரை குழாய் ஊடாக எடுப்­ப­தற்கு முயற்­சித்த போதிலும் அதற்குத் தேவை­யான குழாய்கள் தீய­ணைப்பு படை­யி­ன­ரிடம் இருக்­க­வில்லை. அதனால் பிர­தே­ச­வா­சிகள் அங்­கி­ருந்த வீடு­களில் இருந்து நீர் குழாய்­களை கொண்­டு­வந்து பொருத்­தியே ஆற்றில் இருந்து நீரை எடுத்து தீயை அணைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­கவும் பிர­தேச மக்கள் தெரி­வித்­தனர்.

மேலும் கடைத்­தொ­கு­திக்கு ஏற்­பட்ட தீயா­னது நாச­கார செயலா அல்­லது வேறு கார­ணங்­களா என்­பது தொடர்­பாக பிய­கம பொலிஸார் பல கோணங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் குறித்த ஆடை கடையானது ரக்ஸபானையைச் சேர்ந்த  பியகம பிரதேச சபை உறுப்பினரான அரசியல்வாதி ஒருவரின் சகோதரருடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்­ளி­வாசல் அறிக்கை

இதே­வேளை குறித்த தீ விபத்துச் சம்­பவம் தொடர்பில் ரக்­ஸ­பான ஜும்ஆ  பள்­ளி­வாசல் நிர்­வாகம் நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெ ளியிட்­டுள்­ளது. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

எமது பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான காணியில் அமைந்­துள்ள நான்கு கடைகள் தீயில் முற்­றாக சேத­முற்­றமை தொடர்­பாக பல்­வேறு செய்­திகள் சமூக ஊட­கங்­களில் பரப்­பப்­ப­டு­கின்­றன.

இது­வரை கிடைத்­துள்ள ஆதா­ரங்­களின் படி  கடைத்­தொ­கு­தியின் பின்னால் இருந்த சிறிய குப்பை மேட்டில் ஏற்­பட்ட தீ விரை­வாகப் பர­வி­யதால் மேற்­படி கடைகள் எரிந்­தன என்று தெரி­ய­வந்­துள்­ளது.

எனவே இத் தீ விபத்து இன ரீதி­யாக மேற்­கொள்ளப் பட்ட தாக்­குதல் என்ற ரீதியில் செய்­தி­களைப் பரப்­பு­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு  கேட்டுக் கொள்­கிறோம்.

மேற்­படி தீ மேலும் பர­வாமல் இருக்க கடு­மை­யாகப் போரா­டிய ஊர் ஜமா­அத்­தி­ன­ருக்கும் பொலிஸ் மற்றும் தீயணைப்புப் படையினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.