நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையற்றது

அஸ்­கி­ரிய -மல்­வத்து பீடங்கள் அர­சாங்­கத்­திற்கு தீர்க்கமாக வலி­யு­றுத்து

0 845

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்க இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மக்கள் ஆணை இல்­லா­துள்­ளதால் இப்­போ­துள்ள நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று அவ­சி­ய­மில்லை  என இலங்­கையின் பிர­தான பெளத்த பீடங்­க­ளான அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள் தெரி­வித்­துள்­ளன.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்­சிகள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அது குறித்த கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் இலங்­கையின் பிர­தான பெளத்த பீடங்­க­ளான அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடத்­தினர் இதனை தெரி­வித்­துள்­ளனர். இது குறித்து   மல்­வத்து அனு­நா­யக தேர­ரான  நியன்­கொட விஜித தேரர்  கருத்து கூறு­கையில்,

”இப்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் முன்­னெ­டுத்­துள்ள முயற்­சிகள் அவ­சி­ய­மற்ற ஒன்­றாகும். ஒரு சிலரை மாத்­திரம் இலக்கு வைத்து அவர்­களின் தேவை கரு­திய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்க முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பு முயற்­சி­களை எடுத்­த­தாக கூறு­கின்ற போதிலும் அதனை உரு­வாக்க மக்கள் ஆணை ஒன்று இல்லை. அவ்­வா­றி­ருக்­கையில் இந்த முயற்­சி­களை இத்­துடன் நிறுத்­திக்­கொள்ள வேண்டும். மக்கள் எதிர்க்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க கூடாது. அர­சாங்கம் இந்த விட­யங்­களை கருத்தில் கொண்டு செயற்­பட வேண்டும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்,

இது குறித்து அஸ்­கி­ரிய பீட அனு­நா­யகர் ஆன­ம­டுவே தம்­ம­தாச தேரர் கூறு­கையில், பாரா­ளு­மன்­றத்­திற்கு தொடர்பே இல்­லாத நிபுணர் குழு தமக்­கான அர­சி­ய­ல­மைப்பு கோரிக்கை ஒன்­றினை முன்­வைத்து அவர்­களின் கருத்­துக்­களை உரு­வாக்­கி­யுள்­ளனர். என்­ன­வாக இருந்­தாலும் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று அவ­சியம் இல்லை என்­பதே எமது ஒரே நிலைப்­பாடு. ஆரம்­பத்தில் இருந்தே இதனை நாம் முன்­வைத்து வரு­கின்றோம். வேண்­டு­மென்றால்  இப்­போ­துள்ள தேர்தல் முறை­மையில் ஏதேனும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய மாற்றம் ஒன்­றினைச் செய்­யுங்கள் என்­ப­தையே நாம் தெரி­வித்தோம். பழைய முறை­மை­யையும் புதிய முறை­மை­யையும் கையா­ளக்­கூ­டிய ஏதேனும் தேர்தல் முறைமை மாற்­ற­மொன்­றினைச் செய்­யுங்கள் என அர­சாங்­கத்­திற்கு  தெரி­வித்தோம். மக்­களின் ஆணை இல்லை, பெளத்த பீடங்­களின் அனு­மதி இல்லை, அப்­ப­டி­யென்றால் யாரு­டைய தேவைக்­காக இந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது என்ற கேள்வி எம்­மத்­தியில் எழு­கின்­றது. முதலில் அர­சாங்கம் மக்­களின் கருத்­துக்கு செவி­ம­டுக்க வேண்டும். மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற மக்கள் கருத்து உள்ளது. அதற்கமைய அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறான அவசியமற்ற காரணிகளை கொண்டு காலத்தை கடத்தி மக்களின் எதிர்ப்பினை சம்பாதிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.