பள்ளியை அகற்றுவதே சுமுக தீர்வை ஏற்படுத்தும்

0 1,375

தம்­புள்ளை புனித பூமிக்குள் பள்­ளி­வா­ச­லொன்று இருக்க முடி­யாது. அங்­கி­ருந்து பள்­ளி­வா­சலை அகற்­று­வதன் மூலமே அப்­ப­கு­தியில் சுமு­க­மான நிலை­யினை உறு­திப்­ப­டுத்த முடியும். தம்­புள்ளை பள்­ளி­வா­சலை புதி­தாக நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு நிக்­க­வட்­ட­வன பகு­தியில் பன்­ச­லைக்கு சொந்­த­மான காணியில் 5 ஏக்கர் வேண்­டு­மென்­றாலும் வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறோம் என தம்­புள்ளை மேயர் தாலிய ஒபாத தெரி­வித்தார்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ன­ருடன் நடாத்தி வரும் பேச்­சு­வார்த்­தை­களின் முன்­னேற்றம் பற்றி வின­விய போதே அவர் ‘விடி­வெள்ளி’ க்கு இவ்­வாறு தெரி­வித்தார். அடுத்­த­கட்ட பேச்­சு­வார்த்தை எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், எமது நாட்டில் சிங்­கள – தமிழ் கல­வ­ரங்கள் இடம்­பெற்று, அத­னிலும் மேலாக யுத்­த­மொன்று பல அழி­வுகள் ஏற்­பட்டு விட்­டது. முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் தோன்றி கல­வ­ரங்கள் உரு­வாக இட­ம­ளிக்க முடி­யாது. நான் தம்­புள்­ளையின் மேயர் என்ற வகையில் பள்­ளி­வாசல் பிரச்­சி­னையைத் தீர்த்து வைக்க விரும்­பு­கிறேன்.

இந்தப் பிரச்­சினை பல வரு­டங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அர­சி­யலும் இதற்குக் கார­ண­மாகும். உண்­மையில் தம்­புள்­ளையில் இருக்கும் பள்­ளி­வாசல் ஆரம்­பத்தில் ஒரு கடை­யாக இருந்தே உரு­வா­கி­யுள்­ளது. இப்­போது அதனை பள்­ளி­வா­ச­லென்று கூற­மு­டி­யாது. தம்­புள்ளை நகரில் 7 முஸ்லிம் குடும்­பங்­களே உள்­ளன. ஏனைய முஸ்­லிம்கள் வெளி­யி­டங்­களைச் சேர்ந்­த­வர்கள். தம்­புள்ளை புனித பூமிக்குள் இருந்து அகற்­றப்­படும் முஸ்­லிம்­க­ளுக்கு நஷ்ட ஈடு­களும் வழங்­கப்­படும்.

நிக்­க­வட்­ட­வன பகு­தியில் பன்­ச­லைக்கு சொந்­த­மான காணியில் எந்­த­ளவு வேண்­டு­மென்­றாலும் வழங்க முடியும். பள்­ளி­வா­சலை தாம் விரும்­பி­ய­வாறு தீர்­மா­ணித்துக் கொள்­ள­மு­டியும். புனித பூமிக்குள் பள்­ளி­வாசல் இருப்­பதால் பிரச்­சி­னைகள் உரு­வா­கு­வதை நான் விரும்­ப­வில்லை.

இந்­தப்­பி­ரச்­சி­னைக்கு எனது பத­விக்­கா­லத்தில் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கவே பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி வரு­கின்றேன் என்றார்.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் எம்.ஐ.எம். கியாஸை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார். தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு காணி ஒதுக்­கித்­த­ரு­வ­தாகக் கூறப்­படும் நிக்­க­வட்­ட­வன பகுதி தம்­புள்­ளை­யி­லி­ருந்து 18 மைல்­க­ளுக்கு அப்பால் இருக்­கி­றது, அங்கு தற்­போது ஜும்ஆ பள்­ளி­யொன்றும் இயங்கி வரு­கி­றது. அப்­ப­கு­தியில் சுமார் 600 முஸ்லிம் குடும்­பங்கள் இருக்­கின்­றன. தம்­புள்­ளை­யி­லி­ருந்து 18 கிலோ­மீற்­றர்­க­ளுக்­கப்பால் பள்­ளி­வா­சலை நகர்த்­து­வது நியா­ய­மற்­றது. இறு­தி­யாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் காலத்தில் புனித பூமி எல்­லைக்குள் 20 பர்ச் காணி ஒதுக்­கப்­பட்டு அதுவும் இழு­ப­றி­நி­லையில் இருந்­தது என்றார்.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரங்கிரி ரஜ மகா விகாரையின் தலைமை குரு இதன் பின்னணியில் இருந்தார். அன்றிலிருந்து இதுவரை தம்புள்ளை பள்ளிவாசல்  விவகாரம் இழுபறிநிலையில் இருக்கிறது. பள்ளிவாசல் புனித பூமியில் இருக்கக் கூடாது அப்புறப்படுத்தப்பட வேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.                    தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ன­ருடன் நடாத்தி வரும் பேச்­சு­வார்த்­தை­களின் முன்­னேற்றம் பற்றி வின­விய போதே அவர் ‘விடி­வெள்ளி’ க்கு இவ்­வாறு தெரி­வித்தார். அடுத்­த­கட்ட பேச்­சு­வார்த்தையை இன்று வெள்­ளிக்­கி­ழமை நடாத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், எமது நாட்டில் சிங்­கள – தமிழ் கல­வ­ரங்கள் இடம்­பெற்று, அத­னிலும் மேலாக யுத்­த­மொன்றில் பல அழி­வுகள் ஏற்­பட்டு விட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் தோன்றி கல­வ­ரங்கள் உரு­வாக இட­ம­ளிக்க முடி­யாது. நான் தம்­புள்­ளையின் மேயர் என்ற வகையில் பள்­ளி­வாசல் பிரச்­சி­னையைத் தீர்த்து வைக்க விரும்­பு­கிறேன்.

இந்தப் பிரச்­சினை பல வரு­டங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அர­சி­யலும் இதற்குக் கார­ண­மாகும். உண்­மையில் தம்­புள்­ளையில் இருக்கும் பள்­ளி­வாசல் ஆரம்­பத்தில் ஒரு கடை­யாக இருந்தே உரு­வா­கி­யுள்­ளது. இப்­போது அதனை பள்­ளி­வா­ச­லென்று கூற­மு­டி­யாது. தம்­புள்ளை நகரில் 7 முஸ்லிம் குடும்­பங்­களே உள்­ளன. ஏனைய முஸ்­லிம்கள் வெளி­யி­டங்­களைச் சேர்ந்­த­வர்கள். தம்­புள்ளை புனித பூமிக்குள் இருந்து அகற்­றப்­படும் முஸ்­லிம்­ குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு­களும் வழங்­கப்­படும்.

நிக்­க­வட்­ட­வன பகு­தியில் பன்­ச­லைக்கு சொந்­த­மான காணியில் எந்­த­ளவு வேண்­டு­மென்­றாலும் வழங்க முடியும். பள்­ளி­வா­சலை தாம் விரும்­பி­ய­வாறு நிர்­மா­ணித்துக் கொள்­ள­மு­டியும். புனித பூமிக்குள் பள்­ளி­வாசல் இருப்­பதால் பிரச்­சி­னைகள் உரு­வா­கு­வதை நான் விரும்­ப­வில்லை.

இந்­தப்­பி­ரச்­சி­னைக்கு எனது பத­விக்­கா­லத்தில் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கவே பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி வரு­கின்றேன் என்றார்.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் எம்.ஐ.எம். கியாஸை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார். தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு காணி ஒதுக்­கித்­த­ரு­வ­தாகக் கூறப்­படும் நிக்­க­வட்­ட­வன பகுதி தம்­புள்­ளை­யி­லி­ருந்து 18 மைல்­க­ளுக்கு அப்பால் இருக்­கி­றது, அங்கு தற்­போது ஜும்ஆ பள்­ளி­யொன்றும் இயங்கி வரு­கி­றது. அப்­ப­கு­தியில் சுமார் 600 முஸ்லிம் குடும்­பங்கள் இருக்­கின்­றன.

தம்­புள்­ளை­யி­லி­ருந்து 18 கிலோ­மீற்­றர்­க­ளுக்­கப்பால் பள்­ளி­வா­சலை நகர்த்­து­வது நியா­ய­மற்­றது. இறு­தி­யாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் காலத்தில் புனித பூமி எல்­லைக்குள் 20 பர்ச் காணி ஒதுக்­கப்­பட்டு அதுவும் இழு­ப­றி­நி­லையில் இருந்­தது என்றார்.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரங்கிரி ரஜ மகா விகாரையின் தலைமை குரு இதன் பின்னணியில் இருந்தார். அன்றிலிருந்து இதுவரை தம்புள்ளை பள்ளிவாசல்  விவகாரம் இழுபறிநிலையில் இருக்கிறது. பள்ளிவாசல் புனித பூமியில் இருக்கக் கூடாது அப்புறப்படுத்தப்பட வேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.