நாட்டில் 1299 மரண தண்டனை கைதிகள்

0 658

2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை உறு­தி­யாக மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட மற்றும் மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு மேன்­மு­றை­யீடு செய்­துள்ள 1299 கைதிகள் நாட்டின் சிறைச்­சா­லை­களில் இருப்­ப­தாக நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சு கூறி­யுள்­ளது.

அவர்­களில் 1215 ஆண் கைதி­களும் 84 பெண் கைதி­களும் இருக்­கின்­றார்கள் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொத்­த­மாக மரண தண்­டனை விதிக்­கப்­பட்டுள்ள 1299 கைதி­களுள் 789 ஆண் கைதி­களும் 34 பெண் கைதி­களும் தமது தண்­ட­னைக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உறு­தி­யாக மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதிகள் 476 பேர் இருப்­ப­தா­கவும், அவர்­களில் 426 பேர் ஆண்கள் என்றும் 50 பேர் பெண்கள் என்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.