பழைய முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்

கட்சித் தலைவர்கள் தீர்மானம் என்கிறார் கிரியெல்ல

0 762

எல்லை நிர்­ணய செயற்­பா­டு­களில் முரண்­பா­டுகள் இருப்­பதன் கார­ணத்­தினால் பழைய முறையில் தேர்­தலை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே எந்­த­வொரு தேர்­த­லுக்கு முகம்­கொ­டுப்­ப­தற்கும் நாங்கள் தயா­ரா­கவே இருக்­கின்றோம்  என்று சபை முதல்­வரும்  அமைச்­ச­ரு­மான லக்‌ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.  மாகாண சபை தேர்­த­லுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை  தொடர்­பாக பிர­தமர் தலை­மையில் அமைக்­கப்­பட்­டுள்ள மீளாய்வுக் குழுவின் அறிக்­கையின் தாமதம் தொடர்­பாக எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தினேஷ் குண­வர்­த­ன­ நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் கேள்­வி­ எழுப்பினார். இதனைத் தொடர்ந்து  சபையில் எழுந்த வாத விவா­தங்­களின் போது எதிர்க்­கட்­சி­யினர்,  அர­சாங்கம் தேர்­த­லுக்கு அஞ்­சு­வ­தாக கருத்­துக்­களை முன்­வைத்த நிலையில் அது தொடர்­பாக பதிலளித்த  போதே சபை முதல்வர்  லக்‌ஷ்மன் கிரி­யெல்ல இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எந்த தேர்­த­லுக்கும் நாங்கள் அஞ்­ச­வில்லை, நாங்கள் தேர்­த­லுக்கு எதிர்ப்­பு­மில்லை. எந்த தேர்­த­லாக இருந்­தாலும் அதற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம். ஜனா­தி­பதி தேர்­த­லுக்கும் தயா­ரா­கவே இருக்­கின்றோம். இதே­வேளை, மாகாண சபை தேர்­தலை பழைய முறை­மையில் நடத்­து­வ­தற்கு சகல கட்­சி­களும் விருப்பம் தெரி­வித்­துள்­ளன.

கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் நிமல் சிறி­பா­லடி சில்வா இதனை முன்வைத்தபோது அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நாங்களும் அதற்கு விருப்பம் தெரிவிக்கின்றோம் என தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.