கஷ்டப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படும்

நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0 739

நாடெங்கும் பர­வ­லாக காணப்­படும் சமூக நீர் வழங்கல் கருத்­திட்­டங்­களை பலப்­ப­டுத்தி கஷ்டப் பிர­தே­சத்தில் வாழும் மக்­க­ளுக்கு சுத்­த­மான குடி­நீரை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும், சக­ல­ருக்கும் தூய குடிநீர் என்னும் நிலை­பே­றான அபி­வி­ருத்­தியை அடை­வ­தற்கும் துரித நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்­க­ளத்தை பலப்­ப­டுத்தி கஷ்டப் பிர­தே­சங்­களில் அதன் சேவையை பர­வ­லாக்கும் நோக்கில் உலக வங்­கியின் உத­வி­யுடன் அத்­தி­ணைக்­க­ளத்தின் வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வைபத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார்.

இவ் வைப­வத்தின் போது 25 மாவட்­டங்­களில் பணி புரியும் 50 அதி­கா­ரி­க­ளுக்கு மோட்டார் சைக்­கிள்கள் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டன. ஒவ்­வொரு மோட்டார் சைக்­கிள்­களும் தலா 2 இலட்­சத்து 25 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யு­டை­ய­வை­யாகும்.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,  தேசிய நீர் வழங்கல் திணைக்­களம் எமது அமைச்சின் கீழ் செயற்­பட்டு வரும் ஒரு நிறு­வ­ன­மாகும். அதனை மேலும் வளப்­ப­டுத்தி சமூ­கத்­திற்கு பர­வ­லான சேவையை வழங்­கு­வ­தற்கு வச­தி­யாக மாவட்ட அலு­வ­ல­கங்­களை அபி­வி­ருத்தி செய்து வரு­கிறோம். மேலும் இத் திணைக்­க­ளத்தின் மூலம் கிராம மட்­டத்தில் செயற்­படும் சமூக நீர் வழங்கல் அமைப்­பு­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­காக தொடர்ந்தும் பல­வித நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

நாடு பூரா­கவும் சுமார் 6000 சமூக நீர் வழங்கல் திட்­டங்கள் செயற்­பட்டு வந்த போதிலும், கோடை காலங்­களில் சில பகு­தி­களில் நீர் மூலங்கள் நீர் பற்­றாக்­குறை கார­ண­மாக செய­லற்று போவ­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.  சக­ல­ருக்கும் சுத்­த­மான குடி­நீரை பெற்றுக் கொடுக்கும் மிலே­னியம் அபி­வி­ருத்தி இலக்கை அடை­வ­தற்கு இக்­க­ருத்­திட்­டங்­களை பலப்­ப­டுத்­து­வதன் மூலம் அதனைச் சாத்­தி­ய­

மா­க்கலாம் என நினைக்­கின்றேன். மேலும், எமது பிராந்­திய அலு­வ­ல­கங்­களுக்கு வாகன வச­தி­களை பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­கவும் திரைசேறி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறேன்.

மேலும், சமூக நீர் வழங்கல் கருத்­திட்­டங்­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபையின் மூலம் தொழில்­நுட்பம் மற்றும் ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொடுக்­கவும் நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறேன்.

பாரிய குடிநீர் விநி­யோக திட்­டங்­க­ளுக்கு உட்­ப­டாத பிர­தே­சங்­களை இனங்­கண்டு கஷ்டப் பிர­தேச மக்­களின் அவ­லங்­களை கவ­னத்­திற்­கொண்டு சமூக நீர் வழங்கல் அமைப்­பு­களை பலப்­ப­டுத்­து­வதன் மூலம் இந்நீர் வழங்கல் திட்­டங்­களை விரி­வு­ப­டுத்தி வரு­கின்றோம் என்றார்.

இந் நிகழ்வில் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் இரா­ஜாங்க அமைச்சர் லக்கி ஜய­வர்­தன, பாரா­ளு­மன்ற உறுப்பினர் எஸ்.எம்.தௌபீக், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன,அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல்,  உலக வங்கி கருத்திட்டத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் எம்.யூ.கே.ரணதுங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.