கஷோக்ஜி கொலையின் முக்கிய சந்தேக நபரின் இருப்பிடம் பற்றி தெரியாது

சவூதி தெரிவிப்பு

0 661

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானின் முக்­கிய உத­வி­யா­ள­ரான சௌத் அல்-­கஹ்­தானி எங்­கி­ருக்­கிறார் என்­பது தொடர்­பான தக­வலை வழங்க சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் மறுத்து வரு­வ­தாக வொஷிங்டன் போஸ்ட் தெரி­வித்­துள்­ளது.

சவூதி அரே­பிய ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி கொடூ­ர­மாகக் கொலை செய்­யப்­ப­டமை தொடர்­பான தகவல் வெளிச்­சத்­திற்கு வந்து சில நாட்­களின் பின்னர் கடந்த ஒக்­டோபர் மாதம் அல்-­கஹ்­தானி பதவி நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்தார்.

அவர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், அவ­ருக்கு நாட்டை விட்டு வெளி­யேறத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கடந்த நவம்பர் மாதம் சவூதி அரே­பியா உறு­திப்­ப­டுத்­தி­யது. அதன் பின்னர் இந்த சம்­பவம் தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எவ்­வித தக­வல்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என வொஷிங்டன் போஸ்ட் குறிப்­பிட்­டுள்­ளது.

கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் 02 ஆம் திகதி இஸ்­தான்­பூ­லி­லுள்ள சவூதி அரே­பிய துணைத் தூத­ர­கத்­தினுள் வைத்து சவூதி அரே­பிய ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி கொடூரக் கொலையில் சௌத் அல்-­கஹ்­தானி முக்­கிய பங்கு வகித்­த­தாக வழக்­க­றி­ஞர்கள் குற்­றம்­சாட்­டினர். இக்­கொலை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் தடை விதிக்­கப்­பட்­டுள்ள 17 பேருள் இவரும் ஒரு­வ­ராவார்.

ஜமால் கஷோக்ஜி படு­கொலைத் திட்டம் தொடர்பில் சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மா­னுக்கு எதுவும் தெரி­யாது என சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் தெரி­வித்­த­தாக வொஷிங்டன் போஸ்ட் குறிப்­பிட்­டுள்­ளது.

விட­யத்தின் தீவி­ரத்­தன்­மை­யினைக் கருத்­திற்­கொண்டு கசோக்­ஜியின் கொலை­யா­ளி­களை நீதியின் முன் நிறுத்­துதல் என்ற வகையில் கஹ்­தானி விட­யத்தில் சவூதி அரே­பியா எவ்­வாறு நடந்­து­கொள்­கின்­றது என அமெ­ரிக்­காவும் மேற்கு நாடு­களும் உற்­று­நோக்கி வரு­வ­தா­கவும் அப் பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.

கொலைத் திட்டம், திட்­ட­மிட்டு சிக்­க­வைக்­கப்­பட்­டாரா என்­பன உள்­ளிட்ட கஹ்­தா­னியின் சம்­பந்தம் தொடர்பில் விடை­ய­ளிக்­கப்­பட வேண்­டிய பல கேள்­விகள் உள்­ளன.

கஹ்­தானி சம்­பந்­த­மான தக­வல்கள் எதுவும் வெளி­வ­ரா­ம­லி­ருப்­பது சவூதி அரே­பி­யாவின் இயல்­பான செயற்­பா­டே­யாகும். பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மானை இக் கொலைக் குற்­றச்­சாட்­டி­லி­ருந்து காப்­பாற்­று­வ­தற்­கான தந்­தி­ரமே இது­வாகும் என வொஷிங்­ட­னி­லுள்ள அரபு மத்­திய நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலீல் ஜஹ்ஷன் தெரி­வித்தார்

சவூதி அரே­பி­யா­வி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கப்­பட்ட அதன் கொள்கை இதுதான் என அயர்­லாந்­தி­லுள்ள சவூதி அரே­பிய மனித உரிமைச் செயற்­பாட்­டா­ள­ரான அப்துல் அஸீஸ் அல்­மொ­ஐயாட் தெரி­வித்தார்.

அகிம்­சை­வா­தி­க­ளான மாற்­றுக்­க­ருத்­து­டை­ய­வர்கள் அர­சாங்­கத்தில் சில சீர்­தி­ருத்­தங்­களை செய்­யு­மாறு கோரி­ய­போது அவர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை வழங்­கப்­பட்­டது எனவும் அவர் தெரி­வித்தார்.

அவர்­க­ளுக்கு சீர்­தி­ருத்­த­வா­திகள் எவரும் தேவை­யில்லை. இதுதான் அவர்கள் மாற்­றுக்­க­ருத்­துக்­க­ளையும், மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்­திற்­கான கோரிக்­கை­க­ளையும் கையாளும் லட்­சணம் எனத் தெரி­வித்த அல்­மொ­ஐயாட், மொஹமட் பின் சல்மான் தனது அதி­கா­ரத்­திற்கு பாதிப்பு ஏற்­பட்­டு­விடும் என்­பதால் கொலை­கா­ரர்­களை தண்­டிக்க முன்­வ­ர­மாட்டார். கொலைச் சூத்­தி­ர­தா­ரிகள் ஒரு­போதும் நீதி­யின்முன் நிறுத்­தப்­ப­ட­மாட்­டார்கள் எனவும் தெரி­வித்தார்.

சவூதி அரே­பி­யாவில் சிறு­தொ­கை­யா­னோரே அதி­கா­ரங்­களை தம்­வசம் வைத்­துக்­கொண்­டுள்­ளனர். அந் நாட்டு மக்கள் உரி­மை­க­ளுக்­காகப் போரா­டு­கின்­ற­போது சிறையில் அடைக்­கப்­ப­டு­கின்­றனர்.

எனினும், மொஹமட் பின் சல்­மானை சூழ­வுள்ள வட்­டத்­தி­ன­ருக்கு எவ்­வித பாதிப்­புக்­களும் ஏற்­ப­டாது. அவர்கள் பெரும் பணக்­கா­ரர்கள், அதீத அதி­கா­ர­மிக்­க­வர்கள், சவூதி அரேபியாவின் சட்டத்திற்கு அல்லது சர்வதேச சட்டத்திற்கு தாம் மேம்பட்டவர்கள் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஊடகவியலாளர் கஷோக்ஜியின் கொலைக்கு உத்தரவிட்ட தாக சீ.ஐ.ஏ. முடிவாக கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது.எனினும் மொஹமட் பின் சல்மானுக்கு கஷோக்ஜி கொலையுடன் எவ்வித சம்பந்தமும் இல்லை என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்தது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.