போதைவஸ்த்தின் கேந்திர நிலையாக உருவெடுத்திருக்கும் அபாயத்தில் எமது நாடு!

0 966
  • எம்.எப்.எம். இக்பால்
    யாழ்ப்பாணம்

இலங்கை வர­லாற்றில் சுங்­கப்­பி­ரிவு மற்றும் பொலிஸ் போதைத்­த­டுப்பு பிரி­வி­னரால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அன்று ஒரு­கொ­ட­வத்த பகு­தியில் கைப்­பற்­றப்­பட்ட 261கிலோ நிறை­யு­டைய தொகையே இலங்­கையில் மீட்­கப்­பட்ட அதி­கூ­டிய தொகையைக் கொண்ட போதைப் பொரு­ளாகக் காணப்­பட்­டது. இதனை மிஞ்­சிய நிலையில் கடந்த திங்­கட்­கி­ழமை (31.12.2018) அன்று மீட்­கப்­பட்ட 278 கிலோ நிறை­யு­டைய 336 கோடி ரூபா பெறு­மதி வாய்ந்த போதை­வஸ்து தொகையே இலங்­கையில் இருந்து மீட்­கப்­பட்ட அதி­கூ­டிய தொகை­யாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். உலகில் போதை­வஸ்தின் கேந்­திர நிலை­ய­மாக உரு­வெ­டுத்­தி­ருக்கும் அபா­யத்தில் எமது நாடு உள்­ள­தா? என சமூக ஆர்­வ­லர்கள் கருத்துத் தெரி­விக்­கின்­றனர்.

போதைப்­பொருள் தடுப்­புப்­பி­ரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளைத் தள­பதி எம்.ஆர்.லத்தீப் அவர்­க­ளது நேரடிக் கட்­டுப்­பாட்டில் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்­சீவ மெத­வத்த அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சமிந்த தன­பால ஆகி­யோரின் வழி­ந­டத்­தலில் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் லூட­வைட்டின் கீழ் இயங்­கிய சிறப்புக் குழு அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன், போதைப்­பொருள் விநி­யோக மத்­திய நிலை­ய­மாக இயங்­கிய பாது­காப்பு இல்லம் என கரு­தப்­படும் தெகி­வளை, கவ்­டான வீதி, அத்­தி­டிய பகு­தி­யி­லுள்ள சொகுசு வீடொன்றை சுற்றி வளைத்து 278 கிலோ போதை­வஸ்தை கைப்­பற்­றினர். போதை­வஸ்து தடுப்பு பிரிவில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அவ­ச­ர­மாக இயங்கி செயல்­பட்­டது பாராட்­டத்­தக்க விட­ய­மாகும்.

போதை­வஸ்து கடத்­தலை தடுப்­ப­தற்கு பொது­மக்­க­ளா­கிய எங்­க­ளு­டைய ஒத்­து­ழைப்பும் அவ­சியம். போதை­வஸ்து கடத்தல், வியா­பாரம் தொடர்­பான தக­வல்­களை நேர­டி­யா­கவே ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­விக்­கலாம். 1919 தொலை­பேசி இலக்­கத்­தி­னூ­டாக பொது­மக்கள் தக­வல்­களை ஜனா­தி­ப­திக்கு வழங்கி எமது நாட்டை போதை­வஸ்தின் அழி­வி­லி­ருந்து பாது­காப்போம்.

பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்த இர­க­சிய தகவல் ஒன்றின் மூல­மா­கவே கல்­கிசை ரெம்லஸ் வீதியில் உள்ள கட்­டிடத் தொகுதி ஒன்றில் 4ஆம் மாடியில் வைத்து பங்­க­ளாதேஷ் பிரஜை ஒருவர் 9 கிலோ ஹெரோ­யி­னுடன் கைது செய்­யப்­பட்டார். அந்தப் பிரஜை கைது­செய்­யப்­பட்­டதும் மேற்­கொண்ட சிறப்பு விசா­ர­ணை­களின் போது அத்­தி­டிய பகு­தியில் உள்ள சொகுசு வீட்டை சுற்றி வளைத்­தனர். அங்கு வர­லாற்றில் மிகப் பெரிய தொகை­யான ஹெரோயின் போதைப்­பொ­ருளும் 7.5 கோடிப் பெறு­ம­தி­யான கொக்கெய்ன் போதைப் பொரு­ளையும் கைப்­பற்­றினர். சொகுசு வீட்டில் மேலும் ஒரு பங்­க­ளாதேஷ் பிரஜை கைது செய்­யப்­பட்டார்

உட­ன­டி­யாக போதை­வஸ்து ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்­டத்­துடன் தொடர்­பான இலங்கை சுங்கத் திணைக்­களம், போதை­வஸ்து ஒழிப்பு தொடர்­பான தேசிய அதி­கார சபை, குற்­றத்­த­டுப்பு பொலிஸ் பிரிவு உட்­பட அரச நிறு­வ­னங்­களின் உயர் அதி­கா­ரி­களும், மற்றும் பத்­தி­ரிகை நிறு­வ­னங்­களின் முக்­கிய பிர­தி­நி­தி­களும் போதை­வஸ்து பாவ­னையை தடுப்­ப­தற்­கு­ரிய ஆலோ­ச­னை­களை அவ­ச­ர­மாக கூடி ஆலோ­சித்தல் வேண்டும்

போதை­வஸ்து பாவ­னை­யையும் நாட்­டிற்குள் கடத்தி வரப்­படும் போதை வஸ்­தையும் தடுப்­பது பற்றி ஆராய்வோம்.

போதைப் பொருட்கள் பண்­டைக்­காலம் முதல் பாவ­னையில் இருந்து வந்­துள்­ளன. அபின், கஞ்­சா, கள்­ளு, சாரா­யம், கசிப்­பு, பீடி, சிக­ரெட், சுருட்டு என்­பன மக்­களால் பாவிக்­கப்­பட்டு வந்­தன. விஞ்­ஞான வளர்ச்சி கார­ண­மாக பண்­டைக்­கால போதை­வஸ்­துக்கள் நவீன உரு­விலும் இல­கு­வான தன்­மை­யிலும் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. மிகச் சிறி­ய­ளவு போதை­வஸ்தை பாவிப்­பதன் மூலம் அதி­க­ளவு போதை தரக் கூடி­ய­தாக தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக பத்து கிராம் ஹெரோ­யினை சுமார் 2,500 பேர் வரையில் பாவித்து போதை ஏற்றிக் கொள்ள முடியும். மேலும், இக்­கா­லத்து போதை­வஸ்­துக்கள் இல­கு­வாக கடத்­தவும் பரி­மாற்றம் செய்­யவும் வாய்ப்­பாக அமைந்­துள்­ளன.

நவீன உலகில் பண்டைக் காலத்து போதை­வஸ்­துக்கள் மாதிரி அல்­லாது மேற்­கத்­தேய நாடு­களால் ஹெரோ­யின், கொகேய்ன், கோடீ, மோர்­பீன், கன­பிஸ், மர்­ஜு­வா­னா, ஹஸீஸ் போன்ற நவீன போதை­வஸ்­துக்­களும் மற்றும் மாத்­திரை வடிவில் தயா­ரிக்­கப்­படும் எல்.எஸ்.டி. தூக்க மாத்­தி­ரை­களும் சர்­வ­தேச ரீதியில் பல நாடு­க­ளுக்கும் கடத்­தப்­ப­டு­கின்­றன. உலகில் சில நாடு­களின் பொரு­ளா­தாரம் போதை­வஸ்­துக்கள் வர்த்­த­கத்­திலே தங்­கி­யுள்­ளது. குறிப்­பாக பெரு, வெனி­சூ­லா, கொலம்­பியா ஆகிய லத்தீன் அமெ­ரிக்க நாடு­களை குறிப்­பி­டலாம்.

தீவிர போதை­வஸ்து பாவ­னை­யா­ளர்­க­ளி­டையே ஊசி மூலம் போதை பொருளை உடலில் செலுத்திக் கொள்ளும் பழக்­கமும் உள்­ளது. இத்­த­கைய போதை­வஸ்து பாவ­னை­யா­ளர்­க­ளி­டையே இல­கு­வாக எய்ட்ஸ் வைரஸ் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்­ப­டு­கி­றது. அமெ­ரிக்­காவில் எய்ட்ஸ் நோயா­ளர்­களில் 26 சத­வீ­த­மானோர் இத்­த­கை­ய­வர்­களே என ஆய்­வுகள் குறிப்­பி­டு­கின்­றன.

இளை­ஞர்கள் குறுக்கு வழியில் இன்பம் அனு­ப­விக்க போதைப் பொருட்­களை உட்­கொள்­கின்­றனர். இலங்­கையில் தற்­போது லட்­சக்­க­ணக்­கானோர் போதை­வஸ்­துக்கு அடி­மை­யாக உள்­ளனர் என்று ஒரு தகவல் தெரி­விக்­கின்­றது.

போதை­வஸ்து பாவனை உலகை நீண்­ட­கா­ல­மாக அச்­சு­றுத்தி வரு­கின்­றது. இவற்றைப் பாவிப்­பதால் மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு உட்­ப­டு­வ­தோடு தனது குடும்­பத்­துக்கு கெட்ட பெயர் உண்­டாக்­கு­வதும் பிற­ருக்கு தீங்கு விளை­விப்­ப­வ­ரா­கவும் மாறு­கின்­றனர்.

இலங்­கையின் திறந்த பொரு­ளா­தார கொள்­கை, உல்­லாசப் பய­ணி­களின் வருகை என்­ப­ன­வற்றால் நவீன போதை­வஸ்­துக்கள் நாட்­டினுள் பிர­வே­சிக்க வழி­வ­குத்­தன. இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் நவீன போதை­வஸ்­துக்கள் 1980 ஆம் ஆண்­ட­ளவில் பரவத் தொடங்­கி­ன. இலங்­கையில் முத­லா­வது ஹெரோயின் விற்­ப­னை­யாளர் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி 270 கிராம் ஹெரோ­யி­னுடன் பேரு­வ­ளையில் கைது செய்­யப்­பட்டார். போதை­வஸ்து பொருட்கள் பாவிப்­ப­து, கடத்­து­வ­து, வைத்­தி­ருப்­பது போன்­ற­வற்­றுக்கு எதி­ராக கடு­மை­யான சட்­டங்கள் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அநே­க­மான நாடு­களில் இவற்­றுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கை­யிலும் போதை­வஸ்து கடத்­தலில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு மரண தண்­டனை அளிப்­பதன் மூலமே போதை­வஸ்து பாவிப்­ப­தனால் ஏற்­படும் தீங்­கு­களில் இருந்து எமது நாட்டு சமு­தா­யத்தை பாது­காக்க முடியும்.

குடும்ப வாழ்வை சீர­ழிக்கும் நாட்டை குட்டிச் சுவ­ராக்கும் போதை­வஸ்து பாவ­னையை வேரோடு களைய ஒவ்­வொ­ரு­வரும் திட­சங்­கற்பம் பூணுதல் அவ­சியம். இதற்­காக போதைப் பொருள் கட்­டுப்­பாட்டுச் சபை போதைப் பொருள் பாவ­னைக்கு எதி­ரான  விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதில் 1984 ஆம் ஆண்டு தொடக்கம் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­கி­றது. நாம் ஒவ்­வொ­ரு­வரும் போதைப் பொருள் கட்­டுப்­பாட்டுச் சபைக்கு ஒத்­து­ழைப்பு நல்­குதல் அவ­சியம். போதை­வஸ்து பாவிப்­ப­வர்­கள், விற்­பனை செய்­ப­வர்­கள், நாட்­டுக்குள் கடத்தி வரு­ப­வர்கள் யாராக இருந்­தாலும் எமக்குத் தெரிந்­தி­ருக்கும் பட்­சத்தில் போதைப் பொருள் கட்­டுப்­பாட்டுச் சபைக்கு தெரி­விப்­பது நாம் எமது நாட்­டுக்கும் எமது சமு­தா­யத்­துக்கும் செய்யும் பேரு­த­வி­யாகும்.

போதை­வஸ்து வியா­பாரம் தொடர்­பான தக­வல்­களை நேர­டி­யாக ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிட்­டி­யுள்­ளது. அதா­வது 1919 தொலை­பேசி இலக்­கத்­தி­னூ­டாக பொது­மக்கள் தக­வல்­களை ஜனா­தி­ப­திக்கு வழங்க முடியும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

“போதை­வஸ்து பாவ­னைக்கு அடி­மை­யா­னோரை அதி­லி­ருந்து மீட்­டெ­டுப்­ப­து, புதி­தாக போதை­வஸ்து பாவ­னைக்கு அடி­மைப்­ப­டாமல் இளம் சந்­த­தி­யி­னரை பாது­காப்­பது” என்ற இலக்­கி­லேயே அர­சாங்கம் பல வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றமை பாராட்­டத்­தக்­கது. அதே­நேரம் இன்று இலங்­கையில் போதை­வஸ்து பாவிப்­ப­து, விற்­பனை செய்­வ­து, நாட்­டிற்குள் கொண்டு வரு­வது ஆகிய நடை­மு­றையில் உள்ள சட்­டங்­களைப் பொறுத்­த­வ­ரையில் தண்­டனை திருப்­தி­க­ர­மாக இல்­லை,­ இலங்­கையில் போதைப் பொருள் தடுப்பு நட­வ­டிக்­கை­களின் கீழ் திடீர் சுற்­றி­வ­ளைப்­புகள் இடம்­பெ­று­கின்­றன. பல ஆயிரம் கிலோ கஞ்­சா, ஹெரோயின் போதை­வஸ்­துக்கள் கைப்­பற்­றப்­பட்டு தீயிட்டு கொளுத்­தப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­வது பாராட்­டத்­தக்­கது.

போதை­வஸ்து பாவ­னையை இல்­லா­தொ­ழிக்க சில நாடு­களால் போதை குறைந்த சில பொருட்­களை அறி­மு­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. போதை­வஸ்து பாவ­னையை போதைப் பொருளை வைத்தே தடுக்க முயற்­சிப்­பது முறை­யான தீர்­வல்ல என சமூக ஆர்­வ­லர்கள் எதிர்ப்பு தெரி­விக்­கின்­றனர்.

போதை­வஸ்து பாவ­னை­யா­னது பொது­வாக சிறுவர் பரா­யத்தில் ஏற்­பட்­டு­வி­டு­வ­தாக சில அறிக்­கைகள் குறிப்­பி­டு­கின்­றன. பாட­சாலைக் காலத்தில் தீய நண்­பர்­களின் சக­வாசம் கார­ண­மாக இது ஏற்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. உதா­ர­ண­மாக பாட­சா­லையில் ஆறாம் ஆண்டு மாண­வர்கள் ஆறாம் ஆண்டு மாண­வர்­க­ளு­ட­னேயே பழ­குதல் வேண்டும். ஏழாம் ஆண்டு மாண­வர்கள் ஏழாம் ஆண்டு மாண­வர்­க­ளு­ட­னேயே பழக வேண்டும். வித்­தி­யா­ச­மாக வேறு ஆண்டு மாண­வர்­க­ளுடன் நண்­பர்­க­ளாக பழ­கு­வது நல்­ல­தல்ல என்று மேற்­கத்­தேய பேரா­சி­ரியர் ஒருவர் தெரி­விக்­கிறார். அப்­படிப் பழ­கும்­போ­துதான் கெட்ட விட­யங்கள் ஏற்­பட வாய்ப்­புகள் உண்டு. இந்த விட­யத்தில் பெற்­றோர்கள் தங்­க­ளது பிள்­ளைகள் சக ஆண்டு மாண­வர்­க­ளுடன் பழ­கு­கி­றார்­களா அல்­லது ஆண்டு கூடிய மாண­வர்­க­ளுடன் பழ­கு­கி­றார்­களா என்­பதை அவ­தா­னிக்க வேண்டும். பாட­சாலைப் பரு­வத்தில் தீய நண்­பர்­களின் சக­வாசம் கார­ண­மாக ஆரம்­பத்தில் புகை பிடித்­தலில் இருந்து போதை­வஸ்து பாவனை வரை வளர்­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. பெற்­றோர்கள் இவ்­வி­ட­யத்தில் தமது பிள்­ளைகள் புகை பிடித்­தல், மது அருந்­து­தல், போதை­வஸ்­துக்கு அடி­மை­யா­குதல் போன்ற விட­யத்தில் தொடர்பில் இருக்­கி­றார்­களா என்­ப­தனை அவ­தா­னித்துக் கொண்டே இருக்க வேண்டும். கெட்ட பழக்­கங்­களை முளை­யி­லேயே கிள்ளி விடு­வது இல­கு­வான காரி­ய­மாகும். பெற்­றோர்கள் தங்­க­ளது பிள்­ளை­களின் மீது மிகுந்த அவ­தானம் இருப்பின் இவ்­வா­றான கெட்ட விட­யங்­களில் இருந்து தங்­க­ளது பிள்­ளை­களை காப்­பாற்ற முடியும். பெற்­றோர்கள் அள­வுக்­க­தி­க­மாக சுதந்­தி­ரமும் பணமும் அளிப்­பதன் மூலமே பிள்­ளைகள் கெடு­வ­தற்கு வாய்ப்பு அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. என­வே, பெற்­றோர்கள் பிள்­ளைகள் மீது மிகுந்த கவனம் செலுத்­துதல் மூலம் இவ்­வா­றான கெட்ட செயல்­களில் இருந்து பிள்­ளை­களை நாட்டின் நற்­பி­ர­ஜை­க­ளாக உரு­வாக்க முடியும்.

போதை­வஸ்து பாவனை இன்று புதிய வடி­வத்தில் மாண­வர்கள் மத்­தியில் பரவி வரு­வதும் சுட்டிக் காட்­டப்­பட்­டுள்­ளது. அதா­வது சில மருந்து வகை­களை மாண­வர்கள் போதைக்­காக பயன்­ப­டுத்தி வரு­வ­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. போதை­வஸ்­துக்­களை பெற்­றுக்­கொள்­வதை விட மருந்து வகை­களை பெற்­றுக்­கொள்­வது எளி­தா­னது என்­ப­தனால் இதன் மூலம் போதையை ஏற்­ப­டுத்த முயற்சி செய்­கி­றார்கள். மருத்­து­வர்­களால் பரிந்­துரை செய்­யப்­படும் ஒக்­சி­கொடின் (OxyContin), விகோடின் (Vicodin) போன்ற மருந்­து­களின் உப­யோகம் கணி­ச­மான அளவில் அதி­க­ரிப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. என­வே, பெற்­றோர்கள் தங்களது பிள்ளைகள் மேற்படி மருந்து வகைகள் அதிகமாக பயன்படுத்துகிறார்களா என்றும் அவதானிக்க வேண்டும்.

தங்களது பிள்ளைகளிடத்தில் தன்னம்பிக்கை குறைதல், படிப்பில் ஆர்வம் குறைதல், விளையாட்டுக்களில் ஆர்வம் குறைதல், சோம்பல், சற்று ஆர்வம் குறைந்த தோற்றம், பெற்றோரிடம் வாக்குவாதம் செய்வது, ஆசிரியரிடம் அதிக வாக்குவாதம் செய்வது காணப்பட்டால் பெற்றோர்கள் கூடிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளேயாயினும் அளவுக்கு மீறி எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியும் என்பதை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் விளக்கமளிக்க வேண்டும்.

தங்களது  பிள்ளைகள் யாராவது போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகி இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவமனை, போதைப் பொருட்கள் அடிமைத்தனத்தை போக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிப்பது முக்கியமானதும் அவசியமானதுமான விடயமாகும்.

போதைவஸ்து பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு முதலாவது அரசாங்கம் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இரண்டாவது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தீய நண்பர்களின் சகவாசத்திலிருந்து பாதுகாத்து அவதானத்துடன் வளர்த்தெடுக்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.