பௌத்தர்களின் கோரிக்கைகளுக்கு ஐ.தே.க. செவிமடுக்க வேண்டும்

பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர்

0 547

சிங்­கள பௌத்த மக்­க­ளின் கோரிக்­கை­களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரி­வித்­துள்ளார்.

கேகாலை  பிர­தே­சத்தில்  இடம்பெற்ற  பொதுமக்கள்  சந்­திப்­பொன்றில் உரை­யாற்றும் போதே  அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அதன் போது  அவர் மேலும் கூறி­ய­தா­வது,

நான் ஒரு  முஸ்லிம். புத்த சம­யத்­திற்கு முன்­னு­ரிமை  வழங்­க­வேண்டும் என்ற  நிலைப்­பாட்டைப் பேணு­வதில்  உறு­தி­யுடன்  இருக்­கிறேன்.  இந்­நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்கு குந்­தகம்  விளை­விக்க நாம் ஒரு  போதும்  இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. எங்கள் மத்­தியில்  குறை­பா­டுகள்  காணப்­ப­டு­வது  போன்று எங்­க­ளி­னது பல தவ­று­களும் உள்­ளன. இங்கு பெரும்­பான்­மை­யாக  வாழும்  சிங்­கள  பௌத்த  மக்­க­ளது கோரிக்­கை­க­ளுக்கு இதற்­கப்­பாலும்  ஈடு செய்து  கொடுப்பதற்கு நாம்  கடமைப்பட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.