மூன்று ஆளுநர்கள் பதவியேற்பு

0 557

வடக்கு உட்­பட மூன்று மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளு­நர்கள்  ஜனா­தி­ப­தியால் நேற்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட வடக்கு, சம்­ப­ர­க­முவ மற்றும் ஊவா மாகாண ஆளு­நர்கள் நேற்று காலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­ப­திக்கு முன்னால் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொண்­டனர். அதன் பிர­காரம் வட­மா­காண ஆளு­ந­ராக இருந்த ரெஜிநோல்ட் குரேக்கு பதி­லாக கலா­நிதி சுரேன் ராகவன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் சப்­ர­க­முவ மாகாண ஆளு­ந­ராக இருந்த நிலுக்கா ஏக்­க­நா­யக்­க­வுக்கு பதி­லாக கலா­நிதி தம்ம திசா­நா­யக்­கவும் ஊவா மாகாண ஆளு­ந­ராக இருந்த ஆரிய பீ. ரெக­வ­வுக்கு பதி­லாக கெபே அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்­ன­கோனும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மேல், கிழக்கு, மத்­திய, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­க­ளுக்கு முறையே புதிய ஆளு­நர்­க­ளாக அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன, சரத் ஏக்­க­நா­யக்க மற்றும் பேசல ஜய­ரத்ன ஆகியோர் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இதே­வேளை, ஒன்­பது மாகா­ணங்­களில் இது­வரை எட்டு மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளு­நர்கள் நிய­மிக்­கப்­ப­டுள்­ள­போதும் தென் மாகா­ணத்­துக்­கான ஆளுநர் இது­வரை நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. ஏற்­க­னவே தென் மாகாண ஆளுநராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை மார்ஷல் பெரேரா பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.