எமக்கு வேண்­டி­யது பத­வி­யல்ல அமைச்­சர்­களின் ஒத்­து­ழைப்பே

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­விப்பு

0 781

அமைச்­சுப்­ப­த­வி­யல்ல அமைச்­சர்­களின் ஒத்­து­ழைப்பே எனது எதிர்­பார்ப்பு என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரி­வித்தார். ஞாயிற்­றுக்­கி­ழமை காலை திரு­கோ­ண­ம­லையில் ஐக்­கிய தேசிய கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் இடம்­பெற்ற  கலந்­து­ரை­யாடல் ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர், மக்­க­ளுக்கு சேவை செய்­யவே எங்­களை மக்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பி­யுள்­ளனர். ஆனால் கடந்த மூன்று வரு­ட­மாக காணப்­பட்ட தேசிய அரசின் மூலம் எங்­களை போன்ற பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் எமது மக்­க­ளுக்கு நாம் நினைத்­ததை போல் சேவை செய்ய முடி­ய­வில்லை.

தற்­போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தனி அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின் ஆத­ர­வா­ளர்­க­ளிடம் பாரிய எதிர்­பார்ப்பு தோன்­றி­யுள்­ளது. அவர்­களின் எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்­யாமல் எம்மால் அடுத்த தேர்­த­லுக்கு அவர்கள் முன் செல்ல முடி­யாது.

இவ்­வாறு கூறி­யதும் நீங்­களும் அமைச்­சுப்­ப­த­வியை எதிர்­பார்­கி­றீர்­களா என ஊட­கங்கள் என்­னிடம் வின­வு­கின்­றனர். 19 ஆவது திருத்த சட்­டத்­தின்­படி அமைச்சர் பிரதி அமைச்­சர்­களின் எண்­ணிக்கை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே நானும் அமைச்சு பதவி கேட்டு தலை­மையை சிர­மத்­துக்கு உள்­ளாக்க விரும்­ப­வில்லை.

ஆனால் முன்­னைய காலத்தை போல் அல்­லாமல் இப்­போது அமைச்­சர்­களின் பூரண ஒத்­து­ழைப்­பையே நான் பிர­த­ம­ரி­டமும் அமைச்­சர்­க­ளி­டமும் கோரி­யுள்ளேன். இவர்­களின் பூரண ஒத்­து­ழைப்பு எனக்கு கிடைப்பின் பிரதி அமைச்­சர்­களை விட சிறப்­பாக என்னால் செயல்­பட முடியும்.

ஆகவே இனி வரும் காலங்­களில் எமது கட்சி ஆத­ர­வா­ளர்­களின் எதிர்­பார்ப்பை படிப்­ப­டி­யாக நிவர்த்தி செய்ய எண்­ணி­யுள்ளேன். அவ்­வாறு அமைச்­சர்­களின் ஒத்­து­ழைப்பு கிடைக்­காமல் எமது ஆத­ர­வா­ளர்­களின் எதிர்­பார்ப்பு நிறை­வே­றாமல் போனால் நானும் அர­சியல் ரீதி­யாக தீர்­மானம் ஒன்றை மேற்­கொள்ள வேண்டி வரும். ஆனால் அந்த தீர்­மானம் கட்சி மாறும் தீர்­மா­ன­மாக இருக்­காது என்­பதை மட்டும் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன் என தெரி­வித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.