5 ஆவது முறையாகவும் குளோப் விருது

0 737

ஐரோப்­பிய கால்­பந்து விளை­யாட்டின் மிகச்  சிறந்து விளங் கும் கால்­பந்து வீர­ருக்­கான குளோப் கால்­பந்து விருதை ஜுவண்டஸ் அணியின் முன்­கள நட்­சத்­திர வீர­ரான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ தொடர்ச்­சி­யாக 3 ஆவது தட­வை­யா­கவும் தன் வச­மாக்கி  வர­லாற்றில் இடம்­பி­டித்தார்.

ஐரோப்­பிய கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்து தொடர்­களில்  சிறந்து விளங்கும் கால்­பந்து வீரர்­க­ளுக்கு வரு­டந்­தோறும் மிக உய­ரிய குளோப் கால்­பந்து விருது வழங்­கப்­படும். இதை ஐரோப்­பிய கால்­பந்து சம்­மே­ளனம் மற்றும் ஐரோப்­பிய கால்­பந்து வீரர்கள் சங்கம் ஆகி­யன இணைந்து வழங்­கு­கின்­றன.

இந்த நிலையில் 10 ஆவது குளோப் கால்­பந்து விருது வழங்கும் விழா கடந்த 3ஆம் திகதி  ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் இடம்­பெற்­றது.  இம்­முறை சிறந்த வீர­ருக்­கான விரு­துக்­காக பிரான்ஸின் முன்­கள வீரரும், அத்­லெட்­டிகா மெட்­ரிட்டின் முன்­கள வீர­ரு­மான அன்­டோ­னியோ கிரீஸ்மன் , பிரான்ஸின் நட்­சத்­தி­ரமும்,  பரிஸ் செயின்ட் ஜேர்மன் கழக வீர­ரு­மான கிலியன் எம்­பாப்பே மற்றும் போர்த்­துக்கல் நாட்டின் நட்­சத்­தி­ரமும், ஜுவண்டஸ் கழ­கத்தின் முன்­கள வீர­ரு­மான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ  ஆகியோர் பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இதில் வரு­டத்தின் சிறந்த கால்­பந்து வீர­ருக்­கான விருதை 33 வய­தான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ தொடர்ச்­சி­யாக மூன்­றா­வது தட­வை­யா­கவும் சுவீ­க­ரித்து வர­லாற்றில் இடம்­பி­டித்தார். அத்­துடன் இந்த விருதை 5 ஆவது தட­வை­யா­கவும் தட்டிச் சென்ற அவர் இதற்கு முன் 2011, 2014, 2016 மற்றும் 2017 ஆகிய வரு­டங்­களில் இவ்­வி­ருதைப் பெற்றுக் கொண்­டுள்ளார்.

இத­னி­டையே கால்­பந்து ரசி­கர்­களின் மனம் கவர்ந்த வீர­ருக்­கான விரு­தையும் ரொனால்டோ பெற்றுக் கொள்ள, அவ­ரு­டைய முகா­மை­யாளர் ஜோர்ஜ் மெண்டஸ் வரு­டத்தின் சிறந்த முகா­மை­யா­ள­ருக்­கான விரு­தையும் பெற்றுக் கொண்டார்.  மேலும்  கடந்த பரு­வ­கா­லத்தில் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்து தொடரில் ஜுவண்டஸ் அணி­யு­ட­னான போட்­டியில் ரியல் மெட்ரிட் கழகத்திற்காக விளையாடிய ரொனால்டோ அடித்த கோல் (Bicycle Kick) சிறந்த கோலுக்கான விருதுக்காகவும் தெரிவு செய்யப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.