புதிய ஆளு­நர்கள் நிய­மனம் கிழக்­கிற்கு ஹிஸ்­புல்லாஹ்; மேற்­கிற்கு அசாத்­சாலி

0 763

ஐந்து மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளு­நர்கள் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன முன்­னி­லையில் கடந்த வெள்­ளி­யன்று பத­விப்­பி­ர­மாணம் செய்­து கொண்டனர்.

இதன்­போது கிழக்கு மாகாண ஆளு­ந­ராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்வும் மேல்­மா­காண ஆளு­ந­ராக அசாத்­சா­லியும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இது­த­விர, மத்­திய மாகா­ணத்­திற்கு மைத்­தி­ரி­கு­ண­ரத்­னவும் வடமேல் மாகா­ணத்­திற்கு பேசல ஜய­ரத்­னவும் வட­மத்­திய மாகா­ணத்­திற்கு சரத் ஏக்­க­நா­யக்­கவும் ஆளு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்த முன்னாள் அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் முன்னாள் கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் அசாத் சாலி ஆகியோர் ஆளு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டனர். இவர்கள் இன்­றைய தினம் தனது கட­மை­களை பொறுப்­பேற்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, முன்னாள் மத்­திய மாகாண முத­ல­மைச்சர் சரத் ஏக்­க­நா­யக்க வட­மத்­திய மாகா­ணத்­திற்கும் முன்னாள் வட­மத்­திய மாகாண முத­ல­மைச்சர் வடமேல் மாகா­ணத்­திற்கும் ஆளு­ந­ராக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டனர்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மைத்திரி குணரத்ன மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.